முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு

த.வே.ப.க வேளாண் இணைய தளம் :: புதிய தொழில்நுட்பங்கள்

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் மீலியா துபியா (Melia dubia)- தொழில்துறை மரம்
பொது பண்புகள்


மீலியா துபியா (மலை வேம்பு)

மீலியா துபியா (Melia dubia) (மலை வேம்பு) மீலியேசியே (Meliaceae) குடும்ப வகையை சேர்ந்ததாகும். இதன் பழங்குடி இனங்கள் இந்தியா, தென் கிழக்கு ஆசியா, ஆஸ்திரேலியாவில் உள்ளது. இவை விறகிற்காக சாகுபடி செய்யப்படுகின்றது . மீலியா துபியா வேகமாக வளர்ந்து வரும் மர இனங்களில் ஒன்று. மேலும் இது மகாநீம் அல்லது மலை வேம்பு என அழைக்கப்படுகிறது மற்றும் நடவிலிருந்து 6-7 ஆண்டுகளில் அறுவடை செய்ய தயாராகும். இந்த மரத்திற்கு, பிளைவுட் மற்றும் காகித தொழிற்சாலைகளில் நல்ல தேவை உள்ளது.

இம்மரம் 20 மீ உயரம்,  9 மீட்டர் நீளம், மற்றும் 1.2 - 1.5 மீ  சுற்றளவு கொண்டது. பட்டை அடர் பழுப்பு நிறமுடன்,  ஆழமற்ற, மெல்லிய, குறுகலான விரிசல் கீற்றுகள் கொண்டது. இலைகள் இரு வரிகளுடயவை. மலர்கள் மணமான, பச்சை கலந்த வெள்ளை நிறமுடையது, பழங்கள் முட்டை  அல்லது நீள்வட்ட வடிவத்த்தில் 5 அல்லது குறைவான விதைகளை கொண்டிருக்கும்.

பரவல்

இது வெப்ப மண்டல ஈர இலையுதிர்க் காடுகளில் காணப்படுகிறது. சிக்கிம் இமயமலை, வட வங்காளம் மற்றும்  அசாம், ஒரிசாவின் காஸி மலைகள், டெக்கான் மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் 1,500 - 1,800 மீ  உயரத்திலும் இம்மரங்கள் உள்ளன.

சுற்றுச்சூழல் தேவைகள்

இது எல்லா மண் வகைகளிலும் வளரும்.  வளமான மணல், களிமண் வகைகளில் சிறந்த வளர்ச்சி காட்டுகிறது. நாற்றுகள் குறைவான உறைபனியை தாங்கி வளரும். தண்ணீர் தேங்கியுள்ள இடங்களில் மரங்கள் வளர்வதில்லை.

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | பொறுப்புத் துறப்பு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2016