முதல் பக்கம் | பட்டுப்புழு வளர்ப்புத் துறை - தமிழ்நாடு | வீடியோ தொகுப்பு | புத்தகங்கள்| கேள்வி பதில் | தொடர்பு கொள்ள

 
தொற்றுநோய்க் கிருமி நீக்கம்
 

தொற்றுநோய்க் கிருமி நீக்கம்

  • 2% ஃபார்மலினுடன்,0.3% சுண்ணாம்பு அல்லது 2.5% க்ளோரின் டை ஆக்சைடுடன் 0.5% சுண்ணாம்பை 2லி/மீ2 அளவிற்கு பட்டுப்புழு வளர்க்கும் இடத்தில் ஒரு முறை பட்டுப்புழு வளர்ச்சி முடிந்தவுடன் உடனடியாக இந்தக் கரைசலை தெளிக்கவும் மற்றும் துடைப்பதற்கு மூன்று நாட்களுக்கு முன்பும் தெளிக்கவும்.
  • 2% ப்ளீசிங் பவுடர் கரைசலில் பட்டுப்புழு வளர்க்கும் கருவிகளை முக்கி வைக்கவும். உபயோகப்படுத்தும் முன்பு கருவிகளை வெயிலில் வைத்து உலர்த்தவும்.
  • 5% ப்ளீசிங் பவுடர் கரைசலுடன் சுண்ணாம்பு தூளை சேர்த்து 200கி / மீ2 என்ற அளவில் கலந்து வளர்ப்புக் கூடத்தை சுற்றியும், தண்ணீர் 1லி / மீ2 என்ற அளவில் கலந்து தரைப் பகுதியிலும் தெளிக்கவும்

முட்டை மற்றும் குஞ்சு பொரிப்பை அடைக்காத்தல்

  • முட்டைத் தகடை ஒரு அடுக்காக தட்டின் மீது பரப்பி விடவும்
  • 250 செ வெப்பநிலை மற்றும் 80% ஈரப்பதம் உகந்தது.இதற்கு வெண் மெழுகு காகிதம் மற்றும் ஈரமான நுரை உடைய சேணப் பையுரையை பயன்படுத்தலாம்
  • முட்டைகள் முதிர்ச்சியடைகின்ற பருவத்திற்கு 48 மணி நேரத்திற்கு முன்பு அந்த முட்டைகளை கருப்பு நிற காகிதத்தில் சுத்து பெட்டிக்குள் வைக்க வேண்டும்.முட்டைகள் பொரிக்கும் நாட்கள் வந்ததும் அதனை வெளியே எடுத்து வெளிச்சத்தில் வைக்கவும். அவ்வாறு செய்தால் அனைத்து முட்டைகளும் ஒரே சீராக பொரியும்.இது முட்டைகரு உருவாவதற்கு உதவி புரியும்
  • அதிகப்படியான முட்டைகள் (90-95%) இரண்டிலிருந்து மூன்று மணி நேரத்திற்குள் பொரித்துவிடும்

முட்டைகளை பாதுகாக்க குறைந்த செலவு முறை

  • முட்டைகளை மண்ணாலான அடைக்காப்பு அறையில் வைக்கவும்.
  • வரைப்படத்தை வரைந்து எவ்வாறு அறையில் ஈரப்பதம் பராமரிக்கின்றது என்பதை கவனிக்க வேண்டும்

துடைத்தல்

  • முட்டையிலிருந்து பொரிக்கப்பட்ட புழுக்களை பட்டினியாக வைக்கக்கூடாது.வெண் மெழுகு காகிதத்தில் துடைத்து வளர்க்கும் தட்டில் வைக்கவும். அல்லது நீல நிற பாலித்தீன் தாளில் வைக்கவும் (வளர்ப்புப் படுக்கை)
  • முட்டையிலிருந்து பொரிக்கப்பட்ட புழுக்களுக்கு 0.5 – 1 செ.மீ2 அளவில் மல்பெரி இலைகளை நறுக்கி தூவி விட வேண்டும்.வளர் புழுக்கள் அந்த இலைகள் மீது ஊர்ந்து செல்லும்
  • 8-10 நிமிடங்கள் களித்து,முட்டை தகட்டை கவிழ்த்தி புழு வளர்க்கும் தட்டில் போட்டு வடிமுனை தட்டில் வைக்கவும்
  • புழுக்கள் முட்டை தகட்டிலேயே ஒட்டி இருந்தால் சுத்தமாக அதனை எடுத்து தட்டில் போடவும்
  • வளர்ப்புப் படுக்கையில் தேவை என்றால் மல்பெரி இலைகளை நறுக்கி தூவி விட வேண்டும்
  • இலைகள் வாடாமல் இருக்க வளர்ப்புப் படுக்கை ஈரப்பதமான நுறையுடைய தாள்,மற்றும் வெண் மெழுகு தாள்களை வைத்து நன்றாக மூடி ஈரப்பதமான நிலையை பக்குவப்படுத்தி வைக்கவும்

 

   
 
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2014