த.வே.ப.க வேளாண் இணைய தளம் :: மல்லிகையில் புதிய தொழில்நுட்பங்கள்

மின்னணு நுகரும் தொழில்நுட்பத்தின் மூலம்

மல்லிகை மலரின் நறுமணத்தை மதிப்பீடு செய்தல்

முன்னுரை
ஜாஸ்மினம் ஆரிகுலேட்டம்(முல்லை)
ஜாஸ்மினம் மல்டி புளோரம்(காக்கடா)

மல்லிகை மலரானது உலகிலுள்ள வெப்ப மற்றும் மிதவெப்ப நாடுகளில் பரவிக் காணப்படுகிறது. இந்த மலரானது இந்தியா, தாய்லாந்து , சைனா(சீனா), இலங்கை மற்றும் பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில் வணிக ரீதியாகப் பயிரிடப்படுகிறது. மல்லிகை இனத்தில் 200-க்கு மேற்பட்ட வகைகள் காணப்பட்டாலும் ஜாஸ்மினம் சம்பக்(குண்டுமல்லி), ஜாஸ்மினம் ஆரிகுலேட்டம்(முல்லை), ஜாஸ்மினம் கிராண்டி புளோரம்(பிச்சி), ஜாஸ்மினம் மல்டி புளோரம்(காக்கடா) போன்றவை வணிக ரீதியாக சாகுபடி செய்யப்படுகிறது.

மல்லிகை மலரானது அதிகமான நறுமணத்தைக் கொண்டிருப்பதால், அவை கோயில்களிலும் தெய்வ வழிபாட்டிற்கும், பெண்களின் தலை அலங்காரத்திற்கும் பயன்படுகிறது, மற்றும் இந்த மலர்களிலிருந்து பிரித்தெடுக்கப்படும் வாசனை எண்ணெய்(Essential oil), வாசனை திரவியங்கள் தயாரிக்கப் பயன்படுத்தப்படுகிறது. மல்லிகை மலரிலிருந்து எடுக்கப்படும் வாசனை மெழுகானது(concrete) சோப்பு, தின்பண்டம், ஒப்பனை பொருட்கள் மற்றும் வாசனை திரவியங்கள் தயாரிக்கவும் உபயோகப்படுத்தப் படுகிறது.

இக்காலத்தில் நவீன மயமாக்கப்பட்ட வேதியியல் மற்றும் கருவிகள் துறை ஆராய்ச்சியின் மூலம் இயற்கையில் உள்ள நறுமணக்கலவையை ஆராய்ச்சிக் கூடத்தில் செயற்கையாகத் தயாரிப்பதில் ஓரளவே வெற்றியடைந்துள்ளது. ஆனால் அந்த நறுமணத்தை செயற்கையாகப் பிரித்தெடுக்கவோ மற்றும் முழுமையாகப் பகுப்பாய்வு செய்ய முடிவதில்லை. மலர்களின் நறுமண சாற்றைப் பிரித்தெடுக்க பலவிதமான வழிமுறைகள் உள்ளன. இன்று வரை நறுமணத்தை திறமை வாய்ந்த நபர்கள் அகநிலை முறைப்படியே மதிப்பிடுகிறார்கள், இந்தப் பகுப்பாய்வானது பயிற்சி பெற்ற தொழில்நுட்ப வல்லுநர்களால் வண்ண அச்சு(Chromatography), நிறப்பிரிகை(Spectrography) போன்ற முறைகள் மூலம் கண்டறியப்படுகிறது.

ஆனால், இன்றைய காலகட்டத்தில் மல்லிகை மலர் மற்றும் இதன் வாசனை மெழுகின் தரத்தை குறைந்த நேரத்தில் கண்டறியக்கூடிய ஒரு கருவி தேவைப்படுகிறது. அதே சமயத்தில், இக்கருவி எளிதில் கையாளக்கூடிய, எடுத்துச் செல்லக்கூடிய குறைந்த சக்தியால் இயங்கக் கூடிய மற்றும் களங்களில் பயன்படுத்தக்கூடிய அளவிலும் உள்ள சிறிய கையடக்கக் கருவிகள் இன்றைய காலகட்டத்தில் தேவைப்படுகின்றன.

இந்தக் கருவியானது, மலரின் நறுமணத்தை புறநிலையாக மதிப்பீடு செய்யக்கூடியதாகவும், எளிதில் ஆவியாகக்கூடிய நறுமணக்கலவைகளை உணரும் தன்மை கொண்டதாகவும் மற்றும் நறுமணத்தைத் துல்லியமாகவும், நம்பகத்தன்மையுடன் கணிக்கத்தக்கதாகவும் இருத்தல் அவசியமாகிறது. மேற்கண்ட கருவிகள் உதவியால் இத்தொழில்நுட்பம் ஆய்வு கூடங்களிலிருந்து பெரிய தொழிற்சாலையில் பயன்படக்கூடிய அளவில் சாத்தியமாகிறது.

ஜாஸ்மினம் சம்பக்(குண்டுமல்லி)
ஜாஸ்மினம் கிராண்டி புளோரம்(பிச்சி)
  இதை பற்றிய மேலும் விவரங்களுக்கு கீழே கிளிக் செய்யவும் :  
   
  மின்னணு நுகரும் கருவி உணரிகள் ஒருங்கிணைப்பு தொகுப்பு

த.வே.ப.க - மல்லிகை ஆய்வு

 

ஆதாரம்:
பேராசிரியர் மற்றும் தலைவர்,
மலரியல் துறை,
தமிழ்நாடு வேளாண்மைப்பல்கலைக்கழகம்,
தொலைபேசி எண்: 0422-6611230.
மின்னஞ்சல்: flowers@tnau.ac.in

Updated on June, 2015

 

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு © தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2015