முதல் பக்கம் | பட்டுப்புழு வளர்ப்புத் துறை - தமிழ்நாடு | வீடியோ தொகுப்பு | புத்தகங்கள்| கேள்வி பதில் | தொடர்பு கொள்ள

பட்டுக்கூடு சந்தை

  விவசாயிகள் அறுவடை செய்த பட்டுக்கூடுகளை அரசு பட்டுக்கூடு சந்தைக்கு கொண்டு வரவேண்டும். அவர்கள் பட்டுக்கூடுகளை விற்பனை செய்ய ‘பாஸ்புக்’ கொண்டு வரவேண்டும். அந்த பாஸ்புக்கில், முட்டை வாங்கியது. அதன் பேட்ச் தகவல் பதிவு செய்யப்பட்டு இருக்கவேண்டும். அந்த தகவல்கள் சந்தை மதிப்பை மதிப்பிட உதவும்.

Sericulture Marketing

விவசாயிகள் பட்டுக்கூடுக்களை கொண்டு வந்தவுடன், ஒவ்வொரு குவியலுக்கு குவியல் எண் வழங்கப்படும்.
கச்சா பட்டு உற்பத்தியாளர்கள், பட்டுக்கூடுகளை வாங்க பட்டுக்கூடு சந்தைக்கு வருவார்கள் அவர்களுக்கு, பதிவு செய்யப்பட்டவர்களாகவும், அவர்களுக்கும் பாஸ்புக் வழங்கப்பட்டு, பட்டுக்கூடு சந்தை மற்றும் அண்ணா பட்டு பரிமாற்றம் போன்றவற்றுடன் நடைபெற்ற வர்த்தகம் பற்றி குறிக்கப்பட்டு இருக்கும்.
கச்சா பட்டு உற்பத்தியாளர்கள்/ நூற்பாளர்கள் வந்தவுடன், ஏலத்தில் பங்கு பெற அட்வான்ஸ் தொகையை கட்ட வேண்டும்.
சந்தையின் ஆய்வாளர் நிலையிலுள்ளவர்கள் விவசாயிகள் மற்றும் நூற்பாளர்களைக் கொண்டு ஒரு கமிட்டி அமைப்பார்கள். அந்த கமிட்டி, ஒவ்வொரு குவியலிலிருந்தும், தரத்தை அறிய மாதிரி எடுப்பார்கள்.
எடுக்கப்பட்ட மாதிரிகளிலிருந்து, பட்டு -கழிவு (செல்)விகிதம், நூற்பு நூல் தரம், பூச்சித்தாக்கப்பட்ட பட்டுக்கூட்டு மற்றும் பூச்சித் தாக்குதலுக்கு காரணத்தை ஆய்வு செய்வார்கள். அந்த தகவல்கள் ஆதார விலை/ ஒரு கிலோ பட்டுக்கூட்டுக்கு கணக்கிட உதவும். அந்த ஆதார விலையிலிருந்து ஏலத்தை, சந்தை ஆய்வாளர் முன்னிலையிலிருந்து ஆரம்பிப்பார்கள். யார் அதிக விலைக்கு ஏலம் எடுக்கிறார்களோ அவர்களுக்கு பட்டுக்கூடு வழங்கப்படும். அந்த வர்த்தகமானது, வாங்குபவரும், விற்பவரும் ஒத்துக் கொண்டாலே நடக்கும்.

 

   
 
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2014