பட்டுப்புழு வகைகள்
 

வேறுபட்ட உணவுகளை உண்ணும் வேறுபட்ட புழுகளிலிருந்து வணிகரீதியாக ஐந்து வகை பட்டுக்களை பெறலாம். மல்பெரியை மட்டும் உணவாகக் கொள்ளும் பட்டுப்புழுவைத் தவிர்த்து, இதர பட்டுக்களை மல்பரி அல்லாத பட்டு என்று அழைக்கப்படுகிறது. ஐந்து வகையான பட்டுகளும் இந்தியாவில் வணிகரீதியாக தயாரிக்கப்பட்டு வருகிறது.
மல்பெரி பட்டு
உலக அளவில் இந்த வகைப்பட்டானது, வணிக ரீதியாக உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. மல்பெரி செடியை உணவாக உட்கொள்ளும் ‘பம்பேக்ஸ் மோரி’ என்ற பட்டுப்புழு (Bambyx mori)விலிருந்து மல்பெரி பட்டு கிடைக்கிறது. இந்த பட்டுப்புழுவை அறைகளில் வளர்க்க முடியும். இந்தியாவில், கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம், மேற்கு வங்காளம், தமிழ்நாடு மற்றும் ஜம்மு மற்றும காஷ்மீர் மாநிலங்களில், மொத்த உற்பத்தியில் 92 சதவீதம் மல்பெரி பட்டே உற்பத்தி செய்யப்படுகிறது.

டசார் பட்டு
டசார் பட்டானது, தாமிர நிறத்தில் முரட்டு நூலாக இருப்பதால், இவை மெத்தை விரிப்பாகவும், உள் அலங்காரத்திற்கும் உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது. அசன் மற்றும் அர்சுன் வரங்களை உணவாக உட்கொள்ளும். ‘அன்த்தேலே மைலிட்டா’ என்ற பட்டுப்புழுவிலிருந்து கிடைக்கிறது. இவைகள் கூட்டுக்களை மரத்திலேயே இயற்கையாகக் கட்டுகிறது. இந்தப் பட்டானது, ஜார்கண்ட், சத்தீஸ்கர், ஒரிசா, மகாராஷ்டிரம், மேற்கு வங்காளம், ஆந்திரா மாநிலங்களில் உற்பத்தி செய்யப்படுகிறது. மலைவாழ் மக்களால் இவை உற்பத்தி செய்யப்படுகிறது.

ஒக் டசார் பட்டு
ஒக் செடியை உணவாக கொள்ளும் ‘அன்தேரே புரேயிலி’ வகை பட்டுப் புழுவிலிருந்து கிடைக்கிறது. இது, மெல்லிய நூலிழைகளால் ஆனது. இது, இமயமலைச்சார்ந்த பகுதிகளான மணிப்பூர், இமாச்சலப் பிரதேசம், அஸ்ஸாம், மேகாலயா மற்றும் ஜம்மு மற்றம் காஷ்மீர் மாநிலங்களில் உற்பத்தி செய்யப்படுகிறது. ஒக் டசார் பட்டு சீனாவில் உலகத்திலேயே அதிக அளவு, ‘அன்தேரே பெர்ன்யி’ பட்டுப்புழுவிலிருந்து உற்பத்தி செய்யப்படுகிறது.

எரி பட்டு
ஆமணக்கு இலைகளை உணவாக உட்கொள்ளுதல் ‘பிலோசாமியா ரசினி’ என்ற பட்டுப்புழுவிலிருந்து எரி பட்டு உற்பத்திச் செய்யப்படுகிறது. ‘எரிபட்டு’,‘என்டி பட்டு’ என்றும் ஏரன்டி பட்டு என்றும் அழைக்கப்படுகிறது. இவ்வகைப் பட்டானது, இதர பட்டுவைப் போல் அல்லாது, திறந்து நிலை கூட்டுப்புழு பட்டுவிலிருந்து பட்டு நூலாக கிடைக்கிறது. எரிபட்டு, மலைவாழ் மக்களால் வீடுகளில் புரதச்சத்து நிறைந்த கூட்டுப்புழுவிற்காக வீடுகளில் வளர்க்கப்படுகிறது. இந்தப்பட்டானது மலைவாழ் மக்கள் தங்கள் சொந்த உபயோகத்திற்காக (சட்டர்ஸ் தயாரிக்க) பழங்காலங்களிலிருந்து பயன்படுத்துகின்றனர். இந்தியாவின், வடகிழக்கு மற்றும் அஸ்ஸாம் மற்றும் அஸ்ஸாம் மாநிலங்களில் தயாரிக்கப்படுகிறது. இவை மேலும் பீகார், மேற்கு வங்காளம், ஒரிசா மாநிலங்களிலும் காணப்படுகிறது.

முகாபட்டு
இது இந்தியாவின் தங்க நிறப்பட்டு என்றும், ‘அசாம் மாநிலத்தில் பெருமை’ என்றும் வழங்கப்படுகிறது. ‘அன்தேரே அசாமின்ஸ்’ என்ற பட்டுப்புழுவிலிருந்து பல்வகைப் பட்டாக பாதி வளர்க்கக் கூடியது. இவை சாம் மற்றும் சோல் போன்ற நறுமணத் தாவரங்களை உணவாக உட்கொண்டு, மரங்களிலேயே கூடு கட்டக்ககூடியது. இம்மதிப்புக் கூடிய பட்டு, சேலை, மிக்காலஸ், சர்தர்ஸ் ரக உடைகள் தயாரிக்கப்பயன்படுகிறது. இவ்வகைப் பட்டு அசாம் மாநிலத்தின் பழங்கால கலை மற்றும் கலாச்சார பட்டாகத் திகழ்கிறது.

Mulbery Mulbery
Mulbery Mulbery
Oak Tusar
Eri Eri
Mulbery mugha
   
 
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2014