Seed Certification
விதை சுத்திகரிப்பு :: முக்கியத்துவம்

விதை சுத்திகரிப்பு

முக்கியத்துவம்

விதை சேமிப்பு கிடங்குகளின் உள்ள விதைக் குவியல்களை சந்தைப்படுத்த தயார் செய்வதே விதை சுத்திகரிப்பு ஆகும். விதையின் விலை மற்றும் தரம் விதை சேமிப்புடன் நேர்மாறு தொடர்புடையதாகவும், விதைச் சான்றளிப்பிற்கு அனுமதியளிக்கப்பட்ட அதிகபட்ச அளவிற்கு மிகாமல் இருக்கவேண்டும்.

சுத்திகரிப்பு செய்யப்படுவதால் விதைக் குவியலின் வேறுபாடுகள் குறுகிவிடும். விதைக் குவியலில் உள்ள வேறுபாடுகளின் கீழ்க்கண்ட காரணிகள்.

  1. மண்ணின் வளம் மற்றும் இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் தன்மையின் வேறுபாடுகள்.
  2. பயிர் மேலாண்மை செயல்பாடுகளில் உள்ள வேறுபாடுகள் (நீர் நிர்வாகம், உர மேலாண்மை போன்றவை)
  3. நாற்றுக்களின் இடு பொருட்களை உபயோகப்படுத்தும் திறன்
  4. நோய் மற்றும் பூச்சி தாக்குதலில் வேறுபாடுகள்
  5. செடியில் காய் அல்லது கனி இருக்கும் பகுதி அல்லது காயினுள் விதை இருக்கும் பகுதி.

விதை சுத்திகரிப்பு கோட்பாடுகள்

சுத்திகரிப்பு முறையானது விதைக் குவியலில் உள்ளப் புற வேறுபாடுகளைக் கொண்டே நிறைவேற்றப்படுகிறது.

புற வேறுபாடுகள்

பொருத்தமான கருவி

விதை அளவு - சிறியது முதல் பெரியது

காற்றை தடுத்துத் தூய்மைப்படுத்தும் மற்றும்  தரம் பிரிக்கும் கருவி

அடர்த்தி நிறைவடையாத முதிர்ச்சி அடையாத விதைகள் முதல் நன்கு முதிர்ந்த எடைக் குறைந்த அல்லது அதிக எடையுள்ளவை.

ஒப்பு அடர்த்தி பிரிப்பான்

வடிவம் - வட்டம் முதல் நீள்வட்டம் வரை மற்றும் பிற வடிவங்கள்

சுருளி பிரிப்பான்

மேற்பரப்பின் நய அமைப்பு மிருதுவானது முதல் சுருங்கியது மற்றும் கரடு முரடானது வரை

உருளை ஆலை / உலுக்கு ஆலை

விதையின் நிறம் - மங்கிய நிறம் முதல் அடர்வான நிறம்

மிண்ணனு நிறம் பிரிப்பான்

விதையின் கடத்தும் திறன் - குறைந்தது முதல் அதிகம் வரை

மிண்ணனு பிரிப்பான்

விதை சுத்திகரிப்பு பணியின் தேவைகள்

  1. முழுமையான பிரித்தல் இருக்கவேண்டும்.
  2. குறைந்த விதை இழப்பு
  3. எந்த ஒரு இரகத்தின் விதையும் தரம் உயர்த்துதல்
  4. அதிகத் திறன் இருக்கவேண்டும்.
  5. குறைவான தேவை இருக்கவேண்டும்.

விதை சுத்திகரிப்பின் போது களையப்படும் பொருட்கள்

  1. உயிரற்ற பொருட்கள்
  2. சாதாரண களை விதைகள்
  3. நச்சு களை விதைகள்
  4. வீண் விதைகள்
  5. சிதைந்த விதைகள்
  6. பிறப் பயிர்களின் விதைகள்
  7. பிற இரக விதைகள்
  8. அளவு குறைந்த விதைகள்

விதை சுத்திகரிப்பு பணியின் செயல் வரிசை

பணியின் செயல்வரிசை விதையின் தன்மைகளான அளவு, வடிவம், எடை, நீளம், மேல் அமைப்பு, நிறம் மற்றும் ஈரப்பதம் ஆகியவற்றை கொண்டே அமைகிறது. விதைகளின் அமைப்பை கொண்டே சுத்திகரிப்பு பணியின் செயல்திட்டம் வகுக்கப்படும். அதற்கேற்றாற் போல் கருவிகளும் கையாளப்படும். அப்பணியின் நிலைகள்.

  1. உலர வைத்தல்
  2. பெறுதல்
  3. முன் தூய்மை  செய்தல்
  4. நிலைப்படுத்துதல்
  5. தூய்மைப்படுத்துதல்
  6. பிரித்தல் (அ) தரம் ஏற்றுதல்
  7. நேர்த்தி  (உலர்தல்)
  8. எடையிடுதல்
  9. பையிலிடுதல்
  10. சேமித்தல் (அ) கப்பலேற்றுதல்

அறுவடைக்குப்பின் சுத்திகரிப்பின் போது களையப்படும் பொருட்களின் செயல் வழிப்படம்.
அறுவடை செய்யப்பட்ட விதைகள்
 


கதிரடித்தல், ஓடு நீக்குதல், உலர்த்துதல்
 

 


உயிரற்ற பொருட்கள்                                              சாதாரண களை விதைகள்
 


நச்சுக்களை விதைகள்                                                      பிற பயிர் விதைகள்
 


வீண் விதைகள்                                       பிற இரக விதைகள்

சந்தைக்கு ஏற்ற விதை

  1. தூய்மையானது
  2. தரம் பிரித்தது
  3. நேர்த்தி செய்யப்பட்டது
 


சிதைந்த விதைகள்                                   அளவு குறைந்த விதைகள்

பெறுதல்

    1. விதைகள் வயல்களில் பணி முடிந்த பின் சுத்திகரிப்பு தளங்களுக்கு வந்து சேரும்.

விதை சுத்திகரிப்பு தளங்களில் செய்யப்படும் அடிப்படை செயல்கள்
உலர வைத்தல்               பெறுதல்                 நிலைப்படுத்துதல்
(அ)
முன் தூய்மைப்படுத்துதல்
 



                                தூய்மைபடுத்துதல் மற்றும் தரம் மேம்படுத்துதல்
 

பெருத்த சேமிப்பு
                          
         பையிலிடுதல்

  விதைகளை எடுத்துச் செல்லுதல்

 

          சேமித்தல்

தகவலுக்கு
பேராசிரிய மற்றும் தலைவர்,
விதை மையம்
தமழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம்
கோயமுத்தூர்-641003.
தொலைபேசி எண்:0422-661232.
மின்னஞ்சல்: seedunit@tnau.ac.in
 

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2015.

Fodder Cholam