|| | | ||||
 

வெற்றிக் கதைகள் :: வேளாண்மை

tamil English
       

வானிலை
மண் வளம்
நீர் வளம்
விதை
பண்ணை சார் தொழில்கள்
ஊட்டச்சத்து
அறுவடைக்குப்பின் சார்
தொழில் நுட்பம்

உயிரிய தொழில்நுட்பம்
உயிரி எரிபொருள்

 

வேளாண்மை

குஷி தந்த குதிரைவாலி.. கலகலப்பாக்கிய கம்பு

கூடுதல் வருமானம் தரும் கூட்டுப் பயிர்.. மானாவாரியிலும் மனம் நிறைந்த மகசூல்!

ஏக்கருக்கு 74 மூட்டை! இயற்கை விவசாயத்தில்.. இன்னும் ஒரு சாதனை!

பழுதில்லாமல் பலன் கொடுக்கும் பாசுமதி!

செலவில்லாத தீவன சாகுபடி.. ஆரோக்கியத்தோடு அதிக பால்
கவலையில்லாத கால்நடை வளர்ப்பு

இது தாண்டா இயற்கை

இயற்கை மேம்பாட்டுக்கு - சுற்றுச்சூழல் வேளாண்மை

நீர், நிள பிரச்சனைகள் முறியடிக்க அங்கக பயிற்சியும், பல்வகை பயிரிடுதலும்

விவசாயிகளை காக்கும் சுய உதவிக் குழுக்கள்

எட்டு நாளைக்கொரு தண்ணி ஏக்கரக்கு 2,100 கிலோ நெல்

வேளாண்மை - செம்மை நெல் சாகுபடியில் ஒரு பெண்மணியின் முயற்சி

சோக்குப்பம் (sokuppam) கிராமத்தில் செம்மை நெல் சாகுபடியில் ஒரு முன்னோடி விவசாயி

இயற்கை விவசாயம்

கலப்பு பண்ணை திட்டம் ஓர் அனுபவம்


குஷி தந்த குதிரைவாலி.. கலகலப்பாக்கிய கம்பு


சென்னையில் பணியாற்றி வரும் மாவட்ட நீதிபதி சடையாண்டி மற்றும் அவருடைய துணைவியார் சுசீலா ஆகியோர், பணி காரணமாகவும் போதுமான நீராதாரம் இல்லாமையாலும் விவசாயத்தை விட்டு விலகியிருந்தவர்கள். ஆனால் “பசுமை விகடன்” படிக்க ஆரம்பித்தப்பிறகு சொந்த ஊரான மதுரை மாவட்டம், எழுமலை கிராமத்திலிருக்கும் தங்களுடைய நிலங்களின் மீது பார்வையைத் திருப்பி, தற்போது தீவர விவசாயியாகவே மாறியிருக்கின்றனர். குதிரைவாலி, கம்பு, துவரை, மொச்சை, கல்லுப்பயிறு (அழிவின் விளிம்பில் இருக்கும் பயிறு வகைகளில் ஒன்று), பல்லாண்டுத் துவரை, வெற்றிலை வள்ளி, நெல், காய்கறிகள் என இயற்கை முறையில் விவசாயம் செய்து வருகின்றனர்.
சித்திரையில் உழவு போட்டா நிலத்தில் பொன்னு விளையும் என்று சொல்வார்கள். அந்த அளவிற்கு ஒரு சிறப்பு இருக்கு.
எங்க பகுதியில் போதுமான தண்ணீர் வசதியில்லை. சரியா தண்ணீர் கிடைத்தால், இது பொன்னு விளையிற பூமிதான். இந்த நிலங்களில் ஒரு காலத்தில் குதிரைவாலி, சாமை, கம்பு, சோளத்தைத்தான் விதைப்பார்கள்.
எங்ககிட்ட பெரும்பாலும் மானாவாரி நிலம் தான். அதில் மூன்று வருடமாக வெள்ளாமை செய்யவே இல்லை. இப்பத்தான் 20 ஏக்கரில் மட்டும், சட்டி கலப்பையால் கொத்தி விட்டு, 5 கலப்பையால் இரண்டு உழவு போட்டு விட்டுட்டோம். பிறகு ஆடியில் நான்கு உழவு போட்டு விதைத்தோம்.
குதிரைவாலி மானாவாரி நிலங்களுக்கு ஏற்ற பயிர். கிட்டத்தட்ட நூறு நாளில் அறுவடைக்கு வந்துவிடும். ஒன்றிரண்டு மழை கிடைத்தாலே நல்ல மகசூல் கிடைக்கும். நாங்கள் மொத்தம் ஐந்து ஏக்கரில் குதிரைவாலி விதைத்தோம். ஏக்கருக்கு ஐந்து கிலோ விதைகள் வீதம் மொத்தம் 25 கிலோ விதைகள் தேவைப்பட்டன. ‘சால்’ பயிராக ஏக்கருக்கு துவரை நான்கு கிலோ, மொச்சை, தட்டை, கல்லுப் பயிறு எல்லாம் கலந்து நான்கு கிலோவும் விதைத்தோம். ஆறு உழவு போட்டதாலும், மழை சரியாக பெய்யாததாலும் அதிகமாக களை இல்லை. அதனால் நாங்கள் களை எடுக்கவில்லை. நடவுக்குப் பிறகு ஒருமுறை மட்டும் ஏக்கருக்கு 100 கிலோ மண்புழு உரத்தை தூவியதோடு சரி, அடுத்தது அறுவடைதான்.
தட்டையை நிலத்திலேயே விட்டுவிட்டு கதிரை மட்டும் மார்கழி முதல் வாரத்தில் அறுவடை செய்தோம். எங்கள் பகுதியில் தானியத்தைதான் கூலியாக வாங்குகிறார்கள். 5 ஏக்கர் குதிரைவாலி அறுவடை செய்து, டிராக்டர் விட்டு நசுக்கி, தூற்றி எடுத்ததில் கூலி கொடுத்தது போக 23 குவிண்டால் மகசூல் கிடைத்தது. குவிண்டால் 1,650 ரூபாய் விலையில் விற்பனை செய்தோம். செலவு போக 5 ஏக்கரில் 25 ஆயிரம் ரூபாய் கிடைத்தது. சால் பயிராக விதைக்கப்பட்ட துவரை உள்ளிட்ட மற்ற பயிறுகளின் வருமானம் தனி.
தெம்பு கொடுத்த கம்பு!
குதிரைவாலிக்கு செய்தது போலவே உழவு போட்டு, மொத்தம் 15 ஏக்கரில் கம்பு விதைத்தோம். இதுவும் 100 நாள் பயிர் தான். ஏக்கருக்கு ஐந்து கிலோ விதைகள் வீதம், மொத்தம் 75 கிலோ விதைகள் தேவைப்பட்டன. சால் பயிராக ஏக்கருக்கு துவரை நான்கு கிலோ, மொச்சை, தட்டை, கல்லுப் பயிறு எல்லாம் கலந்து 4 கிலோ விதைத்தோம். இடையில் ஒரு முறை 100 கிலோ மண்புழு உரம் மட்டுமே கொடுத்தோம். வேறு எந்த பண்டுதமும் இல்லாமல் ஏக்கருக்கு சராசரியாக ஆறு குவிண்டால் கம்பு கிடைத்தது. மொத்தம் 15 ஏக்கரில் கூலி போக, 87 குவிண்டால் மகசூல் கிடைத்தது. குவிண்டால் 820 ரூபாய் வீதம் விற்பனை செய்தோம். செலவு போக 15 ஏக்கரில் 50 ஆயிரம் ரூபாய் லாபமாகக் கிடைத்தது. சால் பயிராக விதைத்த பயிறு வகைகளின் வருமானம் தனி.
பலே பல்லாண்டு துவரை!
மொச்சை 2 டன் மகசூல் கிடைத்தது. துவரையை இன்னும் அறுவடை செய்யவில்லை. காய் நல்லா பிடிச்சு இருக்கு. அறுவடை முடிஞ்சதும் தான் எவ்வளவு கிடைக்கும் என்று தெரியும். எங்களுக்கு தண்ணீர் வசதியோடு சிறிது இடம் இருக்கு. ஐந்து சென்ட்டில் 100 கிராம் பல்லாண்டுத் துவரை விதையை மூன்று அடி இடைவெளியில் நட்டு அதில் ஊடுபயிராக வெங்காயம், வெற்றிலை, வள்ளிக் கிழங்கு, அகத்தி, கீரை, பாசிப் பயிறு நடவு செய்தோம். பல்லாண்டுத் துவரை, செடியே ஒடிந்து விழுவது போல் காய் பிடித்திருந்தது.
50 சென்டில் மண்ணச்சநல்லூரி பொன்னியை நட்டி இருக்கோம். வேப்பிலை, கொழிஞ்சி, ஆவாரை தழைகளை நிலத்தில் போட்டு மிதிச்சுதான் நாத்து நட்டோம். நடவுக்குப் பிறகு ஒரு தடவை 50 கிலோ மண்புழு உரம், ஒரு மாதத்தில் 50 கிலோ வேப்பம் புண்ணாக்கு, 50 கிலோ கடலைப் புண்ணாக்கு, என்று இவை அனைத்தையும் சிறிது சிறிதாகக் கொடுத்தோம். கதிர் வைத்த பின்பு மீன் அமினோ அமிலம் ஒரு தடவை அடித்தோம். பயிறு தெளிவாக இருக்கிறது.
உழவு மட்டும் போட்டு விதைத்தாலே மகசூல் தருகிற இந்த மாதிரி சிறுதானியங்களைத்தான் இனிமே தொடர்ந்து விளைவிக்கப்போகிறோம். குதிரைவாலி மாதிரியான சிறுதானியங்களுக்கு அதிக விலை கிடைக்கிறது. அதற்கு தேவையும் ஏற்பட்டிருக்கிறது.
தொடர்புக்கு:
திருமதி. சுசீலா,
எழுமலை கிராமம்,
மதுரை மாவட்டம்.
அலைபேசி: 94423 - 63064


கூடுதல் வருமானம் தரும் கூட்டுப் பயிர்.. மானாவாரியிலும் மனம் நிறைந்த மகசூல்!

 

வழக்கமாக மானாவாரி விவசாயம் என்றாலே குறைந்த மகசூல், குறைந்த லாபம் மட்டும்தான் கிடைக்கும் என்று சொல்லும் விவசாயிகள் தான் அதிகம். இவர்களுக்கு நடுவே ஒரே பயிரை சாகுபடி செய்யாமல் கொஞ்சம் மாற்றி, பல பயிர் சாகுபடி செய்தால் நல்ல வருமானத்தை எடுக்கலாம் என்கிறார் அரியலூர் மாவட்டம், கீழபழுருக்கு அருகில் உள்ள கோக்குடியைச் சேர்ந்த தேவசகாயம்.

சொந்த நிலம் ஒரு ஏக்கர், குத்தகை நிலம் ஒரு ஏக்கர் என்று மொத்தம் இரண்டு ஏக்கரில் வெள்ளாமை செய்கிறேன். சொந்த நிலத்தில் தண்ணீர் வசதி இருப்பதால் நெல், செண்டுமல்லி, காக்கரட்டான் மூன்றையும் சாகுபடி செய்து கொண்டிருக்கிறேன். குத்தகை நிலம் மானாவாரி பூமி என்பதால் ஒரு போகம் மட்டும்தான் விவசாயம் செய்ய முடியும். அதில் வெள்ளைச் சோளம், துவரை, செண்டுமல்லி மூன்றையும் சாகுபடி செய்து கொண்டு இருக்கேன். சின்ன இடமாக இருந்தாலும், மூன்று பயிர் வெள்ளாமை என்பதால் நல்ல வருமானத்தைப்பார்க்க முடிகிறது.

வெள்ளைச் சோளம், துவரை, செண்டுமல்லி மூன்றிற்கும். வெம்மண், கரிசல் மண் வகைகள் ஏற்றது. மானாவாரி சாகுபடிக்கு ஆடிப் பட்டம்தான் சிறந்தது. ஆடி, ஆவணி, மாதங்களில் மழை பெய்து நிலம் ஈரமான பிறகு, சட்டிக் கலப்பை மூலம் உழுது மண்ணின் இறுக்கத்தைக் குறைக்க வேண்டும். பின் களைகள் நீங்கும் அளவிற்கு மூன்று உழவு போட வேண்டும்.

பின் 9 கிலோ வெள்ளைச் சோளம், 4 கிலோ துவரை இரண்டையும் சேர்த்து விதைத்து மண் மூடுமாறு ஒரு உழவு போட வேண்டும். நிலத்தின் ஈரப் பதத்தைப் பொறுத்து, ஒரு வாரத்தில் முளைவிட்டு விடும்.

செண்டுமல்லிக்கு நாற்று நடவு என்பதால் சோளம், துவரை விதைகளை விதைக்கும் சமயத்திலேயே 15 அடிக்கு 10 அடி அளவில் தனியாக நாற்றுக்காகப் பாத்தி அமைத்துக் கொள்ள வேண்டும். அதில் 4 கூடை எருவைக் கொட்டி கலைத்து விட்டு, பின் செண்டுமல்லி விதையைத் தூவி (ஏக்கருக்கு அரை கிலோ விதைகள்) எருவையும் மண்ணையும் கலந்து விதைகள் மீது தூவி மூடுமாறு செய்ய வேண்டும். பின் தினமும் பூவாளியால் தண்ணீர் தெளித்து வர வேண்டும். இருபது நாட்களில் அது முளைத்து வந்துவிடும்.

இந்த சமயத்தில் சோளம், துவரை இரண்டும் ஒரு அடி உயரத்திற்கு வளர்ந்திருக்கும். இதில் ஒரு முறை களை எடுத்து, 50 கிலோ 20 : 0 : 15 என்ற கலப்பு உரத்தை பரவலாகத் தூவ வேண்டும். இந்த சமயத்தில் ஒரு மழை பெய்திருந்தால் தான் செண்டுமல்லி நாற்றை நடவு செய்ய முடியும். எப்படியாவது ஒரு மழை தவறாமல் கிடைத்துவிடும். அந்த மழை பெய்த பிறகு செடிக்குச் செடி இரண்டரை அடி இடைவெளி இருக்குமாறு ஒன்றிரண்டு செண்டுமல்லி நாற்றுகளைச் சேர்த்து சேர்த்து நடவு செய்ய வேண்டும் (ஒரு ஏக்கரில் பத்தாயிரம் செடிகள் வரை நடலாம்) இரண்டிரண்டாக நடவு செய்யும் போது ஏதாவது ஒரு செடி கண்டிப்பாக முளைத்து விடும். சமயங்களில் இரண்டு செடிகளும் கூட நன்றாக வளர்ந்து பூ எடுக்கும். இதன் பிறகு களைகள் முளைத்தாலும் அதைப் பற்றி கவலையில்லை. இயற்கை மனது வைத்து மழை பொழிந்தால் மட்டும் போதும். பெரிதாக பூச்சித் தாக்குதல்களும் இருக்காது என்பதால் பூச்சிக்கொல்லிகள் அடிக்க தேவையில்லை.
சோளம் நடவு செய்த 60 – ம் நாள் முதல் 70 நாட்களுக்குள் பூ எடுத்து 90 – 100 நாட்களுக்குள் முற்றிவிடும். அதன் பிறகு சோளத்தை அறுவடை செய்து குச்சி வைத்து தட்டியோ, தார்ச் சாலையில் போட்டு அடித்தோ சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும்.

ஒரு ஏக்கரில் வெள்ளைச் சோளம், துவரை, செண்டுமல்லி
சாகுபடிக்கு ஆகும் செலவு – வரவு கணக்கு
விவரம் செலவு வரவு
குத்தகை 600  
உழவு 2,000  
விதைச் சோளம் 120  
துவரை விதை 120  
விதைப்பு 150  
பூ விதை 500  
பூ நடவு 1,000  
உரம் 500  
பூ அறுவடை 560  
சோளம் அறுவடை 800  
துவரை அறுவடை 400  
பூ மூலம் வரவு   3,000
சோளம் வரவு   4,800
துவரை வரவு   8,000
மொத்தம் 6,750 15,800
நிகர லாபம்   9,050
பூ சராசரியாக கிலோ ரூ. 30 வீதம் 100 கிலோவிற்கும், சோளம் சராசரியாக மூட்டை
ரூ.800 வீதம் 6 மூட்டைகளுக்கும், துவரை கிலோ ரூ. 40 வீதம் 200 கிலோவிற்கும்
கணக்கிடப்பட்டுள்ளது.

செண்டுமல்லி நடவு செய்த 60 – ம் நாளில் பூ எடுக்க ஆரம்பித்துவிடும். அதிலிருந்து நான்கு நாட்களுக்கு ஒரு தடவை என்ற கணக்கில் ஒரு மாதத்திற்கு அறுவடை செய்யலாம். ஒரு முறைக்கு 10 முதல் 20 கிலோ வரை கிடைக்கும்.

துவரை நடவு செய்த நான்கரை மாதத்திற்குப் பிறகு பூ எடுத்து பிஞ்சுவிடும். ஆறு மாதத்திற்குப் பின்தான் அறுவடைக்கு வரும் அந்த சமயங்களில் ஒருவேளை அதிக மழை பெய்தால், நிலத்தில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். துவரை முற்றியவுடன், அறுத்து கட்டிக்கட்டி செங்குத்தாக நிற்க வைத்தால், காய்ந்துவிடும். பின் அப்படியே தரையில் அடித்தால் துவரை உதிர்ந்துவிடும். துவரை அறுவடை முடிந்த பிறகு எஞ்சியிருக்கும் சோளத் தட்டையையும் அறுத்து எடுத்து ஆடு, மாடுகளுக்கு உணவாகப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

சோளத்தை சுத்தப்படுத்தினால் 600 கிலோ (1 ஏக்கரில்) கிடைக்கும். ஒரு மூட்டை (100 கிலோ) 700 ரூபாயில் இருந்து 1000 ரூபாய் வரை விற்பனையாகிறது. ஏழு அறுவடையும் சேர்த்தால் மொத்தம் 100 கிலோ செண்டுமல்லி கண்டிப்பாக கிடைக்கும். கிலோ 10 ரூபாயில் இருந்து 50 ரூபாய் வரைக்கும் விற்பனையாகின்றது. துவரையை சுத்தப்படுத்தினால் 200 கிலோ (1 ஏக்கரில்) கிடைக்கும். கிலோ 40 ரூபாய் வரை விற்பனை ஆகின்றது. எப்படியும் தேவையான அளவு மழை பெய்தால் மூன்றையும் சேர்த்து 9,000 ரூபாய்க்கு குறையாமல் லாபம் கிடைக்கும். அந்த சமயத்தில் பூ, பருப்பு இதற்கெல்லாம் தட்டுப்பாடு இருந்தால் லாபம் இன்னும் கூடும்.
மானாவாரி நிலம் என்பதால் குறைந்த நிலத்தில் விவசாயம் செய்வதுதான் நல்லது. அதேபோல் பெரும்பாலும் தேவையில்லாமல் வேலைக்கு ஆட்களைக் கூப்பிடாமல் நம் குடும்பத்தில் இருப்பவர்களே வேலையை செய்து கொண்டால் இன்னும் நிறைய செலவை மிச்சப்படுத்த முடியும். கால்நடைகளுக்கு உணவும் கிடைத்துவிடும். மானாவாரி வெள்ளாமையில் விளைவதை பெரும்பாலும் வீட்டுத் தேவைக்குதான் வைத்திருப்பார்கள். அது போக மிச்சத்தைதான் விற்பார்கள். அது போல தான் நானும் தேவைக்குப் போக மிச்சத்தைதான் விலைக்குக் கொடுப்பேன்.

தொடர்புக்கு:
தேவைசகாயம்,
கீழபழுருக்கு அருகில்,
அரியலூர் மாவட்டம்.
அலைபேசி: 99651 - 84437


ஏக்கருக்கு 74 மூட்டை! இயற்கை விவசாயத்தில்.. இன்னும் ஒரு சாதனை!

கர்னல். தேவதாஸ், “அடிப்படையில் நான் ஒரு இன்ஜினியர். இரண்டு முதுகலைப் பட்டங்களை வாங்கின நான், தமிழக பொதுப்பணித் துறையில் வேலை பார்த்தேன். பிறகு, இந்திய ராணுவத்தில் சேர்ந்து கரடனல் பொறுப்பு வரைக்கும் உயர்ந்தேன். பிறகு, விருப்ப ஓய்வு வாங்கிக்கொண்டு வந்து, சிறிது நிலத்தை வாங்கி விவசாயம் செய்யத் தொடங்கினேன்.

2007 ம் வருடம் சென்னையில் தமிழக அரசு நடத்தின விவசாயக் கண்காட்சியில் கலந்துகிட்ட பிறகு தான் இயற்கை விவசாயத்தைப் பற்றியும், பசுமை விகடன் பற்றியும் தெரியவந்தது. ‘ஜீரோ பட்ஜெட்’ பயிற்சி வகுப்புக்களில் கலந்துகிட்டு, ஜீரோ பட்ஜெட் முறை விவசாயத்திற்கு மாறிவிட்டேன். சென்ற வருடமே ‘அங்கக வேளாண்மை விவசாயி’ என்று முறைப்படி அரசாங்கத்திடம் பதிவும் செய்து கொண்டேன்.
கிச்சடிச் சம்பா நெல் சாகுபடியில் ஏக்கருக்கு 74 மூட்டை மகசூல் எடுத்து ‘அங்கக வேளாண்மையில் மாநிலத்திலேயே அதிக மகசூல் எடுத்தவர்’ என்று பாராட்டி முதல் பரிசை வழங்கியிருக்கிறது தமிழக வேளாண்மைத் துறை.

தொடர்ந்து காய்கறி உள்பட நிறைய பயிர்களை இயற்கை முறையில் செய்து கொண்டிருக்கிறேன். அதன் மூலமாக அற்புதமான விளைச்சல் கிடைக்கிறது. இந்த விஷயத்தை விவசாய அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர்கள் என்று அனைவரிடமும் கூறினேன். ஆச்சர்யம் அடைந்த மாவட்ட ஆட்சியர் ஜெயராமன் உடனடியாக என்னுடைய பண்ணையிலேயே இயற்கை விவசாயக் கருத்தரங்கம் நடத்த ஏற்பாடு செய்வதேடு உதவி கலெக்டரையும் அனுப்பி வைத்தார். நான் மேற்கொண்டிருக்கின்ற இயற்கை விவசாயத்தை நேரில் பார்த்துத் தெரிந்து கொள்ள மாவட்ட வேளாண்மைப் பயிற்சி அரங்கில் இருந்து இரண்டு குழுக்கள் வந்து சென்றது. பிறகு உழவர் சந்தையில் இயற்கைக் காய்கறிகளை விற்பனை செய்வதற்காக ஒரு கடையையும் கொடுத்தார்கள். இது எல்லாம் நான் நேசிக்கின்ற என் இயற்கை விவசாயத்திற்கு கிடைத்த மரியாதை.

அரிசியா விற்றால்தான் அதிக லாபம்!

“சென்ற வருடம் பிசான பருவத்தில் (நவம்பர் முதல் பிப்ரவரி வரை) பத்து ஏக்கர் நிலத்தில் ‘கிச்சடிச் சம்பா’ பயிரிட்டிருந்தேன். அதுதான் அமோக மகசூலை அள்ளிக் கொடுத்து, முதல் பரிசையும் வாங்கிக் கொடுத்திருக்கு. ஒற்றை நாற்று முறையில் சாகுபடி செய்ய வேண்டும் என்று நினைத்தேன். ஆனால், நடவு நேரத்தில் ஆட்கள் கிடைக்கமாட்டார்கள் என்று, வழக்கமான முறையிலேயே நடவு செய்தேன். ஒற்றை நாற்று முறையில் சாகுபடி செய்திருந்தால் இன்னும் அதிக மகசூல் பெற்றிருக்கலாம்.
நெல்லை அப்படியே விற்காமல் அரிசியா மாத்தித்தான் விற்பனை செய்றது என்னுடைய வழக்கம். நெல்லை அரிசியாக மாற்றும்போது மொத்த நெல்லில் 60% அரிசி கிடைக்கும். அந்த அரிசியை உழவர் சந்தையில் இருக்கிற கடையில் வைத்து கிலோ 40 ரூபாய் என்று விற்பனை செய்றேன். அதனால் எனக்குக் கூடுதலாக லாபம் கிடைக்கிறது. பாரிசு பெறும் அளவிற்கு அதிக மகசூல் பெற்றுத் தந்த தன்னுடைய சாகுபடித் தொழில்நுட்பம் பற்றிக் கூறினார்.

விதைநேர்த்தி அவசியம்!

“நிலத்தை உழவு செய்து தானிய வகைகள், எண்ணெய் வித்துக்கள், பயிறு வகைகள், கொளுஞ்சி, சணப்பு விதைகளைக் கலந்து ஏக்கருக்கு இருபத்தைந்து கிலோ வீதம் விதைக்க வேண்டும். அவை பூக்கும் சமயத்தில் அப்படியே மடக்கி உழுது, ஆட்டுக்கிடை போட்டு, மறுபடியும் உழவு செய்ய வேண்டும். ஏக்கருக்கு நூறு கிலோ மட்கிய தொழுவுரம், பத்து கிலோ கனஜீவாமிர்தம், ஆகியவற்றை அடி உரமாக போட்டு, தொழி கலக்க வேண்டும். 20 கிலோ நெல் விதையை பீஜாமிர்தத்தில் விதை நேர்த்தி செய்து நாற்றுப் பாவ வேண்டும். நாற்றுகளைப் பதினைந்து நாளில் பறித்து, வழக்கமான பாணியில் நடவு செய்ய வேண்டும்.

ஏக்கருக்கு 74 மூட்டை!

நடவு செய்த 15, 30, 45 மற்றும் 60 – ம் நாட்களில் ஏக்கருக்கு 200 லிட்டர் ஜீவாமிர்தத்தைப் பாசனத் தண்ணீரில் கலந்து கொடுக்க வேண்டும். அதோடு, 15 நாட்களுக்கு ஒரு முறை 5 லிட்டர் ஜீவாமிர்தத்தை விசைத் தெளிப்பான் மூலமாக தெளிக்க வேண்டும். மொத்தம் மூன்று முறை இப்படி தெளித்தால் 100 லிட்டர், இரண்டாவது தெளிப்பில் 150 லிட்டர், மூன்றாவது தெளிப்பின் போது 200 லிட்டர் என்கிற அளவில் தண்ணீர் எடுத்துக் கொண்டு அதில் ஜீவாமிர்தத்தைக் கலந்து தெளிக்க வேண்டும். இப்படிச் செய்தால் நோய்த் தாக்குதலே சுத்தமாக இருக்காது.

பயிர் பொதிப் பருவத்தை (பால் பருவம்) அடைந்ததும், இரண்டரை லிட்டர் புளித்த மோர், 250 கிராம் சூடோமோனஸ் இரண்டையும் 100 லிட்டர் தண்ணீரில் கலந்து விசைத் தெளிப்பான் மூலம் தெளிக்க வேண்டும். பின்னர் ‘காய்ச்சலும் பாய்ச்சலுமாக’ பாசனம் செய்தால் போதும். இடையில் இரண்டு முறை கைக் களை மட்டும் எடுக்க வேண்டியிருக்கும். இதையெல்லாம் செய்தால் பயிரின் வளர்ச்சி அதிமாக இருக்கும்.

சாகுபடித் தொழில்நுட்பங்களை பார்த்த வேளாண்மை அதிகாரிகள் ‘அங்கக பயிர் விளைச்சல் போட்டியில் கலந்து கொள்ளுமாறு கூறினார்கள்’. ஏப்ரல் மூன்றாம் தேதி அன்று அரசு அதிகாரிகள் அரசு சாராத பிரதிநிதிகள் அனைவரும் கூடிநிற்க கிச்சடிச் சம்பா அறுவடை நடந்தது. ஒரு ஹெக்டருக்கு 11,215 கிலோ மகசூல் கிடைத்தது. ஏக்கருக்கு 4,486 கிலோ! மூட்டையாக கணக்குப் போட்டால் ஏக்கருக்கு 74 மூட்டை (60 கிலோ மூட்டை). இது வழக்கமான மகசூலை விட மிக மிக அதிகம்.

இயற்கை முறையில் ஒரு ஏக்கரில் கிச்சடிச் சம்பா சாகுபடி செய்வதற்கான செலவு, வரவு கணக்கு

விவரம்

செலவு

வரவு

விதை

750

 

உழவு

1,000

 

கிடை

800

 

தொழுவுரம் மற்றும் உயிர் உரங்கள்

500

 

கொம்புத் தூள்

1,800

 

தொழி கலக்க

1,300

 

வரப்புக் கட்ட

700

 

நடவு

1,750

 

களை

1,200

 

இடுபொருள் தெளிப்பு கூலி

600

 

தண்ணீர் கட்ட

2,100

 

அறுவடை

2,300

 

அரிசியாக மாற்றினால் 2,694 கிலோ x 40 ரூபாய்

 

1,07,760

மொத்தம்

14,800

1,07,760

நிகர லாபம்

 

92,960

தேவதாஸ் நெல்லை அரிசியாக மாற்றி விற்கிறார். அதற்கான அரவை கூலியை, தவிடு மற்றம் உமி ஆகியவையே ஈடுகட்டி விடுவதால் அது கணக்கில் சேர்க்கப்படவில்லை. ஒரு ஏக்கரில் இவருக்கு 74 மூட்டைகள் கிடைத்த போதும் இவருக்கு கூடுதல் வருவாய் கிடைத்திருப்பதற்கு கிச்சடி சம்பா எனும் உயர் ரக அரிசியும் ஒரு காரணம். இடுபொருட்களைப் பொறுத்த வரை தோவதாஸீக்கு 3,100 ரூபாய்தான் செலவு.

தொடர்புக்கு:
திரு. கர்னல். தேவதாஸ்,
என்.ஜி.ஓ. காலனி,
திருநெல்வேலி.
அலைபேசி: 94431 - 55309


பழுதில்லாமல் பலன் கொடுக்கும் பாசுமதி!

பாசுமதி நெல்லை விளைவித்திருக்கும் அரியலூர் மாவட்டம், செம்மியக்குடியைச் சேர்ந்த விவசாயி ரமேஷ் இதை முழுக்க முழுக்க இயற்கை முறை விவசாயத்தின் மூலமே சாதித்துக் காட்டியிருக்கிறார்.
எனக்கு எட்டு வயதாகிய பொழுதே எனது அப்பா இறந்துவிட்டார். இருக்கின்ற நான்கு ஏக்கரில் விவசாயம் செய்து தான் என் அம்மா என்னை வளர்க்க வேண்டிய கட்டாயம். நான் பத்தாம் வகுப்பு வரை பயின்றேன். பின் முழுமையாக விவசாயத்தில் இறங்கிவிட்டேன். கரும்பு, நெல், வெங்காயம் என்று பருவத்திற்கு ஏற்றது போல், மாற்றி சாகுபடி செய்வேன். ஆரம்பத்தில் தோட்டத்தில் விளைந்த கரும்புகளை வெல்லமாக காய்ச்சி விற்றுக்கொண்டிருந்தேன். பக்கத்திலேயே கரும்பு ஆலை வந்துவிடவும் அங்கே கொடுக்க ஆரம்பித்தேன். ஆனால் அது எல்லாம் கட்டுப்படியாகவில்லை. அதனால் கரும்பை விட்டுவிட்டேன்.

96 – ம் வருடம் எங்கள் ஊரில் உழவர் மன்றம் தொடங்கினோம். அதன் மூலமாக விவசாயப் பயிற்சிகளில் கலந்து கொள்கிற வாய்ப்பு கிடைத்தது. பிறகு இயற்கை விவசாயப் பயிற்சிகள் கூட்டங்களுக்கும் போக ஆரம்பித்தேன். பசுமை விகடன் வந்த பின்பு அதில் வருகிற இயற்கை விவசாயக் கட்டுரைகளையெல்லாம் படித்து தெரிந்துகொண்டு முழுமையான இயற்கை விவசாயத்திற்கு மாறிவிட்டேன். ஒருமுறை நம்மாழ்வாருடைய பயிற்சியில் கலந்து கொண்டபொழுது தான் பாசுமதி ரகத்தைப் பற்றித் தெரிந்து கொண்டேன். தமிழ்நாட்டில் இதை அதிகமாக யாரும் விளைவிப்பது இல்லை என்று கேள்விப்பட்டவுடனே நாம் அதை விளைவித்துப் பார்த்துவிடனும் என்கிற ஆசை வந்தது. இரண்டு கிலோ விதை நெல்லை தேடிப் பிடித்து வாங்கிவிட்டேன்.
போன வருடம் 50 சென்ட் நிலத்தில் ஒற்றை நாற்று முறையில் பாசுமதியை சாகுபடி செய்தேன். 15 மூட்டை (60 கிலோ மூட்டை) விளைச்சல் கிடைத்தது. இப்பொழுது 35 சென்டில் நடவு செய்திருக்கேன். அது அறுவடைக்குத் தயாராக விளைந்து நிற்கிறது.

மேட்டுப்பாத்தியில் நாற்று!

பாசுமதி ரக நெல் 130 நாள் வயது கொண்டது. இதற்கு சொர்ணவாரிப் பட்டமும் (மார்கழி, தை), சம்பா பட்டமும் (ஆவணி, புரட்டாசி) ஏற்றது. உவர் மண் தவிர்த்து மற்ற அனைத்து வகை நிலத்திலும் நன்கு வளரும். 20 அடி நீளும், 4 அடி அகலத்தில் மேட்டுப்பாத்தி அமைத்து மண் வெட்டியால் களைகளைக் கொத்தி பொலபொலப்பாக மாற்றிக் கொள்ள வேண்டும். அதில் ஒரு கூடை எருவைச் சேர்த்துக் கிளறி சமப்படுத்தி, ஊறவைத்த இரண்டாம் கொம்பு விதையை விதைக்க வேண்டும் (35 சென்ட் நிலத்திற்கு 2 கிலோ விதை தேவைப்படும்). ஐந்து நாட்களுக்குத் தொடர்ந்து பூவாளியால் நீர் விட வேண்டும். எட்டாம் நாள் பத்து லிட்டர் நீரில் 300 மில்லி பஞ்சகாவ்யாவைக் கலந்து தெளிக்க வேண்டும். 15 – ம் நாளில் நாற்று தயாராகிவிடும்.

அடியுரமாக ஆட்டுச் சாணம்!

நாற்று விட்ட அன்றே, நடவுக்கான நிலத்தையும் தயாரிக்க வேண்டும். நான்கு வண்டி எருவைக் கொட்டிக் களைத்து இரண்டு உழவு செய்ய வேண்டும். பின் தண்ணீர் கட்டி சேறாக மாற்றி வைத்தால் நாற்று தயாராவதற்குள களைகள் அழுகி உரமாகி விடும். நாற்றுவிட்ட அன்றே அடியுரத்திற்காக 50 கிலோ ஆட்டுச்சாணம் 1 கிலோ பாஸ்போ – பாக்டீரியா, 1 கிலோ சூடோமோனஸ், 1 கிலோ அசோஸ்பைரில்லம், 13 லிட்டர் கோமூத்திரம் ஆகியவற்றைக் கலந்து, நிழலில் குவித்து சணல் சாக்கில் மூடி வைக்க வேண்டும். நாற்று தயாரான பின் இதை நிலத்திலிட்டு முக்கால் அடிக்கு ஒரு நாற்று வீதம் நடவு செய்ய வேண்டும்.

கோனோ வீடரில் களையெடுத்தால் அதிக தூர்கள்!

நடவு செய்த 15, 30, 45 – ம் நாட்களில் நிலத்தில் ஒரு அங்குலம் உயரத்திற்கு தண்ணீர் கட்டி கோனோவீடர் மூலம் களை எடுக்க வேண்டும். இப்படிச் செய்வதன் மூலம் பயிரின் பக்க வேர்கள் அறுபட்டு, அதிகத் தூர்கள் பிடிக்கும். 15 – ம் நாள், 10 லிட்டர் நீருக்கு 300 மில்லி பஞ்சகாவ்யாவைக் கலந்து தெளிப்பான் மூலம் தெளிக்க வேண்டும். 22 – ம் நாள் தொட்டிக்கு 300 மில்லி வேப்பங்கொட்டைக் கரைசலைக் கலந்து தெளிக்க வேண்டும். இது இலைப்பேன் இலைச்சுருட்டுப் புழு ஆகியவற்றைக் கட்டுப்படுத்தும் (5கிலோ வேப்பங்கொட்டைப் பருப்பை இடித்து, ஆறு லிட்டர் நீரில் 5 நாட்கள் ஊறவைத்து, துணியில் வடிகட்டினால் வேப்பங்கொட்டைக் கரைசல் தயார்).

சிம்புக்கு 200 மணிகள்!

30 – ம் நாளில் முட்டை ரசம்; 40 மற்றும் 68 – ம் நாட்களில் மீன் அமிமோஅமிலம்; கதிர் விடும் சமயத்தில், தேமோர்க் கரைசல் ஆகியவற்றை முறையே தெளிக்க வேண்டும். இடையில் குருத்துப்பூச்சித் தாக்கினால் இலுப்பை எண்ணெய் மூலம் அகல் விளக்கேற்றி, விளக்கின் கீழ்ப்பகுதியில் நீரையும் மண்ணெண்ணையும் கலந்து வைத்தால் ஒளியில் பூச்சிகள் கரைப்பட்டு மண்ணெண்ணையில் விழுந்து இறந்து விடும். வேறு பூச்சிகள் தாக்கினால் பூண்டுக் கரைசலைத் தெளிக்கலாம். 105 – ம் நாளிலிருந்து கதிர் முற்ற ஆரம்பித்து 130 – ம் நாளில் அறுவடைக்குத் தயாராகி விடும். தூருக்கு 35 முதல் 40 சிம்புகளும் சிம்புக்கு 180 முதல் 200 நெல் மணிகளும் இருக்கும். கதிரின் அடிபாகத்தில் இருக்கும் நெல்மணிகள் இளம் பச்சையாக இருக்கும் சமயத்திலேயே அறுவடை செய்திடல் வேண்டும்.

மதிப்புக் கூட்டினால் கூடுதல் லாபம்!

இயந்திரத்தின் மூலம் கதிரடிச்சா, பாசுமதி நெல் அதில் சிக்கிக் கொள்கிறது. இதனால் கையால் அடிப்பதுதான் நல்லது. 35 சென்ட் நிலத்தில் 600 கிலோ நெல் கிடைக்கும். பாசுமதி ரகத்தை ஆறு மாதம் வைத்திருந்து அரிசியாக அரைத்தால் தான் சுவையும், மணமும் கிடைக்கும். இயற்கையில் விளைந்தால் பாசுமதி நெல் என்பதால் கிலோ 21 ரூபாய் 50 பைசா கொடுத்து வாங்கிக்கொள்கிறார்கள். நாமே அரைக்கும்போது 360 கிலோ அரிசி கிடைக்கும். ஒரு கிலோ அரிசி நாற்பது ரூபாயிலிருந்து ஐம்பது ரூபாய் வரைக்கும் விலை போகும்.

35 சென்ட் நிலத்தில் பாசுமதி சாகுபடி செய்ய ஆகும் செலவு – வரவு

விவரம்

செலவு

வரவு

உழவு

1,000

 

விதை நெல்

80

 

நிலம் தயாரிப்பு

720

 

நடவு

400

 

இடுபொருட்கள்

1,600

 

களை

550

 

அறுவடை

1,300

 

அரைக்க

1,500

 

அரிசி மூலம் வரவு

 

14,400

தவிடு மூலம் வரவு

 

1,200

மொத்தம்

7,150

15,600

நிகர லாபம்

 

8,450

1 கிலோ அரிசி 40 ரூபாய் என்றும், 1 கிலோ தவிடு 5 ரூபாய் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது.

சென்ற வருடம் அறுவடை செய்த பாசுமதி நெல் என்னிடம் இருப்பதை ‘பசுமை விகடன் சந்தை’ மூலமாக தெரிந்து கொண்ட ஒரு அமைப்பு அதை அவலாக மாற்றிக் கேட்டார்கள். அதை இடித்தபொழுது 100 கிலோவிற்கு 60 கிலோ அவல் கிடைத்தது. கிலோ ஐம்பது ரூபாய் என்று கொடுத்தேன். நெல்லாக விற்காமல் அரிசியாகவோ, அவலாகவோ மாற்றி விற்கும்போது அதிக லாபம் கிடைப்பதால், மீதமுள்ள நெல்லை அரிசியாக அரைத்து தான் விற்கப்போகிறேன்.

தொடர்புக்கு:
திரு. ரமேஷ்,
செம்மியக்குடி,
அரியலூர் மாவட்டம்.
அலைபேசி: 96558 - 38339


செலவில்லாத தீவன சாகுபடி.. ஆரோக்கியத்தோடு அதிக பால்
கவலையில்லாத கால்நடை வளர்ப்பு:

பருவ நிலை மாறுதல்களால் விவசாயம் பொய்த்துப் போனாலும், தவறாமல் வருமானத்தைக் கொடுப்பது கால்நடை வளர்ப்புதான் என்றாலும் திட்டமிட்ட தீவன மேலாண்மையும், நோய் மேலாண்மையும் இருந்தால் தான் கால்நடை வளர்ப்பில் லாபத்தை சம்பாதிக்க முடியும். இதை எல்லாம் நான் தவறாமல் பிடிப்பதால் தான் என்னுடைய ஆடு, மாடுகள் எந்த நோயும் இல்லாமல் ஆரோக்கியமாக திடக்காத்திரமாக இருந்து எனக்கு இலாபத்தை கொடுத்துக் கொண்டிருக்கு என்று தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி ஆதிநாராயணன், பசுந்தீவனத்திற்காக தனித்தோட்டத்தையே பராமரித்துக் கொண்டிருக்கிறார்.

பட்டுக்கோட்டை செல்லும் சாலையில் உள்ள பாப்பா நாடு அருகிலுள்ள ஆலத்தன்குடிகாடு கிராமத்தில் தான் இருக்கிறது. அந்த தீவனத் தோட்டம். மல்பெரி, வேலிமசால், சவுண்டல் (சுபாபுல்) என ஏகப்பட்ட தீவனப்பயிர்கள் தளதளவென நின்று கொண்டிருக்கின்றன இரண்டரை ஏக்கர் தோட்டத்தில்.
பத்து ஆண்டுகளுக்கு முன் நூறு ஆடுகளை வைத்திருந்தேன். அதற்காக உருவாக்குனது தான் இந்தத் தீவனத் தோட்டம். 20 சென்ட் நிலத்தில் தண்ணீர்ப்புல் (எருமைப்புல்) 230 சென்டில் மல்பெரி, அதற்கிடையில் ஊடுபயிராக முயல்மசால், வேலிமசால், கலப்பைக் கோணியம், சங்குப்புஷ்பம் எல்லாம் இருக்கிறது. வேலி ஓரத்தில் 500 சவுண்டல் மரம் இருக்கு. இந்தத் தோட்டத்தை வைத்து பத்து பதிணைந்து மாடுகள், கொஞ்சம் ஆடுகள் வளர்க்க முடியும்.

ஆறு வருடத்திற்கு முன்பு வேலையாட்கள் பிரச்சனை வந்ததால், ஐந்தாறு ஆட்டை மட்டும் வைத்துக் கொண்டு மீதத்தை விற்றுவிட்டேன். இப்பொழுது என்னிடம் இரண்டு கறவை மாடுகளும் ஐந்து ஆடுகளும் தான் இருக்கிறது. என் ஆடு, மாடுகளுக்குப் போக மீதமுள்ள தீவனத்தை பக்கத்து விவசாயிகளுக்கு இலவசமாக கொடுத்துக் கொண்டிருக்கேன். கொஞ்சத்தை அப்படியே வெட்டி, தோட்டத்தில் மூடாக்காக போட்டு இருக்கேன். அப்படியிருந்தும் மல்பெரி நிறைய இருப்பதால் பட்டுப்புழுவையும் வளர்த்துக் கொண்டிருக்கேன்.

குறைவான செலவு அதிக ஆரோக்கியம்!

கால்நடைகளுக்கு பசுந்தீவனத்தை அதிகமாக பயன்படுத்த சொல்கிறார்கள் கால்நடை மருத்துவ அறிவியல் ஆராய்ச்சி மைய அதிகாரிகள். அதேபோல் நம் அரசு கால்நடைப் பண்ணைகளையும் பசுந்தீவனத்தைதான் நிறையப் பயன்படுத்துகிறார்கள். இதன் மூலம் தீவனச் செலவு குறைவது மட்டுமல்லாமல் ஆடு, மாடுகள் ஆரோக்கியமாக வளர்கிறது. அதனால்தான் நான் தீவனங்களை உருவாக்கிவிட்டு பண்ணைத் தொழிலில் இறங்கினேன். ஆனால் பல இடங்களில் புதிதாக பண்ணை வைக்கிறார்கள். தீவனத்தைப் பயிர் செய்யாமல் பண்ணையை ஆரம்பித்து கடைசியில் தீவனத்திற்கு மிகவும் சிரமப்படுகிறார்கள். அதிக விலை கொடுத்து புல்லையும், அடர்தீவனத்தையும் வாங்கிப் போட்டு நட்டமாகிவிட்டது. ஆடு, மாடு வளர்த்தாலே நட்டம் என்று தான் சொல்வார்கள்.

ஒரு தடவை நட்டா வருடக்கணக்கில் பலன்!

மிகக் குறைவான செலவில் அதிகமான சத்து கிடைக்கிற பசுந்தீவனங்களை விவசயிகளே உற்பத்தி செய்து லாபம் சம்பாதிக்க முடியும். கொஞ்சமாக நிலம் இருந்தால் கூட போதும். ஒரு தடவை விதைத்துவிட்டாலே நிறைய வருடங்களுக்கு விளைச்சல் இருக்கிற தீவனப் பயிர்களும் கூட இருக்கிறது.
இந்த தண்ணீர்புல், முயல்மசால், வேலிமசால், கலப்பை கோணியம், சங்குப்புஷ்பம், மல்பெரி, சூபாபுல், எல்லாமே போட்டு பத்து வருடங்களுக்கு மேலாகிவிட்டது. எந்தப் பராமரிப்பும் கிடையாது. அறுப்பது மட்டும்தான் வேலை. முழுக்க இயற்கை விவசாயம் தான். ரசாயன உரத்தையோ, பூச்சிக்கொல்லியையே தொடுவதே கிடையாது. என்னுடைய இரண்டு மாடு, ஐந்து ஆடுகளுடைய கழிவுகள்தான் இதுக்கு உரம். இவைகளைச் சாப்பிட்டுத்தான் என்னுடைய ஆடு, மாடுகள் திடகாத்திராக இருக்கிறது.

பசுந்தீவனத்தால் கெட்டியான பால்!

ஒரு கறவை மாட்டிற்கு தினம் பசுந்தீவனம்  - 20 கிலோ, வைக்கோல் – 10 கிலோ, அசோலா – 5 கிலோ, தவிடு – 3 கிலோ, கடலைப்பிண்ணாக்கு – அரை கிலோ கொடுத்துக் கொண்டிருக்கிறேன். ஒரு மாடு ஒரு நாளைக்கு 10 லிட்டர் பால் கொடுக்குது. நல்லா கொழகொழ என்று தரமாக பால் இருக்கிறது. பசுந்தீவனம் நிறைய சாப்பிடுவதால் உரிய காலத்தில் சினை பிடித்துவிடுகிறது.
தினமும் ஒரு ஆட்டிற்கு 5 கிலோ பசுந்தீவனம் கொடுக்கிறேன். பசுந்தீவனத்திற்கு ஆரம்பக் கட்ட செலவு மட்டும்தான். வேறு செலவே இல்லை. ஆனால் கடைகளில் வெ்வளவு வாங்கிப் போட்டாலும், செலவுதான் அதிகம், பால் அளவு கூடாது.

20 சென்டில் எருமைப்புல்:

பொதுவாக அனைத்து வகையான மண்ணிலும் தீவனப் பயிர்கள் நன்கு வளரும். அதனால் மண்ணைப் பற்றிய கவலையில்லை. நிலம் முழுவதும் இரண்டு சால் உழவு ஒட்டி மண்ணை நன்கு பொல பொலப்பாக வேண்டும். பின் பத்து டன் தொழுவுரம் போட்டு, மறுபடியும் ஒரு சால் உழவு ஒட்ட வேண்டும். 20 சென்டில் ஆயிரம் தண்ணீர்ப்புல் விதைக்கரணைகளை ஊன்ற வேண்டும். இது வேகமாக மண்டும் என்பதால் குறைந்த அளவு நிலத்தில் விதைத்தாலே போதுமானது. மண்ணை நன்றாக சேறாக்கி இரண்டடி இடைவெளி விட்டு, கரணையின் கணு மண்ணில் புதையுமாறு நடவு செய்ய வேண்டும். மூன்றாவது நாளில் தண்ணீர் பாய்ச்சி அதிலிருந்து வாரம் ஒரு தண்ணீர் கொடுக்க வேண்டும்.

20ம் நாளில் களையெடுத்து 200 லிட்டர் நீரில் 10 கிலோ சாணம், 10 லிட்டர் மாட்டுச்சிறுநீர், அரை கிலோ மாட்டுக் கொட்டகை சகதி (சிறுநீர், சாணம் கலந்த மண்) ஆகியவற்றைக் கலந்து ஒரு நாள் முழுக்க வைத்திருந்து, பாசன நீரில் கலந்து விட வேண்டும். 15 நாட்களுக்கு ஒரு முறை இதைத் தொடர்ந்து செய்யலாம்.
90 – ம் நாளிலிருந்து இந்தப் புல்லை அறுவடை செய்யலாம். தரையிலிருந்து நான்கு அடி உயரம் விட்டு அறுவடை செய்ய வேண்டும். அதைத் தொடர்ந்து 35 நாட்கள் இந்தப் புல் வளர்ந்தால் தான் முற்றி, அதிக சத்துக்கள் கிடைக்கும். ஆகவே, 35 நாட்களுக்கு ஒரு முறைதான் அறுவடை செய்ய வேண்டும். ஒரு அறுவடைக்கு 1,000 கிலோ புல் கிடைக்கும். தேவையைப் பொறுத்து பகுதி பகுதியாகக் கூட அறுவடை செய்யலாம். ஒரு வருடம் கழித்து பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை இடை உழவு செய்தால் புது வேர்கள் விட்டு, அதிக மகசூல் கிடைக்கும்.

230 சசென்டில் மல்பெரி, ஊடுபயிர்களாக வேலிமசால், முயல்மசால், கலப்பைக் கோணியம்:

5 அடி இடைவெளியில், 3 அடி அகலம், அரை அடி ஆழம் கொண்ட வாய்க்கால்களை அமைக்க வேண்டும். வாய்க்கால் தோண்டும்போது கிடைக்கும் மண்ணை இரு வாய்க்கால்களுக்கு இடையில் போட்டு, மேட்டுப்பாத்தி அமைத்துக் கொள்ள வேண்டும். வாய்க்காலின் வெளிப்புற இரு ஓரங்களிலும், கரணைக்குக் கரணை மூன்றடி இடைவெளி இருக்குமாறு மல்பெரி விதைக் கரணைகளை நட வேண்டும். கரணையில் இரண்டு கணுக்கள் மண்ணுக்குள் புதையுமாறு இருக்க வேண்டியது அவசியம். 230 சென்ட் நிலத்திற்கு 13 ஆயிரம் விதைக்கரணைகள் தேவைப்படும்.

வாய்க்கால்களுக்கு இடையில் உள்ள மேட்டுப் பாத்திகளின் மையத்தில் விதைகளை விதைப்பதற்காக அரை அங்குல ஆழத்திற்கு நீளமாக கோடு இழுக்க வேண்டும். ஒரு பாத்தியில் வேலிமசால், இன்னொரு பாத்தியில் முயல்மசால், அடுத்த பாத்தியில் கலப்பைக் கோணியம் என மாற்றி மாற்றி விதைக்க வேண்டும். ஒவ்வொரு விதையும் தலா இரண்டு கிலோ தேவைப்படும். விதைப்பதற்கு முன் ஒவ்வொரு வகை விதைகளுடனும் ஆறு கிலோ மணலைக் கலந்து சிறிது நேரம் வைத்திருக்க வேண்டும். அதன்பின் விதைத்து உயிர்த் தண்ணீர் விட வேண்டும். மூன்று நாட்கள் கழித்து மீண்டும் ஒரு முறை தண்ணீர் பாய்ச்ச வேண்டும். அதன்பின் நிலத்தின் ஈரத்தைப் பொறுத்து தண்ணீர் பாய்ச்சினால் போது 200 லிட்டர் நீரில், 10 கிலோ சாணம், 10 லிட்டர் மாட்டுநீர், அரை கிலோ மாட்டுக் கொட்டகை கோமிய சகதி (சிறுநீர், சாணம் கலந்த மண்) ஆகியவற்றைக் கலந்து ஒரு நாள் வைத்திருந்து, பாசன நீரில் கலந்துவிட வேண்டும். 15 நாட்களுக்கு ஒரு முறை இதைச் செய்யலாம்.
90 நாட்களில் அனைத்துமே அறுவடைக்கு தயாராகிவிடும். மல்பெரி, முயல்மசால், வேலிமசால், ஆகியவற்றை அறுவடை செய்யும் போது, தரையில் இருந்து ஒரு அடி உயரம் விட்டு அறுக்க வேண்டும். இவற்றை 40 நாள் இடைவெளி விட்டு மீண்டும் அறுக்கலாம். மல்பெரி மூலம் ஒரு ஏக்கரில் ஒரு ஆண்டில் தோராயமாக 30 முதல் 35 டன் தீவனம் கிடைக்கும். 100 அடி நீளம் கொண்ட பாத்தியில் 1 வருடத்தில் வேலிமசால் 400 கிலோவும், முயல்மசால் 300 கிலோவும், கலப்பைக் கோணியம் 400 கிலோவும் கிடைக்கும்.

உயிர் வேலியாக சவுண்டல்:

வேலி ஓரங்களில் 5 அடி இடைவெளியில் ஒரு சவுண்டல் விதையைப் போட்டு, 3 – வது நாள் தண்ணீர் பாய்ச்சினால் போதும். அதன் பிறகு தண்ணீர், சாணம் எதுவுமே தேவையில்லை. தானாகவே வளர்ந்து விடும். மூன்று மாதத்திலிருந்து அறுவடை செய்யலாம். ஒரு மரத்திலிருந்து ஆண்டுக்கு 15 கிலோ தீவனம் கிடைக்கும்.

பட்டுப்புழுவுக்கு மட்டுமல்ல, கால்நடைகளுக்கும்!

சாகுபடி பாடத்தை முடித்து, தொடர்ந்து பேசிய ஆதிநாராயணன், பட்டுப்புழு வளர்ப்பதற்கு மட்டும் தான் மல்பெரி என்று அனைவரும் நினைக்கிறார்கள் ஆனால் அது நல்ல கால்நடைத் தீவனம் என்பது நிறைய இருக்கிறது. இது மாதிரியான பசுந்தீவனங்களை கால்நடைகள் விரும்பிச் சாப்பிடும். மாடுகளுக்கு வெறும் அடர் தீவனத்தையும், புல்லையும் மட்டுமே கொடுத்தால் கண்டிப்பாக ஆரோக்கியமாக இருக்காது. அதனால் தான் விவசாயிகள் இடம் விழிப்பு உணர்வு கொடுப்பதற்காக பசுந்தீவன விதைகளையும், விதைக்கரணைகளையும் இலவசமாக கொடுத்து, நேரடி இலவசப் பயிற்சியும் கொடுத்துக் கொண்டிருக்கிறேன்.

தொடர்புக்கு:
ஆதிநாராயணன்,
ஆலத்தன்குடிகாடு கிராமம்,
பட்டுக்கோட்டை வழி,
பாப்பா நாடு அருகில்.
அலைபேசி: 98656 - 13616


இது தாண்டா இயற்கை

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே இருக்கிறது கோம்புப்பள்ளம், இங்கே தமிழக உழவர் தொழில் நுட்பக் கழகம் என்ற அமைப்பை நடத்தி வருகிறார் சுந்தரராமன். இயற்கை விவசாயம் என்பதை முழுமூச்சாகக் கொண்டு இயங்கிவரும் இக்கழகம், தமிழகம் முழுக்க கிளை பரப்பியிருக்கிறது. இயற்கை விவசாயம் என்றால் என்ன.. அதை எப்படி செய்ய வேண்டும்.. அதற்கு தேவையானவை என்னென்ன? என்பது பற்றியெல்லாம் அறிவியல் பூர்வமாக பயிற்சி அளித்து வருகிறது. தமிழகம் மட்டுமல்ல.. கேரளா, கர்நாடகா என்று அண்டை மாநிலங்களிலிருந்தும் விவசாயிகள் படையெடுத்து வந்து இந்த அமைப்பிடம் பயிற்சி எடுத்துச் செல்கிறார்கள்.

இருபது ஆண்டுகளுக்கு முன் ரசாயன உரத்தையும், பூச்சி மருந்தையும் பரிசோதிக்க கூடிய இடமாக இந்த நிலம் இருந்தது. இந்தியாவில் புதிதாக ஒரு பூச்சி மருந்து அறிமுகமானால் அதை நான்தான் பரிசோதித்து பார்த்து பலாபலன்களை சொல்வேன். அதன் பிறகே அதை மார்க்கெட்டிங் செய்வார்கள். இப்படி அளவுக்கு மீறிய உரம், பூச்சி மருந்து கொடுத்து வந்ததால், என்னுடைய நிலத்தின் வளம் குறைந்துபோனது. படிப்படியாக விளைச்சல் குறைந்தது. நிலத்தைக் காப்பாற்ற இனி இருக்கும் ஒரே வழி இயற்கை விவசாயம்தான் என்று ஒரு கட்டத்தில் புரிந்து கொண்டேன்.

1991-ம் ஆண்டு முதல் நிலத்தில் ரசாயன உரம் போடுவதில்லை என்று முடிவு கட்டினேன். கரும்பு, வாழை, மஞ்சல், நெல் என எல்லாவற்றையும் பயிர் செய்கிறேன். முன்பு என்ன விளைச்சல் கிடைத்ததோ அதே அளவு விளைச்சலை இயற்கை விவசாயித்தின் வழியாக பெற்று வருகிறேன். இதற்காக பல தொழில்நுட்பங்களை பின்பற்றி வருகிறேன்.
இயற்கை பயிர் வளர்ச்சி ஊக்கி ஆர்.கே.பாக்டீரியா. 50 லிட்டர் பிளாஸ்டிக் கேன் ஒன்றை எடுத்துக் கொள்ள வேண்டும். அன்றைக்கு கிடைத்த பசுஞ்காணம் 5 கிலோ, தூள் செய்யப்பட்ட வெல்லம் முக்கால் கிலோ, கடுக்காய் தூள் 25 கிராம் இதையெல்லாம் அந்தக் கேனில் போட்ட கலக்கவேண்டும். அதிமதுரம் இரண்டரை கிராம் எடுத்து, அரை லிட்டர் நீரில் கொதிக்க வைத்து அந்த நீரையும் கேனில் ஊற்றவேண்டும். பிறகு கேன் முழுக்க தண்ணீர் நிரப்பி நன்றாக மூடி வைத்துவிட வேண்டும். இரண்டு நாள் கழித்துப் பார்த்தால், கேன் விரிந்து உப்பி இருக்கும். அதைப் பார்த்ததுமே மூடியை லேசாக திறந்து விடவேண்டும். அப்போதுதான் உள்ளேயிருக்கும் மீத்தேன் வாயு வெளியேறும். இல்லையென்றால் கேன் வெடித்துவிடும். 10 நாட்களுக்குப் பிறகு தொல்லுயிரி கரைசல் தயாராகிவிடும். இதை வேறு கேனில் மாற்றவேண்டும்.

ஒரு ஏக்கருக்கு பாசன நீரோடு, இந்தக் கரைசலை 200 லிட்டர் கலந்து விடலாம். பத்து லிட்டர் நீரில் ஒரு லிட்டர் தொல்லுயிரி கரைசலைக் கலந்து தெளிப்பான் மூலமும் தெளிக்கலாம். இவ்வாறு பயிர் மீது தெளிப்பதால், செடிகளின் இலைகள் பெரிதாவதால், ஒளிச் சேர்க்கை அதிகமாகி, விளைச்சலும் அதிகரிக்கும். இந்தக் கரைசல் பூச்சி விரட்டியாகவும் வேலை செய்கிறது.
இதிலிருப்பது தேமோர் கரைசல். இதுவும் பயிரின் விளைச்சலைத் தூண்டக்கூடியதுதான் நன்கு புளித்த மோர் 5 லிட்டர் இவற்றை ஒரு கேனில் ஊற்றவேண்டும். 10 தேங்காய்களின் துருவல், அழுகிய பழங்கள் பத்து கிலோ இவற்றை ஒரு கேனில் எடுத்து பிளாஸ்டிக் வலைப் பை அல்லது சாக்குப் பையில் பொட்டலம் போல் கட்டி, அந்தக் கேனில் போடவேண்டும். ஏழாம் நாள் புளிப்பு வாடை உங்கள் மூக்கைத் துளைக்கும். ஊறல் தயாராகி விட்டதின் அறிகுறி இது.

இந்தக் கலவையில் அரை லிட்டர் எடுத்து பத்து லிட்டர் தண்ணீர் கலந்து தெளிக்கலாம். இத்துடன் ஒரு லிட்டர் தொல்லுயிரி கரைசலைக் கலந்து ஒரு நாள் வைத்திருந்து தெளித்தால், கூடுதல் நுண்ணுயிர்கள் உருவாகி நல்ல விளைச்சல் கிடைக்கும். பூஞ்சாண நோயைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் இதற்கு உண்டு. இந்தக் கரைசல், ‘பயோசைம், சைட்டோசைம்’ என்று சொல்லப்படும். வளர்ச்சி ஊக்கிக்கு சமமான சக்தி கொண்டது. செடிகள் நிறைய பூ பூக்க இது உதவும். இதன் காரணமாக விளைச்சல் பெருகும் என்று சுந்தரராமன் கூறுகிறார்.

அரப்பு மோர் கரைசல் ஒரு வகை வளர்ச்சி ஊக்கி. இதைத் தயாரிக்க அரப்பு இலையை (சில பகுதிகளில் உசிலை இலை என்பார்கள்) ஒரு லிட்டர் குவளையில் அளந்து எடுத்து, லேசாக இடித்துக் கொள்ள வேண்டும். இளநீர் 1 லிட்டர், புளித்த மோர் 5 லிட்டர் எடுத்துக் கொண்டு இடித்து வைத்திருக்கும். அரப்பு இலையை அதில் போட வேண்டும். அரப்பு இலை கிடைக்காவிட்டால் சீயக்காய் தூள் 50 கிராம் சேர்த்தாலே போதும். இத்தோடு அழுகிய பழங்கள் பத்து கிலோ அளவுக்கு எடுத்து பிளாஸ்டிக் வலையில் பொட்டலம் கட்டி உள்ளே போடவேண்டும்.
இந்தக் கலவையை 7 நாட்களுக்கு புளிக்க வைத்தால் கரைசல் தயார். இதில் அரை லிட்டர் எடுத்து, பத்து லிட்டர் நீரில் சேர்த்து பயிருக்குத் தெளிக்கலாம். இத்துடன் தொல்லியிரி கரைசலை ஒரு லிட்டர் கலந்து, ஒரு நாள் வைத்திருந்தால் வீரியத்துடன் வேலை செய்யும். பூச்சிகளை விரட்டும் பூஞ்சாண நோயையும் கட்டுப்படுத்தும். இதில் ஜிப்ராலிக் ஆசிட் இருக்கிறது. இதன் காரணமாக நிறைய பூ பூத்து விளைச்சல் பெருகும்.
அடுத்து மண்புழு உரம் தயாரிப்புப் பற்றி பயிற்சி கொடுத்தார் உழவர் தொழில்நுட்ப இயக்கத்தைச் சேர்ந்த உப்புப்பள்ளம் ரவி.

“தேங்காய் உரித்த மட்டைகளை பரப்பி, அதன் மீது தொழு உரத்தை போட வேண்டும். இது 2 அடி அகலம் 9 அங்குல உயரம் கொண்ட நீள் பாத்தியாகவோ.. அல்லது வட்டவடிவிலோ இருக்கலாம். இதன் மீது மண்புழுவை விட்டால் அது நிலத்துக்குள் போகாமல் மேலேயே இருக்கும். ஈரப்பதம் குறையாமல் தண்ணீர் தெளித்து வரவேண்டும். மறக்காமல் உரக்குவியல் மீது சாக்கு போட்டு மூடி வைக்க வேண்டும். மண்புழு உரம் தயாரானதும் உரம் மட்டும் மேலே இருக்கும். புழு கீழே போய்விடும். மேலாக இருக்கும் உரத்தை எடுத்துப் பயன்படுத்தலாம்” என்று வெகு எளிமையாக ரவி சொல்லி முடிக்க பயிற்சி வகுப்பு முடிவுக்கு வந்தது.

தொடர்புக்கு:
தமிழக உழவர் தொழில் நுட்பக் கழகம்,
சத்தியமங்கலம்,
ஈரோடு மாவட்டம்.
தொலைபேசி: 04295-225047
அலைபேசி: 98427-24778


இயற்கை மேம்பாட்டுக்கு - சுற்றுச்சூழல் வேளாண்மை

இயற்கை வழி வேளாண்மை

  • இயற்கை மேம்பாட்டுக்கு - சுற்றுச்சூழல் வேளாண்மை
  • காய்கறிகளில் வருடந்தோறும் செயல்படுத்தப்படும் பிரெட் சாண்விச் முறை தொழில்நுட்பம்
  • விற்பனை இயக்க யுக்திகள் மூலம் அங்கக வேளாண்மையின் உயர்வு
  • ஓர் எளிய பயிற்சி : கன்னியாகுமாரி விவசாயிகளுக்கு மண் பானையின் மூலம் அதக பயன்
  • நீர், நிள பிரச்சனைகள் முறியட்க்க அங்கக பயிற்சியும், பல்வகை பயிரிடுதலும்
  • கடற்கரையில் காய்கறி சாதுபடி

கடந்த 50 முதல் 60 வருடங்களாக நம் நாட்டின் வேளாண் வளர்ச்சி முற்றிலுமாக அதிக சாகுபடி பெறுவதை பற்றிய ஆராய்ச்சி மேற்கொள்ளப்படுகிறது. அதிகமாக சாகுபடி பெற்றாலும், விவசாயிகளும் சுற்றுப்புறமும் இதற்கு ஈடான அதிக விலை கொடுக்கும் நிலையுள்ளது.
குறைந்த விலை பண்ணை பொருட்களின் காரணமாகவும், அதிக விலை இரசாயன ஈடுபொருட்களினாலும், விவசாயம் லாபகரமற்றதாக்கியுள்ளது இதன் காரணமாக விவசாயிகள், அதிக வருமாணம் பெற புது விவசாய முறைகளை நாடினர்.

சுற்றுச்சூழல் நட்புணர்வு :

சுற்றுச்சூழல் வழி வேளாண்மையை பின்பற்ற விவசாயிகள் சுற்றுச்சூழல் கொள்கைகளையும், புதிய வழிகளையும் அறிந்து இருக்கவேண்டும். இம்முறைக்கு தேவையான அனைத்து ஈடுபொருட்களும் தங்களது பண்ணையில் இருந்து கிடைக்கும், விவசாயிகள் வெளியில் சென்று தேடும் அவசியமில்லை. எனவே இசுÝழலியல் முறை பயிற்சி செய்முறைக்கு இயற்கை விவசாயமாகவும், கோட்பாடுகளுக்கு சுற்றுச்சூழலாகவும் காணப்படுகிறது.
எடுத்துக்காட்டாக புதுக்கோட்டை மாவட்டம், கீரëர் ரோடு, வீரபட்டியை சார்ந்து சுற்றியுள்ள கிராமத்தில் உள்ள சக்தி பண்ணையின் பரப்பளவு சுமார் 2.5 ஏக்கராகும். இதன் உரிமையாளர் திரு. சக்தி கணபதி, பல வகை மரங்களுக்கு செந்தக்காரர். இங்கு பெரும்பாலும் மரங்கள், நெல் வயலை சுற்றிய கரைகளில் நடப்பட்டுள்ளது. வழக்கமாக நெல் வயலை சுற்றியுள்ள மரங்களை விவசாயிகள் வெட்டி விடுவர். ஏனெனில், மரங்கள் நெர்பயிர் வளர்ச்சிக்கு தடையாக இருக்கும் என்பதனால்.

பயன்கள் :

ஆனால் திரு. சக்தி கணபதி, மரங்களினால் சுற்றுச்சூழல்பயன்கள் அதிகமாக இருப்பதாகவும், பயிரின் வளர்ச்சிக்கு தடையாக இல்லையென்றும் கூறுகிறார். “பல பறவைகளின் இருப்பிடமாக இம்மரங்கள் இருப்பதினால், பயிரினை தாக்கும் âச்சி, புழுகளை உணவாக்கி, பயிர் தாக்குதலை குறைக்கிறது. மேலும் முக்கியமாக இரவில் நெல் வயலை சேதப்படுத்தும் எலிகளை, சில ஆந்தைகள் உணவாக்கி கொள்வதால், வயல் பாதுகாக்கப்படுகிறது. இப்பறவைகள் சிறந்த âச்சி கட்டுப்பாட்டுகளாக உள்ளது”. என்று திரு. சக்தி கணபதி விளக்குகிறார்.
மேலும், மீன் குளம் ஒன்றையும் தனது வயலில் வைத்துள்ளார். பாசான நீரானது, இக்குளத்தினுள் சென்று பின் நெல் வயலுக்கு செல்கிறது.

செலவிள்ளா தொழில்நுட்பம் :

வீரால் மீன்கள் கிணறுகளில் கூட வளர்க்களாம், இவை அங்கேயே முட்டைகள் இட்டு, மீன் குஞ்சுகளை பொறிக்கும். இதன் காரணமாக இவைகளுக்கு உணவளிக்க செலவு செய்ய தேவையில்லை. கிணற்றில் இருக்கும் தவளைகளை தாங்களாகவே உணவாக்கி கொள்ளும். மீன் குஞ்சுகளை குளத்தில் விட்டு வளர்த்தால், பகலில் தண்ணீருக்கு அடியிலும், இரவில் குளத்தில் இருந்து நீந்தி நெல் வயலில் உள்ள âச்சிகளை உணவாக்கி, âச்சி தாக்குதலில் இருந்து வயலை பாதுகாக்கிறது. கூடுதலாக, மீன்களின் கழிவு, தண்ணீரில் கலந்து அதிக பயன்களை நிலத்திற்கு தருகிறது.
நன்கு வளர்த்த மீன்களை விற்பனையும் செய்கிறார். மேலும் இவர் வாத்துகளும் வளர்க்கிறார். இவை பகலில் நெல் வயலில் சுற்றித்திரிகின்றது. இதன் காரணமாக, தொடர்ந்து மதிப்பிடும் களைகள், அதிகமாக வளர்வதை தடுக்கிறது.
இவ்வாறான இரண்டுக்கும் மேற்பட்ட செயல்கூறுகளினால் வேலையாட்கள் மற்றும் செலவு குறையும்.
மேலும் இவர் தென்னை கன்றுகளை வளர்க்க தனி இடம் ஒதுக்குவதில்லை. பாசான கால்வாயின் ஓரங்களில் வளர்த்து, பண்ணையை சுற்றி பார்க்க வரும் பிற விவசாயிகளுக்கு விற்பனையும் செய்கிறார். இவரது பண்ணையில் அருகில் ஒரு பெரிய ஏரி உள்ளது. இது அâர்வமாக நிரம்பும். அப்படி நிரம்பும் இவரது மூன்று வயல்களிலும் மூழ்கடிக்கிறது.
ஏரியின் மூலம் வண்டல் மண்னானது நெல் வயலில் சேர்கிறது, இது பெரிய மீன்கள் முட்டையிட்டு குஞ்சுகள் பொரிக்க நெல் வயல் ஏதுவான இடமாக கருதுகிறது. ஏரியில் தண்ணீர் வற்றியவுடன், சில மீன்கள் வயல்வெளியிலிருந்து, ஏரிக்கு திரும்பிவிடும் என்று திரு. சக்தி கணபதி கூறுகிறார்.
கோடைக்காலத்தில், கிணற்று நீர் வடிந்தவுடன், இவர் மீண்டும் தானிய மற்றும் பயிர் வகைகளை சாகுபடி செய்கிறார். நிலக்கடலையின் கம்பளிப்புழு தாக்குதலுக்கு மூலிகை கட்டுப்பாட்டு முறை ஒன்றையும் கண்டுபிடித்துள்ளார்.

மூலிகை சாறு :

மேலும் இவர் பூச்சி தாக்குதலில் இருந்து கட்டுப்படுத்த நான்கு மூலிகைகளை கொண்ட சாறு உபயேகிக்கின்றனர். அவை சேர்த்து கத்தாலை, ஏறுக்கு, நொச்சி, பீக்கலத்தே ஆகியவையாகும். இதிலிருந்து சாறு பிழித்தெடுத்து புழு தாக்குதலின் ஆரம்ப கட்டத்திலேயே தெளிக்க வேண்டும் என்று விளக்குகிறார்.

தொடர்புக்கு :
திரு .K. முரளி,
இந்திய அங்கக விவசாயிகள் அமைப்பு,
மின்னஞ்சல் : sadhguru@gmail.com
அலைபேசி : 94425 - 31699


நீர், நிள பிரச்சனைகள் முறியட்க்க அங்கக பயிற்சியும், பல்வகை பயிரிடுதலும்

 பயிர் வளர்வதற்கு நல்ல மண், தூய்மையான நீர் அகியவை முக்கியமானதாகும். மண்ணிண் வளம் சற்று குறைந்தோ, அல்லது, அசுத்தமான நீரோ பயன்படுத்தினால் அது விவசாயிகளின் வாழ்கையையே பாதிக்கும். இவ்வாறான சூழ்நிலையில் விவசாயிகள், நிலத்தை விற்றுவிட்டோ அல்லது வேறு வேலையை தேடிப் போவதே தவிர வேறு வழியில்லை என்று தமிழ்நாட்டின், கோயம்புத்தூர் மாவட்டம், கனகான் தோட்டத்தை சார்ந்த (Kanakkan thottam) திரு. R. சுப்பையன் கூறுகிறார்.

உணர்ச்சிப் பூர்வ இணைப்பு :

இவை இரண்டு முடிவுகளுமே, தீர்மானிப்பது, சற்றே கடினமான காரியம், ஏனெனில் நாம் நம் நிலத்தின் மீது உணர்ச்சிப் பூர்வமாக, பாரம்பரியமாக சில பிணைப்புகளில் ஏற்படுத்தியுள்ளோம். திரு. சுப்பையன் கூறுகையில், “நமக்கு நிலங்கள் என்பது நமது குடும்பத்தின் ஒரு விரிவுப்படுத்தப்பட்ட இடமாகவேயுள்ளது” என்கிறார்.
இவரது கிராமத்தின் குறுக்கே, நொய்யல் ஆறு உள்ளது. இதில் கோயம்புத்தூரின் சாயத் தொழிற்சாலைகளில் இருந்து வரும் கழிவுகள் மூலம் நீர் மாசுப்பட்டது. இதை உபயோகித்ததன் காரணமாக, இவரது 10 ஏக்கர் நிலமும் விவசாயித்திற்கு உதவாத நிலமாக மாறியது.
இவரை போலவே, அக்கிராமத்தின் பல விவசாயிகளும் இந்த பிரச்சனைக்கு உள்ளாகினர். இதனால் பலர் நிலத்தை விற்றுவிட்டு, பல்வேறு நகரங்களுக்கு குடியெர்த்தனர்.
ஆனால் திரு. சுப்பையன் அவர்களால், நிலத்தை விட்டு போக முடியவில்லை. பல்வேறு கருத்துகளை அலசினார். குறைந்த முதலீட்டில், பயிர் சாகுபடி செய்வதற்கான வழிகளை ஆராய்ந்தார். அவ்வாறு செய்கையில், பல நாட்களுக்கு பிறகு, இவருக்கு பரித்துரைக்கப்பட்டது, பல்வகை பயிரிடுதலும், இயற்கை வேளாண்மையுமாகும்.
வல்லுரைகளின் கருத்துப்படி, பல்வகை பயிரிடுதல் மூலமாக எந்த பிரச்சனையும் இல்லாமல் சிறந்த வருமானம் அடைய முடியும். ஒரு பயிர் தோல்வி அடைந்தாலும், மற்ற பயிர்களின் சாகுபடியின் மூலம் இதை ஈடுகட்டலாம்.

ஊடுபயிர் :

இவர் தனது 10 ஏக்கரில், 3 ஏக்கரில் தென்னை சாகுபடியும், 2 ஏக்கரில் கறி வேப்பிலையும், 2 ஏக்கரில் அல்பாஅல்பா மற்றும் மீதமுள்ள 3 ஏக்கரில் இளநீர்கான தென்னை மரங்களின் ஊடுப் பயிர்களாக் பாக்கு மரங்களையும் வளர்கறார். இவை அனைத்து பயிர்களும் இயற்கை முறையில் வளர்க்கப்படுகிறது.
இயற்கை முறையை பின்பற்றுவதன் காரணமாக இவர் கூறுவது. முன்பு இரசாயன உரங்களை கொண்டு விவசாயம் மேற்கொண்டதன் மூலம் நிலங்களையும் இலந்து, 30 லட்சம் கடன் தொகையும் வெலுத்தும் நிலமையில் உள்ளதாக கூறுகிறரர்.
ஆனால் இன்று இயற்கை முறையில், இயற்கை ஈடுபொருட்களை கொண்டு விவசாயம் செய்வதனால், குறைந்த செலவு செய்வதாகவும், மண்ணின் வளம் அதிகரித்துள்ளதாகவம் கூறுகிறார்.

மற்ற விவசாயிகள் இவரது நிலத்தை பார்வையிட்டபின் கூறிய கருத்துக்கள் :

பல விவசாயிகள் நஷ்டமடைந்ததாகவும், நிலத்தை விற்றுவிட்டு வேறு வேலையில் இறங்கப் போவதாகவும் கூறுகின்றனர். இதன் காரணத்தை ஆராய்ந்து பார்க்கையில், அதிக மகசூல் கிடைக்கும் என்ற எண்ணத்தில், இவர்கள் அதிக இரசாயன உரங்களை பயன்படுத்தியது தெரியவந்துள்ளது.

தனிப்பட்ட இழப்புகள் :

தனிப்பட்ட இழப்புகளை காட்டிலும் இரசாயன உரங்களின் உபயோகத்தில் சுற்றுப்புற சீரழிவுக்கு தாங்களும் ஒரு காரணம் என்பதை உணரவேண்டும்.
இதன் மாறாக, அங்கக செய்முறைகளில் மூலம் சுற்றுப்புரத்திற்கு எந்த தீங்குமில்லை என்பதையும் உணரவேண்டும்.
“இம்முறையானது, குறைந்த முதலீட்டில் தகுந்த பலன்களை தருவதாகவும், விவசாயிகள் தாங்களாகவே இம்முறையை பயன்படுத்த முடியும் என்பதாலம், மேலும் அதிகப்படியான அளவு ஈடுபொருட்களை பயன்படுத்தினாலும், இவை எந்த பாதிப்பும் ஏற்படுத்தாது” என்றும் திரு. சுப்பையன் கூறுகிறார்.
தற்போதைய வேலையாள் பற்றாக்குறை நிலைமைக்கு, இம் முறை மிகவும் சிறந்ததாகும். இது உலகம் முழுவதும், அனைத்து துறையிலும் உள்ள பிரச்சனை என்றாலும், இயற்கை வேளாண் முறையை ஒருவர் பயன்படுத்த ஆரம்பித்தால், அவர்கள் தாங்களாகவே, அனைத்து வேலைகளையும் செய்ய கற்றுக் கொள்ளவேண்டும். வேலையாட்கள் இருப்பினும், விவசாயி தனது சொந்த பொறுப்பில் அதை மேற்பார்வையிட வேண்டும்.

இலாபகரமான உயிரினங்கள் :

அங்கக விவசாயி ஒருவருக்கு, அவரது தொழிற்சாலையான நிலத்தில் பல்வேறு நுண் உயிரிகளும் நாள் முழுவதும் மண் வளத்தை அதிகரிக்க பாடுபடுகிறது.
உண்மையில் விவசாயியை காட்டிலும், இவ்வுயிரினங்கள் நல்ல பயிர் வளர்ச்சிக்கு முக்கிய பொறுப்பாற்றுகிறது.
மேலும் பயிர் தோல்வியடைந்தாலும், விவசாயிகள் தற்கொலை முயற்சியில் ஈடுபடுவதற்கும் முக்கிய காரணமாக ஒள்ளது ஒரு வகை பயிரிடுதலும், இரசாயன உரங்களின் உபயோகிப்புக்களும் ஆகும்.
பல்வகை பயிரிடுதல் மற்றும் இயற்கை வேளாண்மை ஒரு விவசாயியும் தோல்வியடைவதில்லை என்று திரு. சுப்பையன் கூறுகிறார்.
இயற்கை வேளான் முறைக்கு மாறிய, சுமார் 7 வருடத்தில் இவரது அனைத்து கடன் தொகையும் செலுத்திவிட்டதாகவும் கூறுகிறார்.

தொடர்புக்கு :
திரு. R. சுப்பையன்,
4/5 - A,
கனக்கான் தோட்டம்,
A.G. புதூர் அஞ்சல்,
ஈறுகூர் வழி, (Irugur)
கோயம்புத்தூர்,
தமிழ்நாடு - 641103.
அலைபேசி : 0936 - 3228039
தொலைபேசி : 0422 - 2627072.


நீர், நிள பிரச்சனைகள் முறியட்க்க அங்கக பயிற்சியும், பல்வகை பயிரிடுதலும்

வசாயிகளை காக்கும் சுய உதவிக் குழுக்கள் :

      விவசாயிகள் மேம்பட பொருளாதாரத்தை சார்ந்தே செயல்பட முடிகிறது, இதிலும் முக்கியமாக பெண்கள். இவர்களுக்கு ஊக்கமளிக்கும் விதமாக “பெண்கள் சுய உதவிக் குழுக்களும்” , “ விவசாயிகள் சங்கமும்” விளங்குகிறது.
தனிநபராக வேலை செய்யும் வகையைக்காட்டிலும், விவசாயிகளும் பெண்களும் இணைந்து செயல்பட்டால், உற்பத்தி திறன் பெருகுவதுடன், இலாபமும் தொடர்ந்து அதிகரிக்கும்.
மானியம் - பெறுவது எப்படி ?
விவசாயத்தில் பல பிரச்சனைகளுள்ள இக்காலகட்டத்தில் விவசாயிகள் ஒரு குழுவாக சேர்ந்து செயல்பட்டால் மானியம், கடனதவி மற்றும் தொழில் நெறி வழிகாட்டுதல் ஆகிய அனைத்தையும் பெறலாம் என்று முனைவர். பார்த்தசாரதி கூறுகிறார். மேலும் பயிர் தோல்வி மற்றும் பிற காரணங்களினால் எற்படும் மனவுளைச்சல் இருந்து மீண்டு வரவும் இக் குழுக்கள் உதவுகின்றதாகவும் கூறுனார்.
எடுத்துக்காட்டாக கோழிக்கோடு மாவட்டத்தில் கக்கயம் கிராமத்தில், விவசாய குடும்பத்தை சார்ந்த 20 பெண் விவசாயிகளால் செயல்படுகிறது ஒரு சுய உதவிக் குழு.
பெரும் பாலான பெண்கள் குறைந்த படிப்பறிவு உள்ளவர்களாகவும், 3 முதல் 4 ஏக்கர் சொந்த நிலம் உடையவர்களாகவும் உள்ளனர். இதன் காரணமாக நிகழ்ச்சி ஒருங்கிணைப் பாளரான திரு. P.A.மேத்தியு மற்றும் IISR - ன் இந்திய நறுமனப் பொருட்கள் ஆராய்ச்சி நிலையத்தின் முதன்மை விஞ்ஞானியான முனைவர். T.K. யாகோப் அவர்களும் தொடர்ந்து இவர்களை கவனித்து, காய்கறி சாகுபடி, மீன் வளர்ப்பு, பால் பதப்படுத்துதல், பயிர் பெருக்கம், பன்றி வளர்ப்பு, கோழி வளர்ப்பு, மண்புழு தயாரித்தல், உயிரியல் âச்சி கொல்லி போன்றவற்றை தயாரிக்க வழிநடத்துகின்றனர்.
மேலும் இக்குழுவை சார்ந்த உறுப்பினர்களை வெற்றிகரமாக இயங்கும் நிறுவனங்களுக்கு சுற்றுலா அழைத்து சென்று, பல்வேறு விஷ்யங்களை தெரியப்படுத்துகின்றனர்.
பல பிரச்சனைகளை கொண்டு இருக்கும் நாட்டின் விவசாய உற்பத்தியைக் காட்டிலும் தனி மனிதரின் போராட்டம் மேலோங்க முடியாது என்று முனைவர் பார்த்தசாரதி கூறுகிறார்.

நிதி உதவி :
இவர்கள் ஒரு குமுவாக சேர்ந்து செயல்பட்டால், இவர்களது கோரிக்கைகள் நிறைவேறும். இதுவரை, வங்கிகள் தனி நபர்க்கு கடனுதவி வழங்குவதை விட குழுக்களுக்கு அதிகமாகவும் வசதியாகவும் வழங்குகின்றனர்.
குழுக்கள் அமைப்பது மட்டும் பிரச்சனைகளுக்கு தீர்வாகாது. குழு உறுப்பினர்கள் சொந்தமாக தொழில் செய்ய தேவையான நிதியுதவியை குழுக்கள் ஏற்படுத்த வேண்டும்.
இதற்கு முதலில் குழுக்கள் கூட்டுறவு வங்கிகளுடன் இணைக்கப்பட்டு கடனுதவி பெற்று, பல்வேறு வருமானம் வரும் வழிகளில் இதை உபயோகப்படுத்த வேண்டும் என்று முனைவர் T.K. யாகோப் கூறுகிறார்.
குறைந்த வட்டி :
இக்குழுவின் ஒருங்கினைப்பாளரான திருமதி. டெய்சி பிரான்சிஸ் கூறுகையில் “எக்குழுவில் பலர் கடனுதவி பெற்றுள்ளதாகவும் தற்போது செய்து வரும் செயல்களின் மூலம் வரும் வருமானத்தை கொண்டு இக்கடன் தொகையை திரும்ப செலுத்திவிட்டதாகவும் கூறுகிறார்.
மேலும் இப்போது ஒவ்வொரு நபரின் பங்கான, 5000 ரூபாய் முதல் 9000 ரூபாய் வரை சேமித்துள்ளனர். இதன் மூலம் எந்த ஒரு உறுப்பினரும் கடனாக ரூபாய் 30,000 வரை, குறைந்த வட்டி தொகையில் பெறலாம்.
ஒவ்வொருவரும் தாங்கள் தயாரித்த மண்புழு உரத்தை கொண்டு இயற்கை முறையில் காய்கறி சாகுபடி செய்து, தங்கள் தேவைகளை âர்த்தி செய்து கொள்கின்றனர்.
சுமார் 10 பெண்கள் கொண்டு குழு, 2 - 7 பசுக்களை கொண்டு பால் உற்பத்தியில் ஈடுபட்டுள்ளனர். இதன் மூலம் பால் கூட்டுறவு சங்கத்தில் தினமும் பால் விற்று நிகர லாபமாக 100 முதல் 140 ரூபாய் வரை ஒரு மாட்டில் இருந்து ஒரு நாளைக்கு பெறுகின்றனர்.
மேலும், மாட்டுச் சாணத்தை விற்பதன் மூலம் சுமார் 2000 ரூபாய் முதல் 1400 ரூபாய் வரை வருமானம் பெறுகின்றனர். இதிலும் கூடுதலாக, சிலர் பசு கன்றுகளை விற்று 5000 முதல் 6000 வரை பெறுகின்றனர்.
இதே போல் நான்கு பேர் கொண்ட குழு ஆடு வளர்க்கும் பகுதி ஒன்றை வைத்துள்ளனர். இங்கு 3 - 7 தெளிச்சேரி இன் ஆடுகளின் மூலம்    1000 ருபாய் முதல் 9000 ரூபாய் வரை ஒவ்வொரு வருடமும் பெறுகின்றனர். கூடுதலாக ஆட்டின் சாணத்தை கொண்டு 2400 - 5000 ருபாய் வரை வருட வருமானமாக அடைக்கின்றார்.
உள்éர் வளங்கள் :
இக்குழுவின் உறுப்பினரான சைநபா கூறுகையில், ஒவ்வொரு ஆட்டுக்கும் மருத்துவச் செலவாக ஒரு வருடத்திற்கு 100 ரூபாய் செலவிடுவதாகும். மற்ற தீவனங்களுக்கு என்று எதுவும் செலவிடுவதில்லை என்றும் கூறுகிறார். ஏனெனில் தேவையான அனைத்து தீவனங்களும் அப்பகுதியிலேயே கிடைப்பதால் இதற்கென்று தனியாக செலவிடுவதில்லை.
ஒவ்வொரு குழுவும் முதலில் 280 கோழிக் குஞ்சுகளை கொண்ட கோழிப் பண்ணை ஒன்றை ஆரம்பித்தனர். இது அந்த வருடத்திலேயே 2000 கோழிகளாக பெருக்கின. இவ்வாறாக அப்பெண்கள் முட்டை விற்பனை உள்éர் சந்தையில் இறைச்சி விற்பனை போன்று பலவகைகளில் இருந்து 11,000 ரூபாய் சம்பாதித்தனர். மேலும் இரண்டு பெண்கள் காட்சிக்காக வைக்கப்படும் மீன்களை வளர்த்து, அவற்றை விற்பனை செய்ததன் மூலம் 4800 ரூபாய் பெற்றனர்.
தொடர்புக்கு :
திரு. P.A.மேத்தியு
தொலைபேசி : 0496 - 2662372
மின்னஞ்சல் :  kvkcalicut @ sancharnet.in
மற்றும் :
முனைவர் T.K. யாகோப்,
முதன்மை விஞ்ஞானி,
அலைபேசி : 0944753967
மின்னஞ்சல் : Jacodtk @ spices.res.in


விவசாயிகளை காக்கும் சுய உதவிக் குழுக்கள்

 

விவசாயிகள் மேம்பட பொருளாதாரத்தை சார்ந்தே செயல்பட முடிகிறது, இதிலும் முக்கியமாக பெண்கள். இவர்களுக்கு ஊக்கமளிக்கும் விதமாக “பெண்கள் சுய உதவிக் குழுக்களும்” , “ விவசாயிகள் சங்கமும்” விளங்குகிறது.
தனிநபராக வேலை செய்யும் வகையைக்காட்டிலும், விவசாயிகளும் பெண்களும் இணைந்து செயல்பட்டால், உற்பத்தி திறன் பெருகுவதுடன், இலாபமும் தொடர்ந்து அதிகரிக்கும்.

மானியம் - பெறுவது எப்படி ?
விவசாயத்தில் பல பிரச்சனைகளுள்ள இக்காலகட்டத்தில் விவசாயிகள் ஒரு குழுவாக சேர்ந்து செயல்பட்டால் மானியம், கடனதவி மற்றும் தொழில் நெறி வழிகாட்டுதல் ஆகிய அனைத்தையும் பெறலாம் என்று முனைவர். பார்த்தசாரதி கூறுகிறார். மேலும் பயிர் தோல்வி மற்றும் பிற காரணங்களினால் எற்படும் மனவுளைச்சல் இருந்து மீண்டு வரவும் இக் குழுக்கள் உதவுகின்றதாகவும் கூறுனார். எடுத்துக்காட்டாக கோழிக்கோடு மாவட்டத்தில் கக்கயம் கிராமத்தில், விவசாய குடும்பத்தை சார்ந்த 20 பெண் விவசாயிகளால் செயல்படுகிறது ஒரு சுய உதவிக் குழு.
பெரும் பாலான பெண்கள் குறைந்த படிப்பறிவு உள்ளவர்களாகவும், 3 முதல் 4 ஏக்கர் சொந்த நிலம் உடையவர்களாகவும் உள்ளனர். இதன் காரணமாக நிகழ்ச்சி ஒருங்கிணைப் பாளரான திரு. P.A.மேத்தியு மற்றும் IISR - ன் இந்திய நறுமனப் பொருட்கள் ஆராய்ச்சி நிலையத்தின் முதன்மை விஞ்ஞானியான முனைவர். T.K. யாகோப் அவர்களும் தொடர்ந்து இவர்களை கவனித்து, காய்கறி சாகுபடி, மீன் வளர்ப்பு, பால் பதப்படுத்துதல், பயிர் பெருக்கம், பன்றி வளர்ப்பு, கோழி வளர்ப்பு, மண்புழு தயாரித்தல், உயிரியல் âச்சி கொல்லி போன்றவற்றை தயாரிக்க வழிநடத்துகின்றனர்.
மேலும் இக்குழுவை சார்ந்த உறுப்பினர்களை வெற்றிகரமாக இயங்கும் நிறுவனங்களுக்கு சுற்றுலா அழைத்து சென்று, பல்வேறு விஷ்யங்களை தெரியப்படுத்துகின்றனர்.
பல பிரச்சனைகளை கொண்டு இருக்கும் நாட்டின் விவசாய உற்பத்தியைக் காட்டிலும் தனி மனிதரின் போராட்டம் மேலோங்க முடியாது என்று முனைவர் பார்த்தசாரதி கூறுகிறார்.

நிதி உதவி :
இவர்கள் ஒரு குமுவாக சேர்ந்து செயல்பட்டால், இவர்களது கோரிக்கைகள் நிறைவேறும். இதுவரை, வங்கிகள் தனி நபர்க்கு கடனுதவி வழங்குவதை விட குழுக்களுக்கு அதிகமாகவும் வசதியாகவும் வழங்குகின்றனர்.
குழுக்கள் அமைப்பது மட்டும் பிரச்சனைகளுக்கு தீர்வாகாது. குழு உறுப்பினர்கள் சொந்தமாக தொழில் செய்ய தேவையான நிதியுதவியை குழுக்கள் ஏற்படுத்த வேண்டும்.
இதற்கு முதலில் குழுக்கள் கூட்டுறவு வங்கிகளுடன் இணைக்கப்பட்டு கடனுதவி பெற்று, பல்வேறு வருமானம் வரும் வழிகளில் இதை உபயோகப்படுத்த வேண்டும் என்று முனைவர் T.K. யாகோப் கூறுகிறார்.

குறைந்த வட்டி :
இக்குழுவின் ஒருங்கினைப்பாளரான திருமதி. டெய்சி பிரான்சிஸ் கூறுகையில் “எக்குழுவில் பலர் கடனுதவி பெற்றுள்ளதாகவும் தற்போது செய்து வரும் செயல்களின் மூலம் வரும் வருமானத்தை கொண்டு இக்கடன் தொகையை திரும்ப செலுத்திவிட்டதாகவும் கூறுகிறார்.
மேலும் இப்போது ஒவ்வொரு நபரின் பங்கான, 5000 ரூபாய் முதல் 9000 ரூபாய் வரை சேமித்துள்ளனர். இதன் மூலம் எந்த ஒரு உறுப்பினரும் கடனாக ரூபாய் 30,000 வரை, குறைந்த வட்டி தொகையில் பெறலாம்.
ஒவ்வொருவரும் தாங்கள் தயாரித்த மண்புழு உரத்தை கொண்டு இயற்கை முறையில் காய்கறி சாகுபடி செய்து, தங்கள் தேவைகளை âர்த்தி செய்து கொள்கின்றனர்.
சுமார் 10 பெண்கள் கொண்டு குழு, 2 - 7 பசுக்களை கொண்டு பால் உற்பத்தியில் ஈடுபட்டுள்ளனர். இதன் மூலம் பால் கூட்டுறவு சங்கத்தில் தினமும் பால் விற்று நிகர லாபமாக 100 முதல் 140 ரூபாய் வரை ஒரு மாட்டில் இருந்து ஒரு நாளைக்கு பெறுகின்றனர்.
மேலும், மாட்டுச் சாணத்தை விற்பதன் மூலம் சுமார் 2000 ரூபாய் முதல் 1400 ரூபாய் வரை வருமானம் பெறுகின்றனர். இதிலும் கூடுதலாக, சிலர் பசு கன்றுகளை விற்று 5000 முதல் 6000 வரை பெறுகின்றனர்.
இதே போல் நான்கு பேர் கொண்ட குழு ஆடு வளர்க்கும் பகுதி ஒன்றை வைத்துள்ளனர். இங்கு 3 - 7 தெளிச்சேரி இன் ஆடுகளின் மூலம்    1000 ருபாய் முதல் 9000 ரூபாய் வரை ஒவ்வொரு வருடமும் பெறுகின்றனர். கூடுதலாக ஆட்டின் சாணத்தை கொண்டு 2400 - 5000 ருபாய் வரை வருட வருமானமாக அடைக்கின்றார்.

உள்éர் வளங்கள் :
இக்குழுவின் உறுப்பினரான சைநபா கூறுகையில், ஒவ்வொரு ஆட்டுக்கும் மருத்துவச் செலவாக ஒரு வருடத்திற்கு 100 ரூபாய் செலவிடுவதாகும். மற்ற தீவனங்களுக்கு என்று எதுவும் செலவிடுவதில்லை என்றும் கூறுகிறார். ஏனெனில் தேவையான அனைத்து தீவனங்களும் அப்பகுதியிலேயே கிடைப்பதால் இதற்கென்று தனியாக செலவிடுவதில்லை.
ஒவ்வொரு குழுவும் முதலில் 280 கோழிக் குஞ்சுகளை கொண்ட கோழிப் பண்ணை ஒன்றை ஆரம்பித்தனர். இது அந்த வருடத்திலேயே 2000 கோழிகளாக பெருக்கின. இவ்வாறாக அப்பெண்கள் முட்டை விற்பனை உள்éர் சந்தையில் இறைச்சி விற்பனை போன்று பலவகைகளில் இருந்து 11,000 ரூபாய் சம்பாதித்தனர். மேலும் இரண்டு பெண்கள் காட்சிக்காக வைக்கப்படும் மீன்களை வளர்த்து, அவற்றை விற்பனை செய்ததன் மூலம் 4800 ரூபாய் பெற்றனர்.

தொடர்புக்கு :
திரு. P.A.மேத்தியு
தொலைபேசி : 0496 - 2662372
மின்னஞ்சல் :  kvkcalicut @ sancharnet.in
மற்றும் :
முனைவர் T.K. யாகோப்,
முதன்மை விஞ்ஞானி,
அலைபேசி : 0944753967
மின்னஞ்சல் : Jacodtk @ spices.res.in


எட்டு நாளைக்கொரு தண்ணி ஏக்கரக்கு 2,100 கிலோ நெல்

 

“நான்  இயற்கை விவசாயத்துக்கு மாறி ரொம்ப வருஷமாச்சு. ‘முதல் 5 வருஷம் வரைக்கும்தான் இயற்கை விவசாயம். அதுக்குப் பிறகு இலவச விவசாயம்’னு சொல்வாங்க. அதை நான் அனுபவத்துல உணர்ந்துட்டேன். என் வயல்கள்ல இப்ப தொழுவுரம்கூட போடுறதில்லை. அந்தளவுக்கு மண்ணு பொன்னாயிருக்கு” இயற்கை விவசாயத்தைப் போற்றிப் பாடியவர்.
“விவசாயச் சுற்றுலாவுக்காக புனே போயிருந்தப்ப, நாம காய்கறி சாகுபடி செய்ற மாதிரி அவங்க நெல் சாகுபடி செஞ்சுருந்ததைப் பார்த்தேன். ஒரே ஆச்சர்யமா போயிட்டுது. ஊர் திரும்பினதும், எழுபது சென்ட் நிலத்துல கோ 39 சன்ன ரக நெல்லை, அதே மாதிரி இயற்கை முறையில செஞ்சேன். 120 நாள் வயசுள்ள இந்தப் பயிர் நல்லா வளர்ந்து, அறுவடையும் முடிஞ்சுடுச்சு. இப்படி நெல்லை விளைய வைக்குறப்ப அதிக தண்ணி தேவைப்படாது. செலவும் அதிகம் ஆகாது” என்றவர், சாகுபடிப் பாடத்தை நடத்த ஆரம்பித்தார்.
பத்தடிக்குப் பத்தடி பாத்தி
“சாகுபடி நிலத்துக்கு மிக அருகில் நாற்றங்கால் இருப்பது அவசியம். வழக்கமான முறையில் நாற்றங்கால் அமைத்து, ஏக்கருக்கு ஐந்து கிலோ விதைநெல்லைத் தூவ வேண்டுமு். தண்ணீர் தெளிக்கும்போது அதில் பஞ்சகவ்யாவையும் கலந்து தெளித்தால், நாற்றின் வளர்ச்சி அபாரமாக இருக்கும். பதினைந்து நாள் வயதுடை நாற்றை மண்வெட்டியால் கேக் மாதிரி வெட்டி எடுத்து நடவு செய்யவேண்டும்.
ஈர நடவு
நாற்று தயாராகும்போதே, நடவுக்கான நிலத்தை ரோட்டவேட்டர் இயந்திரத்தைப்  பயன்படுத்தி இரண்டு உழவ செய்து புழுதியாக்கி, பத்தடி நீளம், பத்தடி அகலத்தில் பாத்தி எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் ஈர நடவாக நாற்றை நடவு செய்யும் அதேமுறையில் ஒவ்வொரு மிளகாய், வெங்காயம் நடவு செய்யும் அதே முறையில் ஒவ்வொரு நாற்றாக முக்கால் அடி இடைவெளியில்  ஈர நடவு செய்ய வேண்டும்.
எட்டு நாளைக்கு ஒரு தண்ணீர்
நடவு முடிந்ததும் அடுத்த நாள் உயிர்த் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். அடுத்ததாக எட்டு நாளைக்கு ஒரு தண்ணீர் பாய்ச்சினால் போதும். கதிர் பிடித்த பிறகு வெயில் அதிகமாக இருந்தால் மூன்று நாள் இடைவெளியில் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். ஒவ்வொரு முறை நீர் பாய்ச்சும் போதும் பாசன நீரில், ஏக்கருக்கு 500 லிட்டர் அமுதக்கரைசலைக் கலந்து விட்டுக் கொண்டே வந்தால் நிலம் வளமாகும். நடவிலிருந்து 15 நாள் இடைவெளியில் ஒரு டேங்குக்கு (10லி) 300 மில்லி பஞ்சகவ்யா, 100 மில்லி மீன் அமினோ அமிலம், 300 மில்லி வேப்பங்கொட்டைக் கரைசல் இது மூன்றையும் ஒன்றாகக் கலந்து தெளிக்க வேண்டும். ஏக்கருக்கு பத்து டேங்க் தேவைப்படும். நடவு செய்த 20, 40 மற்றும் 60-ம் நாட்களில் மற்ற பயிர்களுக்கு எடுப்பத போலவே கொத்து மூலமாக களை எடுக்க வேண்டும்.
கதிர் வைக்கும்போது, பச்சிலைப் பூச்சித் தாக்குதல் கொஞ்சம் இருக்கும். டேங்குக்கு 500 மில்லி அக்னி அஸ்திரம் தெளித்து அதைக் கட்டுப்படுத்தலாம். ஏக்கருக்கு 10 டேங்க் தேவைப்படும். தண்ணீர் குறைவாகக் கொடுப்பதால் வயலில் வெப்பம் அதிகமாக இருக்கும். இதனால், வழக்கமாக நெல் வயல் தண்ணீரில் மிதந்து கொண்டிருக்கும் பூச்சிகள், வயல் பக்கம் எட்டியே பார்க்காது. அதேபோல வயலில் ஆங்காங்கே பறவைகள் அமர்வதற்கான குச்சிகளை நட்டு வைத்து விட்டால், பூச்சிகளைப் பறவைகளே பார்த்துக் கொள்ளும். அடுத்தது அறுவடைதான்”
70சென்ட் நிலம் 1,500 கிலோ நெல்
“நான் பாத்தி நடவுல 3 கிலோ விதை போட்டு 1,500 கிலோ மகசூல் எடுத்திருக்கேன். ஏக்கருக்கு கணக்குப்போட்டா 2,100 கிலோ. அதே போல எங்க பகுதியில எலிக்கும், காட்டுப்பன்றிக்கும் பயந்துகினட்டு பெரும்பாலும் நெல் நடமாட்டாங்க. ஆனா, பாத்தி முறையில நெல் நட்டப்ப எலித் தொந்தரவு இதுக்கக் காரணம் பயிர் விசாலமா இருக்கறதுதான். அதேபோல வயல்ல அங்கங்க வெள்ளைத் துணியை கட்டித் தொங்க விட்டேன். அதைப் பாத்துட்டு காட்டுப்பன்றியும் பக்கத்துலயே வரல. நெல் வயல்ல எப்பவும் தண்ணி நிப்பாட்டனுமேனு கவலைப்படுற விவசாயிக தைரியமா இந்த முறைக்கு மாறலாம். வழக்கமான நெல் நடவுல இருக்கற ஆரம்ப கட்டச் செலவுகள் எதுவுமே இல்லாததுனால நிச்சயம் லாபகரமா இருக்கும்”.

தொடர்புக்கு
குழந்தைவேல்
தருமத்துப்பட்டி
திண்டுக்கல் மாவட்டம்
அலைபேசி 98436-56904


வேளாண்மை - செம்மை நெல் சாகுபடியில் ஒரு பெண்மணியின் முயற்சி



திருமதி. விஜயலஷ்மி, விழுப்புரம் மாவட்டம், விக்ரவாண்டியை சேர்ந்த பெண் விவசாயி. இவர் இப்போது அப்பகுதியின் பெருமைக்குரியவர். இதன் காரணம், அவரது செம்மை நெல் சாகுபடி முறையாகும். இது மற்றவர்களை காட்டிலும் அதிக மகசூல் தந்து வெற்றியரிந்ததேயாகும்.
கடந்த சில மாதங்களாக, பல விவசாயிகள் இவரது நிலத்தை ஆச்சரியம் மூட்டும் பார்வையுடன் வலம் வருகின்றனர். மேலும் இவரது வெற்றியின் இரகசியத்தை அறியவும் ஆவலுடன் இருக்கின்றனர்.
இவையனைத்திற்கும் திருமதி.விஜயலஷ்மி, ஒரே பதில், செம்மை நெல் சாகுபடி யாகும். அப்பகுதியில் இருக்கும் மற்ற விளை நிலங்களை காட்டிலும், இவரது செம்மை நெல் சாகுபடியை காண தமிழ்நாடு விவசாய பல்கலைக்கழகத்தை சார்ந்த பல ஆராய்ச்சியாளர்களும், பிற அரசாங்க அதிகாரிகளும் மாவட்ட ஆட்சியரும் வந்த வண்ணம் உள்ளனர்.
திருமதி.விஜயலஷ்மி, முதல் செம்மை நெல் சாகுபடி விவசாயியான இவர் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக அதிகாரிகளுடன் இணைந்து வெற்றிகரமாக செம்மை நெல் சாகுபடி மேற்கொள்கிறார்.
இதற்கான முதற்படியாக, ஒரு ஹெக்டர்க்கு 3 கிலோ விதை விகிதம் பாய் நாற்றங்கால் எழுப்பினார். ஒரு புதிய முயற்சியாக பாலிதீன் பைகளுக்கு மாறாக வாழை இழைகளை நாற்றங்கால் அமைக்க உபயோகிக்கப்பட்டது.
பதினான்கு நாட்கள் இச்சூழலில் வளர்ந்த செடிகளை, ஒவ்வொரு செடிகளுக்கும் 22.5 x 22.5 செ.மீ. இடைவெளியில் நடவு செய்யப்பட்டது. மேலும் ஒரு நாள் இடைவெளியில் பாசனமும் மேற்கொள்ளப்பட்டது.
கோனோ வீடர் (cono weeder) மூலமாக களை கட்டுப்படுத்தப்பட்டது. நாட்கள் செல்ல தூர்விடுதல் மூலமாக, பயிர் வளர்ச்சியின் வெற்றி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. அதிகபடியாக 110 தூார்கள் கணக்கிடப்பட்டுள்ளது.
வராகநதி வடிகால் பகுதியில், ஒரு ஹெக்டேரில் அதிக மகசூலாக 7.36  டன் சாகுபடி செய்துள்ளார். இவ்வாறாக செம்மை நெல் சாகுபடியில் பல வெற்றிகளை காண்கிறார் இவர்.
தொடர்புக்கு:
திருமதி.விஜயலஷ்மி,
விக்ரவாண்டி, விழுப்புரம் மாவட்டம்,
தமிழ்நாடு - 605 602
அலைபேசி: 9790238445


சோக்குப்பம் (sokuppam) கிராமத்தில் செம்மை நெல் சாகுபடியில் ஒரு முன்னோடி விவசாயி



விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், சோக்குப்பம் கிராமத்தை சார்ந்த முன்னோடி விவசாயியான, திரு.வாசு அரங்கநாதன், தமிழ்நாடு நீர்வள நீளவளத்திட்டத்தின் வழிகாட்டுதல் மூலமாக செம் நெல் சாகுபடியை மேற்கொள்கிறார்.
அவ்வதிகாரிகளின் மேற்பார்வையில் அவரது 7 ஏக்கரில், 5 ஏக்கர் நிலத்தில் வாய்கால் பாசான முறைபடி செமமை் நெல் சாகுபடியை ஆரம்பித்தார்.
பயிர் வளர்ச்சியின் போது, பிற விவசாயிகளின் மூலமாக கசப்பான அனுபவமே கிடைத்தது. ஆனால் அறுவடையின் போது கண்ட அதிக மகசூலை பார்த்து அனைவரும் ஆச்சரியம் கொண்டனர். சாதாரணமாக 37 மூட்டை மகசூல் கிடைக்கும் இடத்தில், இவர் செம்மை நெல் சாகுபடியின் மூலம் 78 மூட்டை மகசூல் பெற்றார். இவர் இப்போது, செம்மை நெல் சாகுபடியில் ஒரு முன்னோடி விவசாயியாக திகழ்கிறார்.
தொடர்புக்கு:
திரு.அ.வாகு
மாரியம்மன் கோவில் வீதி,
சோக்குப்பம், செஞ்சி வட்டம்,
விழுப்புரம் மாவட்டம்
அலைபேசி: 9943652120


இயற்கை விவசாயம்

 

பசிக்கு உணவளிக்கும் விவசாயம், இப்போது வியாபாரீதியில் எடுத்துச் செல்லப்படுகிறது.
இயற்கை விவசாயியும், பாரம்பரியம் நெல் விதை சேமிப்பாளாரும் ஆன திரு.எம்.ஜி.எஸ்.சங்கர் திருநெல்வேலி மாவட்டத்தை சார்ந்தவர். இவர் கூறுவதுதாவது வியாபார மையம் ஆக்கப்பட்ட பின் குறிப்பிட்ட இடத்திற்குரிய பாரம்பரிய விதைகள் மற்றும் செடிகள் அழிந்தன என்பதாகும்.
அதிக பணம் சம்பாதிக்கும் நோக்கத்தில், பல விவசாயிகள், நவீன  தொழில்நுட்பங்கள் மற்றும் வீரிய ஒட்டு பயிர் இரகங்களை உபயோகின்றனர். வீரிய ஒட்டு விதைகளை பல நிறுவனங்களே விநியோகிக்கிறது. கூடுதலாக இவற்றிக்கான உரம், பூச்சிகொல்லி மருந்துகளையும் அவைகளே விற்பனை செய்கின்றனர்.
வெளிபுற சார்ப்பு (External Dependency)
நிறுவனங்களின் வீரிய ஒட்டு விதை விநியோகம் காரணமாக விவசாயிகள் வெளிபுர காரணிகளான விதை, உரம், இயந்திரம் மற்றும் வேயைாட்கள் ஆகியவையை சார்ந்து இருந்தனர். இதன் விளைவாக பயிர் வளர்ச்சி தடைப்பட்டு, விவசாயிகள் கடனாளிகள் ஆகும் நிலைமைக்கு வந்தனர். மேலும் சிலர் தற்கொலை முயற்சியிலும் இடப்பட்டனர்.
திரு.சங்கர், தனது விளைநிலத்தில் பாரம்பரிய நெல் வகைகளான அரிகாராபி (Arikaraabi), கொட்டாரம் சம்பா (Kotaram samba), தூய மல்லி (Thooya malli) ஆகியவையை சாகுபடி செய்கிறார். இவற்றில் அரிகாராபி மற்றும் கோட்டாரம் சம்பா பயிர்களை 150 நாட்களிலும் தூய மல்லி இரகம் - 120 நாட்களிலும் சாகுபடி செய்யலாம்.
இவை மூன்று இரகங்களும் திருநெல்வேலி மாவட்டத்தில் அக்டோபர் முதல் நவம்பர் மாதம் வரை மட்டும் பயிரிடலாம். திரு. சங்கர் இயற்கை வேளாண் இடுபொருட்களான மண்புழு உரம், பஞ்சகாவியா மற்றும் இலை சாறு போன்றவற்றை நெல் சாகுபடிக்கு உபயோகப்படுத்தினார். மேலும் இவர், செம்மை நெல் சாகுபடி முறையும் கடைப்பிடிக்கிறார்.
Preserve & Protect:
திரு.சங்கர் வலியுறுத்துவது யாதெனில் “வீரிய ஒட்டு இரகங்கள் அதிக மகசூல் தரும் ஆயினும், பாரம்பரிய விதை வகைகளை பாதுகாக்கும் பொறுப்பு விவசாயிகளக்குரியதும்”. பாரம்பரிய விதைகளை பாதுகாத்தல் என்பது ஒவ்வொரு விவசாயின் செயல்திட்டமாகும். ஒருவரின் சுயமரியாதை எவ்வளவு முக்கியமானதோ, அது போன்று தாவரவளம் மற்றும் விலங்குகளின் பாதுகாப்பு இன்றியமையாதது. அனைத்து நிபந்தனைகளிலும் வீரிய ஒட்டு இரகங்கள் செழிந்து வளர்வதில்லை. ஏனெனில், அப்பகுதியை சார்ந்த இரகங்களைகாட்டிலும். அதிக கவனமும் எச்சரிக்கையும் இவ்வீரிய ஒட்டு இரகங்களுக்கு தேவை. மேலும் பூச்சி தாக்குதல் பாரம்பரிய விதைகளை் காட்டிலும் அதிகமாக இருக்கும் / காணப்படும்.
வீரிய இரக விதைகளை பாரம்பரிய இரகத்துடன் ஒப்பிடுகையில் வீரிய இரகத்தின் விலை அதிகம் என்பது புலப்படும். ஒரு ஏக்கர் நிலத்தில், நெல் சாகுபடி செய்ய, இரு பொருட்களான வீரியவிதை, உரம் மற்றும் வேலை ஆட்கள் என்று கிட்டத்தட்ட 5,000 ரூபாய் தேவைப்படுகிறது. வரை ஒரு சிறுவிவசாயி செலவிட நேர்கிறது.
ஆனால் சில பாரம்பரிய விதைகளை, சேமித்து அவற்றை கொண்டு இயற்கை முறையில் சாகுபடி செய்ய ஒரு ஏக்கருக்கு ரூபாய் 500 முதல் 700 வரை மட்டுமே செலவாகும். மேலும் முக்கியமாக, பயிர் சாகுபடி செய்தபின், அதில் ஒரு பகுதியை சுத்தம் செய்து, அடுத்த பருவகாலத்திற்கு பாதுகாத்து வைக்கலாம், இவ்வகை வீரிய இரக விதைகளுக்கு பயன்படாது.
இன்றைய காலகட்டத்தில் ஒரு தெளிவான குறிக்கப்பட்ட விலை விபரம், பாரம்பரிய விதைகளுக்கு இல்லை. ஒரு கிலோ நெல் விதை 10 ரூபாய்க்கு விற்றால் கூட அதில் லாபம் பெற முடிகிறது.
Sustainable technology:
பயிர் உற்பத்தி, ஆய்வுக்கூடத்திலோ, உர உபயோகத்தினாலோ இல்லாமல், இயற்கை விவசாய முறையில் சாகுபடி செய்வதன் மூலம், நிலத்திற்கு எவ்வகை தீங்கும் விளைவிக்காமல் நல்ல மகசூல் பெற வழிவகுக்கும். இவ்வுண்மையை அறிந்துக்கொள்ள விவசாயிகளுக்கு நீணட் காலமானது என்று திரு.சங்கர் கூறுகிறார்.
ஒரு நாட்டின் உணவு உற்பத்தி, வெற்றிபெற, இயற்கையோடு ஒன்றிய விவசாய முறையை கடைப்பிடிக்க் வேண்டும் என்று கொள்கைதாரர்கள் உணர வேண்டும். ஏனெனில் வேளாண்மை என்பது மனிதனக்கும் இயற்கைக்கும் ஆன இடைத்தாக்கம்.

தொடர்புக்கு:
திரு.எம்.ஜி.எஸ்.சங்கர்,
9, வலம்புரி அம்மன் கோவில் வீதி,
திருநெல்வேலி - 627 006 தமிழ்நாடு
மின் அஞ்சல் முகவரி : nelkan39@yahoo.co.in
அலைபேசி : 94433-39824


கலப்பு பண்ணை திட்டம் ஓர் அனுபவம்


அண்மைகாலத்தில், கேரளாவில் உள்ள பல கல்வியறிவுள்ள இளைஞர்கள் விவசாயம் செய்ய முன்வருகின்றனர். கடந்த இருபது ஆண்டுகளாக விவசாயம் செய்யும் ஒரு விவசாயி மேற்சட்டை கூட இல்லாமல் பாடுபட்டான், ஆனால் இன்றைய சூழல், படித்த கல்வியறிவுற்ற இளைஞர்கள் ஆழ்ந்த ஈடுபாட்டுடன் விவசாயத்தில் முன்னேறி வருகின்றனர். இது விவசாயத்தின் வெற்றியை எடுத்துக்காட்டுகிறது என்று கூறுகிறார். இந்திய நறுமண பொருள் ஆராய்ச்சி கழகத்தை சார்ந்த இயக்குநர் முனைவர். வி.எ.பார்த்தசாரதி
இயற்கை விவசாய முறையும், இளைஞர்களின் முயற்சியும் ஒன்றாக இணைந்து சரியாக செயல்படும் ஆயின், தோல்வி என்ற சொல்லே மறைந்து வெற்றி ஒன்றே இருக்கும்.

தகுதியான வழிகாட்டுதல்:
மேலாம் கூறுகையில், “திரு ராய் தாமஸ் (Roy Thamas) கேரளாவின் கோழிக்கொடு மாவட்டத்தை சார்ந்த படித்த விவசாயி இவர் அனைவரின் முன்மாதிரியாகவும், எடுத்துக்காட்டாகவும் திகழ்வதாக கூறினார். இவர் அறிவியலாளர்களின் (விஞ்ஞானி) ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலின் படி தனது எட்டு ஏக்கர் நிலத்தில் 120 தென்னைகளும், 400 அரிக்கா மரங்களும் 100 கோக்கோ செடிகளையும் வளர்க்கிறார். இதன் மூலம் இவருக்கு வருமானமாக ஆண்டுக்கு இரண்டு இலட்ச ரூபாய் கிடைக்கிறது.

ஊடுபயிர்:
இவற்றில் தென்னை மரங்களில் சுமார் 50 மிளகுக்கொடிகளை படரவிடப்பட்டுள்ளது. மேலும் வாழை, மஞ்சள், இஞ்சி ஆகியவையும் ஊடுபயிராக வளர்க்கிறார். இதில் முக்கிய வருமானமாக 1,26,000 ரூபாயை தென்னை, அரிக்கா நாட்டி வாழை, இஞ்சி மற்றும் மஞ்சலில் இருந்து பெறுகிறார்.
வேளாண்  அறிவியல் நிலை விஞ்ஞானிகள் வழங்கிய ஆலோசனையின் பேரில் பிரதமரின் ரோஹர் யோஜீனா திட்டத்தில் கடனுதவிக்கு விண்ணப்பித்தார்.
இதன் மூலமாக கொட்டகை அடைத்து அதில் முயல் வளர்க்க ஆரம்பித்தார். இதில் இரண்டு வீதமாக கொட்டகையை வடிவமைத்தார். ஒன்று 10 முயல்கள் வளர்க்கும்விதமான பெரியகொட்டகையும் மற்றொன்றை 4 முயல்கள் வளர்க்ககூடிய சிறிய கொட்டையாகவும் வடிவமைத்தார். இவ்வாறாக தற்போது 60 முயல்கள் வளர்க்கின்றார்.
ஒவ்வொரு முயலுக்கும் தினசரி உணவு மற்றும் மருந்து செலவுகாக 2 ரூபாய் செலவிடுகிறார். ஒரு பெண் முயல் 5 முதல் 6 குட்டிகள் தருகிறது. இவை பிறந்து 45 நாட்கள் ஆன பிறகு ஒவ்வொரு ஜோடியும் 350 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
இவ்வாறாக இதுவரை முயல்கள் விற்பனை மூலம் 6000 ரூபாய் லாபம் கண்டுள்ளார்.

கோழி வளர்ப்பு:
மேலும் இரண்டு கோழி வளர்ப்பு பண்ணைகளும் அமைத்துள்ளார். ஒவ்வொரு கொட்டகையும் 250 முதல் 350 கோழிகள் வரை வளர்க்கும் இடமுடையது. கட்சசேரி (Hatchery) அரசிடமோ, அல்லாது கேரளா வேளாண் பல்கலைக்கழகத்தில் இருந்தோ, ஒரு நாள் வயதான கலிங்கா அல்லது கிராம இரக கோழிக் குஞ்சுகளை வாங்கி, அவை 45 நாட்கள் ஆகும் வரை வளர்க்கப்படுகிறது. பின் ஒவ்வொரு கோழியில் இருந்தும் ரூபாய் 10 கிடைக்குமாறு விற்பனை செய்கிறார். இதுவரை 5 குழுக்களாக சுமார் 3200 கோழிகளை 32000 ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளார்.
கூடுதலாக அலங்காரம் பறவைகளுக்கான கொட்டகையினில் பறவைகளை வளர்த்து, அதன் மூலம் ஒரு நாளுக்கு ஒரு பறவை விற்பனை மூலம் 150 ருபாய் பெறுகிறார். இதுவரை 30 பறவைகளை நான்கு மாதங்களில் 5100 ரூபாய் விற்று லாபம் அடைத்துள்ளார்.
இது மட்டும் இன்றி பறவைகளின் கழிவுகள் மற்றும் இலைச்சருகுகளை கொண்டு இயற்கை உரம் தயாரித்து நிலங்களுக்கு உபயோகித்தார். மேலும் முயலின் கழிவினை கொண்டு வீட்டு உபயோகத்திற்கான எரிவாயு தயாரித்தார்.
இவ்வாறான பல கலப்பு பண்ணை திட்டத்தின் காரணமாக கேரள அரசின. வேளாண் துறை இவருக்கு “சிறந்த விவசாயி” எனும் விருதினை தந்து சிற்பித்தது.

தொடர்புக்கு:
திரு.ராய் தாமஸ்
ஆன்ட்ரோத் வீடு
வண்ணத்திசீறா அஞ்சல்
மருதோம்கரா
கோழிக்கோடு மாவட்டம் கேரளா - 673 513
அலைபேசி : 09447494078
முனைவர் பி.எ.மேத்திய, பயிற்சி ஒருங்கிணைப்பாளர்
மின் அஞ்சல் :kvk@spices.res.in
தொலைபேசி : 0496 2662372
அல்லது முனைவர்.பி.கே.யாகோப், முதன்மை விஞ்ஞானி
IISR
மின் அஞ்சல் : jacobtk@spices.res.in

 
   

செம்மை நெல் சாகுபடி
துல்லிய பண்ணையம்
நன்னெறி வேளாண்
முறைகள்

நன்னெறி ஆய்வக
முறைகள்

நன்னெறி மேலாண்மை
முறைகள்

   
 
 
   

அரசு திட்டங்கள் & சேவைகள்
நீர்வள,நிலவள திட்டம்
வட்டார வளர்ச்சி
வங்கி சேவை & கடனுதவி
பயிர் காப்பீடு
வேளாண் அறிவியல் நிலையம்
விவசாய தொழில்நுட்ப
மேலாண்மை முகாம்

கிசான் அழைப்பு மையம்(1551)
பல்லாண்டு மேம்பாட்டு
குறிக்கோள்

தன்னார்வ தொண்டு
நிறுவனங்கள் &
சுய உதவிக் குழுக்கள்

   
 
 

குறைந்த பட்ச ஆதார விலை
இடுபொருள் நிலவரம்
ஏற்றுமதி & இறக்குமதி
காப்புரிமை

 
 

சுற்றுச்சூழல் மாசுப்பாடு
இயற்கை சீற்ற மேலாண்மை
தகவல் & தொலைத்தொடர்பு
தொழில்நுட்பம்

முக்கிய வலைதளங்கள்

   

வல்லுனரை கேளுங்கள்

 
     
 

|| | | ||||

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2008

மேலே