Seed Certification
விதை சேமிப்பு :: நோக்கம்

விதை சேமிப்பு

விதை சேமிப்பு என்றால் என்ன ?

விதைகள் நடவு செய்யும் காலம் வரை மூலதன அளவில் பாதுகாத்தலே ஆகும்.

விதைச் சேமிப்பின் அவசியம்

விதைகளை அறுவடை செய்தபின் நடவு செய்யும் வரை நிலையில் பராமரித்தலே விதைச் சேமிப்பின் நோக்கம் ஆகும்.
விதைகளை அறுவடை செய்தபின் நடவு செய்யும் வரை நிலையில் பராமரித்தலே விதைச் சேமிப்பின் நோக்கம் ஆகும்.

விதைச் சேமிப்பின் நிலைகள்

விதைகள் வினையியல் அடைந்தது முதல் முளைக்கும் வரை (அ) அவை உபயோகமில்லாமல் உயிரற்ற நிலையில் எறியப்படும் வரை அவைச் சேமிப்பில் உள்ளதாக கருதப்படும்.

விதைச் சேமிக்கும் காலம் கீழ்க்கண்ட நிலைகளாக பிரிக்கலாம்

  1. செடியில் உள்ள சேமிப்பு (வினையியல் முதிர்ச்சி முதல் அறுவடை வரை)
  2. அறுவடைக்குப் பின் சுத்திகரிக்கும வரை கிடங்குகளில் சேமிப்பு
  3. கிடங்குகளில் சேமிப்பு
  4. போக்குவரத்தின் போது சேமிப்பு (இரயில்வே பெட்டிகள், லாரிகள், வண்டிகள், இரயில் ஷெட் போன்றவை)
  5. உபயோகிப்பவர் பண்ணை

முன்னுரை

விதையின் ஈரப்பதம் இழப்பைத் தாங்கிக் கொள்ளும் தன்மையே அதன் வீரியத்தை உலர்ந்த நிலையில் பராமரிக்க உதவுகிறது. சேமிப்பு என்பது தாய் செடியில் விதைகள் வினையியல் முதிர்ச்சி அடைந்தவுடன் ஆரம்பம் ஆகிறது. அறுவடைக்குப் பின் விதைகள் சேமிப்புக் கிடங்கிலோ, போக்குவரத்திலோ விற்பனை நிலையங்களிலோ சேமிக்கப்படுகிறது. விவசாயிகள் பண்டைக் காலத்தில் பண்ணையில் சிறிய அளவில் சேமித்து வைத்திருந்த விதைகள் பயன்படுத்தினர். ஆனால் புதிய கிரக மற்றும் வீரிய இரகங்களின் அறிமுகத்தால் மற்றும் நவீன வேளாண் முறைகளின் அறிமுகத்தால் விதைச் சேமிப்பில் புதிய உத்திகளின் தேவை அதிகரிக்கப்பட்டுவிட்டது.

பண்டைக்கால எளிய முறைகளான விதைகளை உப்பில் வைப்பது, செம்மண் நேர்த்தி போன்றவைகளை இக்கால வேளாண்மையில் நிறைவேற்ற முடியாது, ஏனெனில்

  1. அதிக அளவு விதைகளை சேமிக்கவேண்டும்
  2. இரகங்கள் மற்றும் சிற்றினங்களின் பரிமாற்றம்
  3. பேரினங்களில் பரிமாற்றம்

சேமிக்கப்படும் பொருட்களை பொருத்து சேமிக்கும் முறை வேறுபடுகிறது. இன்றைய காலத்தில் சேமிப்பு முறைகள் சாதாரண கிடங்கு முறை சேமிப்பு முறைகளில் இருந்து உறைந்த நிலை சேமிப்பு மற்றும் மரபணு சேமிப்பு போன்றவை வளர்ந்துள்ளன.

விதைச் சேமிப்பின் நோக்கம்

முதல் நிலை விதைத் தரத்தை அதாவது, முளைப்புத்திறன், புறத்தூய்மை, வீரியம் போன்றவை, சேமிப்புக் காலத்தில் அதற்கு தகுந்த (அ) மேம்பட்ட நிலையில் பராமரிப்பதே விதைச் சேமிப்பின் நோக்கமாகும்.

விதையிலிருந்து செடி முளைக்கும் திறனை ஏற்புடைய அளவில் பராமரிப்பதே விதைச் சேமிப்பின் நோக்கம். இதனை நிறைவேற்றுவதற்கு, விதைகளின் சிதைவைக் குறைத்து ஏற்புடைய அளவில் விதையின் தரத்தை உயர்த்தி தேவைப்படும் காலத்திற்கு பராமரிக்கவேண்டும்.

விதைச் சேமிப்பின் பயன்கள்

விதைச் சேமிப்பு என்பது விதை அறுவடை செய்த காலம் முதல் நடவு செய்யும் காலம் வரை அதிகபட்ச முளைப்புத் திறன் மற்றும் வீரியம் ஆகியவற்றை பராமரித்தலே ஆகும். ஆரோக்கியமான மற்றும் வீரியமுள்ள நாற்றுக்கள் முளைப்பதுடன் அவற்றின் எண்ணிக்கையும் போதுமான அளவு இருக்கவேண்டும். விதைகளைக் கையாளும் ஒவ்வொன்றிற்கும் ஒரு நோக்கம் இருக்கவேண்டும்.

விதைகளை அறுவடை முதல் நடவு வரையில் நல்ல முறையில் புற அமைப்பு மற்றும் வினையியல் நிலைகளை பராமரிப்பதே விதைச் சேமிப்பின் பயன் ஆகும். விதைகளின் அறுவடை மற்றும் நடவின் இடைப்பட்டக் காலத்தில் ஏதாவது ஒரு இடத்தில் சேமித்தல் அவசியமாகும். அறுவடை மற்றும் விதைப்பின் இடைவெளி விதைச் சேமிப்பின் முக்கியக் காரணம் என்றாலும் நீண்டக் காலச் சேமிப்பிற்கு வேறு பல காரணங்களும் உள்ளது.

விதை விற்பனையாளர் அனைத்து விதைகளையும் அதே நடவு காலத்தில் விற்பனை செய்ய இயலாது. சில நேரங்களில் விற்கப்படாத விதைகளை அடுத்த நடவுக் காலம் வரையில் சேமித்து வைக்கும் நிலை உருவாகும். அப்பொழுது சிலப் பயிர் வகைகள் மற்றும் இரகங்களின் விதைகளில் சேமிப்புத் திறன் குறைந்து இருப்பதே முக்கியப் பிரச்சனை ஆகும்.

ஒவ்வொரு நடவுக் காலத்திலும் விதை உற்பத்தியை குறைப்பதற்கு, நீண்ட காலச் சேமிப்பு கையாளப்படுகிறது. குறைந்தபட்சத் தேவையுள்ள இரக விதைகளுக்கு இவ்வகை சேமிப்பு முறையை ஆதார விதை நிலையங்கள் பின்பற்றுகின்றன. விதைத் தூக்கத்திலிருந்து இயற்கையாக விடுபட்டு நல்ல முளைப்புத் திறன் மற்றும் துரிதமான வளர்ச்சி பெற விதைகளை நீண்ட காலம் சேமித்து வைக்கலாம். எக்காரணத்திற்காக சேமித்து வைத்தாலும், விதையின் முளைப்புத் திறன் மற்றும் வளர்ச்சி போதுமான அளவில் பராமரித்தலே முக்கிய நோக்கமாகும்.  ஆதலால் விதை சேமிப்பு வசதிகளும், அதனை நிறைவேற்றும் முறைகளும் இந்த நோக்கினை முனைப்புடன் செயல்படுத்த வேண்டும்.

பரந்த அணுகுமுறையில் நோக்கினால் விதையின் சேமிப்புக்காலம் என்பது வினையியல் முதிர்ச்சியில் ஆரம்பித்து முளைக்கரு வளர்ச்சி அதாவது விதை முளைப்பில் முடிகிறது.  விதைகள் அதிகபட்ச உலர் எடை அடையும் போது அவை வினையியல் மற்றும் புற வளர்ச்சி பெற்றிருப்பதாக கருதவேண்டும். இந்நிலையில் விதைகளின் ஈரப்பதம் குறைத்தல் (அ) உலர்தல் நடைபெறும். விதையின் உலரும் தன்மை வினையியல் முதிர்ச்சி பெற்ற பின்னர் மற்றும் கதிரடித்தல் அறுவடைப் பணிக்கு ஏதுவான ஈரப்பதம் அடையும் வரைத் தொடர்ந்து குறையும்.

இந்த நிலை தான் அறுவடை முதிர்ச்சி என்று அழைக்கப்படுகிறது. வினையியல் முதிர்ச்சி மற்றும் அறுவடை முதிர்ச்சிக்கு இடைப்பட்ட காலம்  தான் விதைச் சேமிப்பின் முதல் கட்டம் ஆகும். விதைகள் அறுவடை முதிர்ச்சி பெற்ற பின் காலம் தாழ்த்தி அறுவடை செய்தால் அவற்றின் தரம் குறைந்து விடும்.

விதைச் சேமிப்பின் இரண்டாவது கட்டம் அறுவடை முதல் தொடங்கி நிலைப்படுத்துதல் வரை முடியும். விதைக் குவியல்கள் விதைக் கிடங்கில் மற்றும் விதை சேமிப்பு கொள்கலன்கள் போன்ற விதைகள் பையிலிடும் போது அவற்றின் தரத்தைப் பாதிக்கும் காரணிகளாகும். நிலைப்படுத்துதல் முதல் பையிலிடுதல் வரை விதைச் சேமிப்பின் மூன்றாம் கட்டம் ஆகும். பையிலிடப்பட்ட விதைத்தான் நான்காம் கட்ட விதைச் சேமிப்பு ஆகும். பையிலிடப்பட்ட விதைகள் விநியோகம் மற்றும் விற்பனை செய்வது அடுத்தக் கட்ட சேமிப்பு ஆகும். இறுதி நிலைச் சேமிப்பு என்பது விதைக்கும் முன்பும் பின்பும் பண்ணைகளில் சேமிப்பது ஆகும்.

விதைச் சேமிப்பின் பொழுது விதை உற்பத்தியாளர் கையாளும் கட்டுப்பாடு, அறுவடை முதல் விநியோகம் வரைர அதிகபட்சமாகவும், விநியோகம் விற்பனை முதல் பண்ணை சேமிப்பு வரையில் குறைந்தபட்சமாகவும் வேறுபடும். கட்டுப்பாட்டு நிலைகள் வேறுபட்டு இருந்தாலும், விதை உற்பத்தியாளர் விதைச் சேமிப்பின் கட்டங்களையும் கருத்தில் கொள்ளவேண்டும். விதைத் தரத்தைப் பராமரிக்கும் அனைத்துச் செயல்களும் கட்டாயமாக செய்யப்படவேண்டும்.

தகவலுக்கு
பேராசிரிய மற்றும் தலைவர்
விதை மையம்
தமழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம்
கோயமுத்தூர்-641003.
தொலைபேசி எண்:0422-661232.
மின்னஞ்சல்: seedunit@tnau.ac.in

 

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2015.

Fodder Cholam