முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு

த.வே.ப.க வேளாண் இணைய தளம் :: புதிய தொழில்நுட்பங்கள்

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் மீலியா துபியா (Melia dubia)- தொழில்துறை மரம்
மரவளர்ப்புக் கலை பண்புகள்


மீலியா நகலிகள்
இயற்கை முறை பரவல்
இயற்கை பரவல் முறை பெரும்பாலும் விதைகள் மூலம் நடைபெறுகிறது. ஆனால் இதில்  முளைப்புத் திறன் குறைவானதாக உள்ளது.

செயற்கை முறை பரவல்:
விதையின் மூலம் பரவல்
நேரடி விதைப்பு அல்லது நடவு முறை மூலம் நாற்றுகளை நாற்றங்காலில் வளர்க்கலாம். மரக்கன்றுகள் நடவு முறையை விட, நேரடி விதைப்பு முறை குறைந்த அளவான முடிவுகளை கொடுக்கிறது.

விதை நேர்த்தி:
விதைகளை வசந்தகாலத்துப் பழங்களில் இருந்து (ஜனவரி- பிப்ரவரி) தேய்த்தல், மற்றும் உலர்த்துதல் மூலம் பெறலாம். இவை சீல் செய்யப்பட்ட டின்கள் சேமிக்கப்படுகின்றன. விதை முளைப்புத் திறன் 25% விட குறைவாக உள்ளது. நாற்றங்காலில், விதைகள் எழுப்பப்பட்ட நாற்றங்கால் படுக்கைகளில் விதைக்கப்டுகின்றன. விதைகளை ஒரு நாள் மாட்டு சாணத்தில் சிகிச்சை செய்வது சிறந்த விதை நேர்த்தி. பின்னர் சிகிச்சை செய்த விதைகளை எழுப்பப்பட்ட நாற்றங்காலில் மேல் விதைக்கப்டுகின்றன. விதைகள் முளைக்க இரண்டு அல்லது மூன்று மாதங்கள் தேவைப்படும். நீர்ப்பாசனம் தவறாமல் செய்ய வேண்டும்.  நாற்று அதன் நாற்றங்கால் நிலை முடிக்க 6- 12 மாதங்கள் எடுக்கும். விதைகளை 100 பிபிஎம் ஜி.ஏ – வில் இரவு முழுவதும் தோய்த்தால் 50% முளைக்கும் திறன் அதிகரிக்கும்.

நகலி செய்யப்பட்ட பரவல்
வனவியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் நகலி செய்யப்பட்ட தொழில்நுட்பதின் மூலம் மீலியா நகலியை உருவாகியுள்ளனர்.

இடைவெளி
கூழ் மரம் : 5’x5’ அல்லது 6’ x 6’
ப்ளைவுட்: 4 மீ x 4 மீ (அல்லது) 5 மீ x 5 மீ
கூழ் ப்ளைவுட்:
அ) 6'x 6 '(முதல் இரண்டு ஆண்டுகள்)
ஆ) 3 வது ஆண்டு தொடக்கத்தில் மாற்று வரிசைகளில் சீரமைத்தல்
இ) 5 வது ஆண்டு தொடக்கத்தில் மரத்தின் மூலைவிட்டங்களில் சீரமைத்தல்
ஈ) 7 வது ஆண்டு தொடக்கத்தில்  இறுதி அறுவடை

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | பொறுப்புத் துறப்பு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2016