Seed Certification
கேள்வி – பதில்கள்

கேள்வி – பதில்கள்

  1. வல்லுநர், சான்று மற்றும் ஆதார விதைகள் என்றால் என்ன ?

    வல்லுநர் விதை

    வல்லுநர் விதையானது ஒரு நிலையத்தில் (அ) பயிர்ப் பெருக்க திட்டத்தின் கீழ் உபயம் பெற்று பயிர்ப் பெருக்க வல்லுநரின் கட்டுப்பாட்டின் கீழ் உற்பத்தி செய்யப்படும் விதை (அ) பயிர் பாகவழிப் பெருக்கு பொருள் ஒன்றாகும். இதன் உற்பத்தியானது திறனுள்ள பயிர்ப் பெருக்க வல்லுநரின் கண்காணிப்பில் நடைபெறும். மேலும் இது ஆதார விதைக்கான மூலதனமாகும். வல்லுநர் விதையானது இனத்தூய்மையுடன் இருக்கவேண்டியது அவசியம். ஏனெனில அதனைப் பின்பற்றி உற்பத்தி செய்யப்படும் சந்ததிகளான ஆதார மற்றும் சான்று விதைகள் தேவைப்படும் இனத்தூய்மை பெற்றிருக்கவேண்டும். மற்ற தரம் காரணிகளான புறத்தூய்மை, உயிரற்றப் பொருட்கள், முளைப்புத் திறன் போன்றவை விதை உறையின் மேல் உள்ள படி குறிப்பிடப்படவேண்டும்.

    ஆதார விதை

    வல்லுநர் விதையின் சந்ததியாகவோ (அ) அதன் தொடர்ச்சியைத் தெளிவாக விளக்கும் ஆதார விதையாகவோ உற்பத்தி செய்யப்படுவது ஆதார விதையாகும். ஆதார விதையை மூலமாகக் கொண்டும் உற்பத்தி செய்யலாம். ஆதார விதை நிலை I மற்றும் IIன் குறைந்தபட்ச விதைச்சான்று தரங்கள் ஒன்றேயாகும். ஆதாரவிதை நிலை I மற்றும் IIற்கும் சான்றட்டையின் நிறம் வெள்ளை நிறம் ஆகும். சான்று விதை I மற்றும் II ஆகியவற்றை கண்காணித்து, அனுமதியளிப்பது சான்று நிலையங்கள் ஆகும். சான்று நிலையங்கள் கூறியபடி  இவ்விதைகள் குறிப்பிட்ட இனத்தன்மைகள் மற்றும் இனத்தூய்மை பெற்றிருப்பதுடன் சான்று தரங்களையும் உறுதி செய்வதாய் அமையவேண்டும்.

    சான்று விதை

    ஆதார விதையின் சந்ததியாக உற்பத்தி செய்யப்படும் சான்றுவிதை, அவ்விதைப் பயிர்க்கு தேவையான தரங்கள், இனத்தன்மை மற்றும் இனத்தூய்மையை உறுதி செய்யும் நிலையில் இருக்கவேண்டும். சான்று விதைகளை, ஆதார விதை நிலை Iன் பின் மூன்று தலைமுறைக்கு மேல் பெருக்கம் செய்யப்படாத சான்று விதைகளில் இருந்தும் உற்பத்தி செய்யலாம்.

  2. வீரிய ஒட்டு விதை என்றால் என்ன?

    இது இரு இரகங்கள் (அ) பெற்றோரை கலப்பினம் செய்து கிடைக்கப்பெற்ற முதல் தலைமுறை விதையாகும். அங்கீகரிக்கப்பட்ட உள்உறவுப் பெருக்க வரிசை இரண்டு (அ) பெற்றோர் ஒன்று ஆண் மலடு ஆகியவற்றை கலப்பினது செய்து கிடைக்கும் முதல் தலைமுறை வீரிய (சான்று) ஒட்டு விதையாகும்.

  3. அடையாள விதை என்றால் என்ன ?

    விதைச்சட்டம் 1966, பிரிவு 5ன் படி குறிப்பிட்ட விதைகளும், பரிவு 6(ஏ) மற்றும் 6(பி)ன் படி அடையாள அட்டைப் பொருத்தி சந்தையில் விற்கப்படும் விதைகள் அடையாள விதைகள் என்றழைக்கப்படுகின்றன.

  4. விதை சான்றிதழ் பெறத் தேவையான விதிமுறைகள் மற்றும் செயல்முறைகள் யாவை ?
    • மனுவை பெறுதல் மற்றும் சரிபார்த்தல்
    • விதையின் மூலம், பிரிவு மற்றும் விதைப்பயிர் உற்பத்திக்குத் தேவையான ஆதாரங்களை உறுதிப்படுத்துதல்
    • குறிப்பிட்ட வயல் தரங்களுக்கு உட்பட்டுள்ளதை வயலாய்வுகள் மூலம் உறுதி செய்தல்.
    • அறுவடை பின் சார் நிலைகளான சுத்திகரிப்பு மற்றும் பைகளில் அடைப்பது போன்றவற்றை கண்காணித்தல்.
    • விதை மாதிரி எடுத்தல் மற்றும்  ஆய்வு செய்தல், இதனில் இனத்தூய்மை ஆய்வு விதை ஆரோக்கியம் ஆய்வு மற்றும் குறிப்பிட்ட தரங்களை கொண்டுள்ளதை ஆய்வு செய்தல் போன்றவை அடங்கும்.
    • சான்றட்டை மற்றும் சான்றிதழ் அளித்தல், சான்றட்டை பொருத்துதல் மற்றும் அடைத்தல்.
  5. விதைச் சான்றிதழ் அளிக்க அங்கீகரிக்கப்பட்ட மையங்கள் யாவை ?

    விதைச்சட்டம் பிரிவு 8ன்படி குறிப்பிடப்பட்ட மையங்கள் (மாநில அரசு மற்றும் தன்னாட்சி அமைப்புக்கள்) விதைச் சான்றிதழ் அளிக்க அங்கீகரிக்கப்பட்டவையாகும். தற்போது நாட்டில்  மொத்தம் 21 மாநில விதைச் சான்றிதழ் மையங்கள் உள்ளன.

  6. சான்று விதைகள் உற்பத்தி செய்யும் மையங்கள் யாவை ?

    சான்று விதை உற்பத்தி செய்ய விருப்பம் உள்ள எவரும் அதனை உற்பத்தி செய்யலாம். தற்பொழுது, மாநில விதை கழகங்கள், தேசிய விதை கழகங்கள், மாநிலப் பண்ணை கழகம், மாநில வேளாண் துறைகள், தனியார் நிறுவனங்கள், கூட்டுறவு அமைப்புகள் மற்றும் விவசாயிகள் போன்றோர் சான்று விதையை உற்பத்தி செய்கின்றனர்.

  7. நாட்டில் வல்லுநர் ஆதார மற்றும் சான்று விதையின் நிலை என்ன ?

    2003-04 ஆம் வருடத்தில் 6048 டன் வல்லுநர் விதை, 65,000 டன் ஆதார விதை உற்பத்தியும் மற்றும் 124 லட்சம் குவிண்டால் சான்று விதை விநியோகமும் நாட்டில் நடைபெற்றுள்ளது.

  8. விதை  மாற்று வீதம் என்றால் என்ன ?

    விதை மாற்று வீதம் என்பது அப்பருவக்காலத்தில் மொத்தமாக நடவு செய்த பகுதியில், சான்று தரமான விதைகளை விதைத்த பகுதியின் சதவீதமே ஆகும். இதனில் வயல் சேமிப்பு விதைகள் அடங்காது.

  9. தற்போது பல்வேறு பயிர்களுக்கு பின்பற்றப்படும் விதை மாற்று வீதம் யாவை ?

    2003-04ல் விதை மாற்று வீதம், கோதுமை 13 சதவிகிதம், நெல் 19.16 சதவிகிதம், சோளம் 24.41 சதவிகிதம், மக்காச்சோளம் 26.71 சதவிகிதம், கம்பு 51.02 சதவிகிதம், பயிறு 7.09 சதவிகிதம், உளுந்து 20.48 சதவிகிதம், பச்சைப்பயிறு 19.48 சதவிகிதம், துவரை 13.60 சதவிகிதம், நிலக்கடலை 5.5 சதவிகிதம், கடுகு 66.96 சதவிகிதம், சோயாபீன்ஸ் 15.58 சதவிகிதம், சூரியகாந்தி 19.61 சதவிகிதம், பருத்தி 37.25 சதவிகிதம், சணல் 68.49 சதவிகிதம்.

  10. விதைத் துறையில் இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட முக்கியத் திட்டங்கள் யாவை ?
    1. விதைகளை வடகிழக்கு மாநிலங்களுக்கு அனுப்பப் போக்குவரத்து மானியம்
    2. விதை வங்கி ஏற்படுத்துதல் மற்றும் பராமரித்தல்
    3. பிவிபி சட்டங்களை அமுல்படுத்துதல்
    4. விதைத் தரக்கட்டுப்பாடு ஏற்பாடுகள் மற்றும் தேசிய விதை ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையம் அமைவித்தல்.
  11. மரபியல் மாற்றம், மரபணுக்கூறு மாற்றுத் தாவரம் விதை என்றால் என்ன ?

    மரபணு மாற்று விதை என்பது உயர் தொழில்நுட்பவியல் மூலம், பேரின வகைளிலிருந்து உயிரியிலிருந்து எடுத்தக் குறிப்பிட்ட மரபணுவை மற்றோர்ப் பயிரில் மரபியல் மாற்றத்தை உண்டாக்கத் திணிப்பது ஆகும். இதன் மூலம் சில பூச்சி, நோய் தாக்குதலுக்கு எதிர்ப்பு சக்தியை அப்பயிர் பெறும் (எ.கா) Bt பருத்தி, “கரை ஏசி மரபணு மண் நுண்ணியிரான பேசில்லஸ் துரிஞ்சியன்ஸிஸ்” என்ற உயிரினத்திலிருந்து பருத்தி விதைக்கு திணிக்கப்பட்டதால் இது காய்ப்புழுக்களுக்கு எதிர்ப்பு சக்தியை கொடுத்துள்ளது.

  12. விதைத் துறைக்கு சம்பந்தப்பட்ட ஐபிஆர் இடுவுகள் இந்தியாவில் எவ்விதம் கையாளப்படுகிறது ?

    விதைத் துறையானது, பயிர்ப் பெருக்கம் செய்பவர்களின் உரிமைகளை காப்பதற்காக, பயிர் இரகம் மற்றும் விவசாயிகளின் உரிமைகளை காக்கும் சட்டம், 2001 (பிவிபி) என்ற சட்டத்தை நிறுவியுள்ளது. இச்சட்டத்தின் முக்கிய நோக்கம், அரசு மற்றும் தனியார்த் துறைகளில் வருமானத்திற்கு உத்திரவாதமளித்து புதிய இரகங்களை ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி செய்வது போன்றவற்றின் முதலீட்டை ஊக்குவித்தல்.
    விதை நிறுவனங்களின் வளர்ச்சியை தேசிய மற்றும் அன்னிய முதலீட்டின் மூலம் அதிகப்படுத்தி, இந்திய விவசாயிகளுக்குத் தேவையான அதிகத்தரம் வாய்ந்த நடவுப் பொருட்கள் மற்றும் விதைகளை கிடைக்கப் பெறச் செய்வது. பிவிபி மற்றும் விவசாயிகள் சங்கம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

  13. வேளாண் துறையில் உயிர் தொழில்நுட்பவியலின் பயன்கள் யாவை ?
    1. பயிர்ப் பூச்சி எதிர்ப்பு சக்தி
    2. வறட்சி, குளிர் மற்றும் உப்பு நிலைகளைத் தாங்கும் சக்தி
    3. சத்து அதிகப்படுத்துதல்
    4. அறுவடை பின்சார் தரம்
    5. மதிப்பூட்டுதல்

    உலகளவில் கீழ்க்கண்ட காரணங்களுக்காக உயிர் தொழில்நுட்பவியல் அதிகளவில் உபயோகப்படுகின்றன.

    இவையல்லாமல், வேளாண் மற்றும் கூட்டுறவுத் துறையினால் (நியமிக்கப்பட்ட) டாக்டர். எம்.எஸ். சுவாமிநாதன் அவர்களின் கீழ் நியமிக்கப்பட்ட பணிக்குழு கீழ்க்கண்டவற்றை பரிந்துரைக்கிறது. “உயிர் தொழில்நுட்பவியல் பணிகளை ஒருங்கிணைந்த கண்ணோட்டத்துடன் நோக்க வேண்டும். ஆர் டி.என்.ஏ மற்றும் ஆர்.டி.என்.ஏ அல்லாத பயன்களான, புளித்தல், உயிர் சுத்திகரிப்பு உயிர்ப் பூச்சிக் கொல்லிகள், உயிர் உரங்கள், திசு வளர்ப்பு நுண்பயிர்ப்பெருக்கம் மற்றும் இந்திய வேளாண் வளர்ச்சியில் சம்பந்தப்பட்ட பகுதிகளான கால்நடை வளர்ப்பு மற்றும் மீன்வளர்ப்பு ஆகியவற்றை, வேளாண் துறையில் உயிர் நுட்பவியலின் பயன்பாடுகளின் திட்டமிடல் மற்றும் ஊக்குவித்தல் மூலம் ஒருங்கிணைந்த பகுதிகளாக நோக்கவேண்டும்.

  14. புதிய விதைச்சட்டம் அமைப்பதற்கான திட்டறிக்கை ஏதேனும் உள்ளதா ஏன் ?

    ஆம். தற்போதுள்ள விதைச்சட்டம், 1966ல் உள்ள குறைபாடுகளை களைவதற்கும், இந்தியப் பொருளாதாரம் மற்றும் விதைத் துறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களைச் சேர்ப்பதற்கும் ராஜ்யசபாவில் டிசம்பர் 9 ஆம் தேதி 2004ல் விதை மசோதா, 2004 அறிமுகப்படுத்தப்பட்டது.

  15. இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட மரபணு மாற்றுப் பயிர்கள் யாவை ?

    இதுவரையில் நான்கு Bt பருத்தி வீரிய இரகங்களை வணிக முறயைில் விவசாயத்திற்கென பயிரிடுவதற்கான அங்கீகாரம் பெற்றுள்ளது. 4 வீரிய இரகங்களுள், BtMECH-12,  BtMECH-162 மற்றும் BtMECH-184 ஆகியவை M/s மஹிகோ - மான்சான்டோவினாலும், RCH - 2 என்பது M/s ராசி விதைகள் (பி) லிட், ஆகியோராலும் அறிமுகப்படுத்தப்பட்டது. இவ்வீரிய இரகங்கள், ஆறு மாநிலங்களிலான - குஜராத், மத்தியப் பிரதேசம், மஹாராஷ்டிரா, ஆந்திரப்பிரதேசம், கர்நாடகா மற்றும் தமிழ்நாடு ஆகியவற்றில் பயிரிடப்படுகிறது. மரபணு மாற்றிய கடுகு, சோளம், கத்தரி, தக்காளி ஆகியவையும் பல் நிலைகளில் ஆய்வு மற்றும் சோதனை கட்டங்களில் உள்ளது.

  16. போலியான விதைகளை விற்பதற்கான தண்டனை மற்றும் அபராதங்கள் யாவை?

    விதைச்சட்டம், விதிமுறைகளை மீறும் நபர் அதன்படி தண்டிக்கப்படுவர்.

    1. முதல் குற்றத்திற்கு ரூ. 500 வரையில் அபராதம் மற்றும்
    2. ஏற்கெனவே இப்பிரிவில் தண்டிக்கப்பட்டவராக இருப்பின் ஆறு மாதம் வரை சிறைத் தண்டனையோ (அ) ரூ. 1000 வரை அபராதம் (அ) இரண்டும் உண்டு.
  17. விதை ஏற்றுமதி மற்றும் இறக்குமதிக்கான விதிமுறைகள் யாவை ?

               வர்த்தக அமைச்சகத்தினால், விதிக்கப்பட்ட எக்ஸிம் கொள்கைகள் 2002-07களினால் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி கட்டுப்படுத்தப்படுகிறது. எக்ஸிம் கொள்கைகளின் கீழ், விதை வளர்ச்சிக்கான புதியக் கொள்கை 1988 மற்றும் பயிர் தொற்று நோய் தடுப்பு விதிகள், 2003 படியும் இறக்குமதிக்கான சலுகைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட பொருட்களுக்கு டிஏசியின் எக்ஸிம் குழு ஏற்றுமதி அல்லது இறக்குமதி பற்றிய முடிவுகளை எடுக்கும்.

  18. விதைக் கட்டுப்பாட்டிற்கான சட்டங்கள் யாவை ?

    விதை சட்டம் - 1966, விதை விதிமுறைகள் – 1968 மற்றும் விதை ஆணைகள் - 1983  ஆகியவை ஆகும்.

  19. தேசிய விதை கழகம் என்றால் என்ன ?

    தேசிய விதை கழகம் என்பது ஒரு பொதுத் துறை நிறுவனமாகும். விவசாயிகளுக்கு நல்லத் தரமான விதைகளை விநியோகம் செய்ய கம்பெனி சட்டம் 1956ன் கீழ் வேளாண் மற்றும் கூட்டுறவுத் துறையின் ஆளுமைக்கு உட்பட்டு நிறுவப்பட்டது. விதை உற்பத்தியாளர்களின் ஒப்பந்தத்தின் பேரில் இக்கழகம் விதை உற்பத்தியை மேற்கொள்கிறது. 560 இரகங்கள் மற்றும் 79 பயிர்களை என்.எஸ்.சி கையாள்கிறது.

  20. விதை உற்பத்திக்கென இந்திய அரசாங்கத்திற்கு சொந்தமான பண்ணை உள்ளதா ?

    இந்திய அரசாங்கத்திற்கென சொந்தமான பண்ணைகள் எதுவுமில்லை. ஆயினும் இந்திய அரசின் மாநிலப் பண்ணை கழகம் (மா.ப.க) பல மாநிலங்களில் மத்திய மாநிலப் பண்ணைகளை இயக்குகிறது. மா.ப.ண கம்பெனி சட்டத்தின் கீழ் 1969 ஆம் வருடம் நிறுவப்பட்டது. மத்திய மாநில பண்ணைகளில் தரமான விதை உற்பத்தி மேற்கொள்வது இதன் பணியாக இருந்தது. சில காலங்களில் கொண்டு, அவற்றுள் 6 பண்ணைகளை மட்டும் வைத்துக் கொண்டு மற்றவைகளை குத்தகை காலம் முடிந்தவுடன் மாநில அரசிடம் ஒப்படைக்கப்பட்டது.

  21. விதை வங்கித் திட்டம் என்றால் என்ன ?

    விதை வங்கி அமைத்தல் மற்றும் பராமரித்தலின் முக்கிய நோக்கமானது, தற்செயலாக ஏற்படும் இயற்கை சீற்றங்களான வறட்சி, வெள்ளம் போன்ற காலக்கட்டத்தில், தரமான விதைகள் கிடைக்கப்பெறுவதே ஆகும். தேசிய விதைக் கழகம், மாநிலப் பண்ணை கழகம் மற்றும் 13 மாநில விதைக் கழகங்களின் கீழ் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

  22.  (பி.பி. வி) PPV  மற்றும் FR (எப். ஆர்.)  சட்டங்கள் அமுலாக்கப்பட்டுள்ளதா?

    PPV  மற்றும்  FR சட்டம் 2001 எண் 52, 2001, தேதி 30வது அக்டோபர் 2001ன்படி விதைத் துறையானது PPV  மற்றும்   FR விதிகளை செப்டம்பர் 2003 இந்திய அரசிதழில் வெளியிட்டது. PPV  மற்றும்   FR ஆணை நிறுவப்பட்டபின், டி.யு.எஸ் ஆய்வில் தேசிய ஆய்வு வழிமுறைகளின் படி இத்திட்டதிற்குற்பட்டப் பயிர்களை ஆய்வு செய்தபின் இச்சட்டம் அமுலாக்கப்படும். PPV  மற்றும் FR ஆணைக் கூடிய விரைவில் நிறுவப்பட உள்ளது.

  23. பயிர் / இரகங்களின் PPV  மற்றும்   FR சட்டத்தில் குறிப்பிட்டுள்ள பயிர்கள் யாவை?

    முதலில் 35 பயிர்கள் குறிப்பிடப்படப்பட்டுள்ளன. நெல், கோதுமை, சோளம். மக்காச்சோளம், கம்பு, கொண்டைக்கடலை, பச்சைப் பயறு, உளுந்து, பட்டாணி. ராஜ்மாஷ், லெண்டில், துவரை, கடுகு, நிலக்கடலை, சோயாபீன்ஸ், சூரியகாந்தி, செந்தூரகம், ஆமணக்கு, எள், ஆளிவிதை, பருத்தி, சணல், கரும்பு, குதிரை மசால், பெர்ஸீம், தக்காளி, கத்திரி, வெண்டை, காலிபிளவர், முட்டைக்கோசு, உருளைக்கிழங்கு, வெங்காயம், பூண்டு, ரோஜா மற்றும் செவ்வந்தி டியுஎஸ் ஆய்வு விதிமுறைகள் அனைத்துப் பயிர்களுக்கும் தயார் செய்யப்பட்டுள்ளது.

  24. விதை நன்கு வளராத பொழுது விவசாயிகள் யாரை அணுகுவது ?

    வேளாண் இயக்குநர், வேளாண் இணை இயக்குநர் அல்லது அப்பகுதியின் விதை ஆய்வாளர்.

  25. விதைக்கும் முன் விதைகளை ஆய்வு செய்யும் வசதி ஏதேனும் விவசாயிகளுக்கு உள்ளதா?

    விதை உற்பத்தியாளரும், விதை உபயோகிப்பவரும் விதை மாதிரிகள் மாநில விதை ஆய்வு மையங்களில் குறைந்த கட்டம் செலுத்தி ஆய்வு செய்து கொள்ளலாம். ஆய்வின் முடிவுகளை விதைப்பது, விற்பது, மற்றும் அடையாள அட்டை பொருத்துவது போன்றவைக்கு பயன்படுத்தலாம்.

  26. டியுஎஸ் ஆய்வு என்பது என்ன?
    டியுஎஸ் என்பது மேன்மையான ஒற்றுமையுள்ள மற்றும் நிலையானது என்று பொருள். இந்த விதிமுறைகளை அடிப்படையாகக் கொண்டு, ஒரு இரகத்திற்கு பயிர்ப் பெருக்க வல்லுநரின் உரிமைகள் வழங்கப்படும். டியுஎஸ் ஆய்வானது ஒரு இரகத்தின் புதுமைத் தன்மையை உறுதி செய்யப்பயன்படும் விதிகளாகும். இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்தினால் வடிவமைக்கப்பட்டது தான். டியுஎஜ் ஆய்வின் தேசிய ஆய்வு விதிமுறைகள். டியுஎஸ் ஆய்வு விதிமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ள 35 பயிர்களில், 30 பயிர்களுக்கு அவை தயார் செய்யப்பட்டுள்ளது. மற்ற ஐந்திற்கும் இறுதி நிலையில் உள்ளது.

தகவலுக்கு:
பேராசிரிய மற்றும் தலைவர்,
விதை மையம்
தமழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம்
கோயமுத்தூர்-641003.
தொலைபேசி எண்:0422-661232.
மின்னஞ்சல்: seedunit@tnau.ac.in

Updated on : Dec, 2014

 

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2015.

Fodder Cholam