பூச்சி தாக்குதலும் மேலாண்மையும்

மல்பெரிச் செடியை பலவகை பூச்சிகள் தாக்கி சேதம் விளைவிக்கின்றன. அவற்றுள் சில முக்கியமான பூச்சிகள் மற்றும் அவற்றின் மேலாண்மை பற்றி இங்கே காணலாம்.

  1.

  இளஞ்சிவப்பு மாவுப்பூச்சி: மேக்கொநேல்லிகோக்கஸ் ஹிர்சுட்டஸ் 

  2.

  பப்பாளி மாவுப்பூச்சி: பாராகாக்கஸ் மார்கஜிநேட்டஸ்  

  3.

  இலைப்பிணைக்கும் புழு: டையபானிய பல்வெருலெண்டலிஸ்

  4.

  இலைப்பேன்: சூடொடேன்ரோதிரிப்ஸ் மோரி

  5.

  கரையான்: ஓன்டோடேர்ம்ஸ் ஒபிசஸ்

 

1. இளஞ்சிவப்பு மாவுப்பூச்சி: மேக்கொநேல்லிகோக்கஸ் ஹிர்சுட்டஸ் 

  • இந்நோய் கோடைப்பருவத்தில் அதிகமாகக் காணப்படும். குஞ்சுகளும் வளர்ந்த பூச்சிகளும் செடியின் இளந்தளிர் மற்றும் குருத்துத் தண்டுப்பகுதியில் இருந்து கொண்டு சாற்றை உறிஞ்சி சேதம் உண்டாக்கும்.
  • பாதிக்கப்பட்ட செடியின் தளிர்ப்பகுதிகள் அடர் பச்சை நிறத்தில் சுருண்டும் தெளிந்தும் காணப்படும்.
  • இரண்டு கணுக்களுக்கிடைப்பட்ட இடைவெளி மிகவும் குறைந்து, செடிகளின் குட்டையான வளர்ச்சியுடன் இருக்கும். இலைகளின் தரம் குறைந்துவிடும்.

மேலாண்மை

  • பாதிக்கப்பட்ட இலைகளைக் கிள்ளி சேகரித்து எரித்துவிடவேண்டும்.
  • மீன் எண்ணெய் (FORS) 40 கிராம்/லிட்டர் அல்லது டைகுலோரோவோஸ் 76 WSC  2 மிலி/லிட்டர், (காத்திருப்பு கால இடைவெளி 15 நாட்கள்)
  • இரை விழுங்கிகளான கிரிப்டோலிமஸ் 750 பொறிவண்டு/எக்டர் (அ) ஸ்கிம்னஸ் 1000 பொறிவண்டு/எக்டர் என்ற அளவில் வெளியிடவேண்டும்.

2 .  பப்பாளி மாவுப்பூச்சி: பாராகாக்கஸ் மார்கஜிநேட்டஸ்  

  • இப்பூச்சியின் உடல் முழுவதும் மெழுகு மற்றும் மாவு போன்ற வெள்ளை நிறப் பொருளால் கவரப்பட்டிருப்பதால் இதனை எளிதில் கட்டுப்படுத்த முடியவில்லை.
  • இலையின் அடிப்பகுதி குருத்து, கிளைகள் மற்றும் தண்டுப் பகுதிகளில் வெள்ளையாக அடைபோல மாவுப்பூச்சிகள் படர்ந்திருக்கும்.
  • சிவப்பு மற்றும் கருப்பு எறும்புகளின் நடமாட்டம் இருக்கும்.
  • பளபளப்பான ஒட்டும் தன்மை கொண்ட தேன் போன்ற கழிவுகளும் அதன்மேல் கரும்பூசண வளர்ச்சியும் காணப்படும் அதிக தாக்குதலில் செடிகள் இலைகள் வாடி கருகிவிடும்.
  • இப்பூச்சிகளை கட்டுப்படுத்த ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை முறையை கடைப்பிடிக்க வேண்டும்.
  • பூச்சிகள் தாக்கப்பட்ட செடிகள் மற்றும் களைச்செடிகளை பூச்சிகள் அதிகம் பரவாமல் பிடுங்கி அழிக்கவும்.

இயற்கை வழி மேலாண்மை

  • அசெரோபேகஸ் பப்பாயே @ 500 ஒட்டுண்ணிகளை / கிராமத்தில் அல்லது தொகுதியில் வெளியிடவும்.
  • பூச்சிக்கொல்லிகளை தவிர்த்து, இயற்கையில் வயலில் காணப்படும் ஸ்பால்ஜியஸ் மற்றும் காக்ஸிநெல்லிட்ஸ் போன்ற ஊனுண்ணிகளை பாதுகாக்கவும்.
  • களைகளை அகற்றி வயல்களை சுத்தமாக வைக்க வேண்டும்.
  • வயலில் மிகஅதிக மாவுப்பூச்சி தாக்குதல் உள்ள தருணத்தில் ஒட்டுண்ணிகளை வயலில் விடவும்.

3. இலைப்பிணைக்கும் புழு: டையபானிய பல்வெருலெண்டலிஸ்

  • குளிர் காலங்களில் இப்புழுவின் தாக்குதல் அதிகமாகக் காணப்படும். இப்புழுக்கள் மல்பெரி செடியின் இலைகளைப் பிணைத்து, உண்கின்றன.
  • இதன் தாக்குதலால் செடியின் வளர்ச்சி குன்றிவிடும்.

மேலாண்மை

  • பாதிக்கப்பட்ட குருத்துப் பகுதிகளை கிள்ளி எடுத்து அழித்துவிடவேண்டும்.
  • விளக்குப் பொறிகளை வைத்து அந்துப் பூச்சிகளைக் கவர்ந்து அழிக்கலாம்.
  • டைகுளோர்வாஸ் என்ற மருந்தினை ஒரு லிட்டர் நீருக்கு இரண்டு மில்லி என்ற அளவில் கலந்து தெளித்தும் கட்டுப்படுத்தலாம்.

ஒருங்கிணைந்த மேலாண்மை

வ.எண்

கூறுகள்

 காவாத்து செய்த நாட்களுக்கு பிறகு

1

வெள்ள நீர் பாசனம்

0

2

கூட்டுப்புழு ஒட்டுண்ணி, டெட்ராஸ்டிக்கஸ் ஹூவார்டி @ 20,000 / ஏக்கர்

1

3

முட்டை ஒட்டுண்ணி, டிரைக்கோகிராமா கைலோநிஸ் @ 2cc / ஏக்கர்

10

4

டைகுளோர்வாஸ் @ 1 மிலி/லிட்டர்.

30

5

பாதிக்கப்பட்ட பகுதிகளை சேகரித்து தீயிலிடவும்

40

4. இலைப்பேன்: சூடொடேன்ரோதிரிப்ஸ் மோரி

  • இளம் மற்றும் வளர்ந்த பூச்சிகள் இலையில் உள்ள பச்சையத்தை சுரண்டி, சாற்றை உறிஞ்சுதலால் இலைகள் சுருண்டு, பளபளப்பான பழுப்பு திட்டுக்களுடன் காணப்படும்.
  • இப்பூச்சியின் தாக்குதல் கோடைக்காலத்தில் அதிகமாகக் காணப்படும்.
..sd

மேலாண்மை

  • டைகுளோர்வாஸ் 76 WSC  என்ற மருந்தினை 2  மில்லி/ லிட்டர் அளவில் கலந்து தெளிக்க வேண்டும்.

5. கரையான்: ஓன்டோடேர்ம்ஸ் ஒபிசஸ்

  • இதன் தாக்கம் மணற்பாங்கான நிலங்களில் அதிகம்.
  • இப்பூச்சியானது இளம் மற்றும் செடியின் வேர் மற்றும் பாகங்களைத் தாக்குகின்றன.
  • தாக்குதல் அதிகமாகும் போது செடிகள் இறந்துவிடுகின்றன.

மேலாண்மை

  • கரையான் புற்றுக்களை அழித்தல்.
  • குளோர்பைரிபாஸ் 20 EC  50  மில்லி என்றளவில் கரையான் உள்ள இடங்களில் தெளித்தல் அல்லது பாத்தி அமைத்து இடவும்.
   
 
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2008-2024