முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
வெற்றிக் கதைகள் :: தோட்டக்கலை

கீரை சாகுபடியில் சாதிக்கும் விவசாயி

கட்டத் தேவன்,
மேல்மங்கலம்,
தேனி மாவட்டம்.
தொடர்புக்கு : 99445 23405

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மேல்மங்கலத்தை சேர்ந்த விவசாயி கட்டத் தேவன், 10 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு கீரை செடிகளை வளர்த்து அதிக லாபம் ஈட்டி வருகிறார். இவர் 60 சென்ட் நிலத்தில் வெந்தயக்கீரை, மிளகு தக்காளி கீரை, அரைக்கீரை, பருப்பு கீரை, சிறுகீரை, சிவப்பு பொன்னாங்கண்ணிக் கீரை, அகத்திக்கீரை என பல வகை கீரைகளை சாகுபடி செய்துள்ளார். நோய் தாக்குதல் இல்லாமல் இருந்தால் ஆறு மாதம் முதல் ஓராண்டு வரை இதன் பயனை அனுபவிக்க முடியும். வியாபாரிகள் தோட்டத்திற்கு வந்து வாங்கிச்செல்கின்றனர். ஒரு கிலோ ரூ.10 வரை விலை கிடைக்கிறது. ஒரு முறை அறுவடை செய்துவிட்டால் மீண்டும் 10 நாட்களுக்கு பிறகு தான் மீண்டும் அறுவடை செய்யமுடியும். கீரைகள் நல்ல முறையில் வளர்ந்து பலன் தரவேண்டும் என்றால் உவர்ப்பு தன்மை உள்ள நீரை பயன்படுத்த வேண்டும். ஆண்டிற்கு ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் வருமானம் கிடைக்கிறது. நெல், வாழை, கரும்பு என பணப்பயிர்களை பயிரிட்டு நீர் பற்றாக்குறை மற்றும் நோய் தாக்குதலால் விவசாயிகள் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் இவர் மகிழ்ச்சியாக விவசாயம் செய்துவருகிறார். விவசாயி கட்டத்தேவன் கூறியதாவது: எனக்கு சொந்தமான விவசாய கிணற்றில் கிடைக்கும் நீர் உவர்ப்பு தன்மை கொண்டதாக உள்ளது. இதனால் காய்கறி மற்றும் இதர பயிர்களை சாகுபடி செய்தால் பலன் கிடைக்காது. இதனால் கீரை சாகுபடியில் ஈடுபட்டேன், என்றார்.



Updated on April, 2015
 
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2015