|
வேளாண் காலநிலை நிலவரங்கள்
மழையளவு
வேளாண் காலநிலை மண்டலம் மற்றும் பெரும்பான்மை வேளாண் சூழலியல் நிலவரங்கள் (மண் மற்றும் நிலப்பகுதியைப் பொறுத்து)
வ.
எண் |
வேளாண் காலநிலை மண்டலம் |
சிறப்பியல்புகள் |
1. |
பகுதி வறண்ட காலநிலை தட்பவெப்பமண்டல் |
திண்டுக்கல் மாவட்டம் பல்வேறு வேளாண் காலநிலைகளைப் பகுதி வறண்ட காலநிலை முதல் மிதத் தட்பவெப்ப மண்டலம் வரை பெற்றிருப்பதால் பல்வேறு வேளாண் மற்றும் தோட்டக்கலைப் பயிர்கள் சாகுபடி செய்வதற்கு இந்த காலநிலைப் பயன்படுகின்றது. |
வ. எண் |
வேளாண் சூழலியல் நிலவரம் |
சிறப்பியல்புகள் |
1. |
தமிழ்நாட்டில் உள்ள தெற்கு மண்டலம் |
திண்டுக்கல் மாவட்டம் தமிழ்நாட்டில் தெற்கு மண்டலத்தில் அமைந்துள்ளது. இந்த மாவட்டத்தின் இருப்பிடமானது 80 மற்றும் 100 55’ வடக்கு அட்சரேகை மற்றும் 790 55’ கிழக்கு தீர்க்க ரேகையில் அமைந்துள்ளது. இம்மாவட்டம் சமதளப்பகுதிகளையும் மற்றும் பகுதி மலைகளையும் பெற்று மாறுபட்ட கடல் மட்ட குத்துயரங்களைப் பெற்றுள்ளது. மாவட்டத்தின் மொத்த நிலப்பரப்பளவு 626667 எக்டர். தற்பொழுது சாகுபடி செய்யப்படும் பரப்பளவு 259710 எக்டர் மற்றும் வனப்பகுதி 138923 எக்டர் பரப்பளவு காணப்படுகின்றது. |
மண்வகைகள்
வ.எண் |
மண்வகை |
சிறப்பியல்புகள் |
1. |
இருகூர் தொடர் |
சிகப்பு கலந்த பழுப்பு நிறம் முதல் மஞ்சள் கலந்த சிகப்பு ஆழம் குறைந்தது முதல் அதிக ஆழம், சுண்ணாம்புச் சத்து அற்ற மணல். |
2. |
பாலவிடுதி தொடர் |
செம்மண், மிகுந்த ஆழம், பாறைத் துகள்கள் குவிப்பு மற்றும் சுண்ணாம்புச் சத்து அற்ற மண்வகை. |
3. |
வயலோகம் தொடர் |
செம்மண், ஆழம் முதல் மிகுந்த ஆழம், செயலற்று, சுண்ணாம்புச்சத்து இல்லாத வகையாக முன்னேற்றம் |
4. |
சோமையனூர் தொடர் |
அடர் சாம்பல் நிறம் முதல் மிக அடர்ந்த சாம்பல் நிறம் வரை மிகுந்த ஆழமான சுண்ணாம்பு சத்து பெற்ற மண் மிருதுவான சரிவுப் படுக்கைகளில் பரவியுள்ளது. |
5 |
பாலத்துறை தொடர் |
அடர் பழுப்பு நிறம் அடர் சிகப்பு கலந்த பழுப்பு நிறம், சுண்ணாம்புச்சத்து உள்ள மண், லேசானது முதல் மிதமான களர் மண், ஆரம்ப காலத்தில் சுண்ணாம்பு கலவையுடன் காணப்பட்டுள்ளது. |
6. |
பீளமேடு தொடர் |
அடர் சாம்பல் முதல் மிகுதியான அடர் சாம்பல் வரை ஆழம் முதல் மிகுந்த ஆழம் வரை, சுண்ணாம்புச் சத்து அதிக நயமான வெடிப்பான மண். |
7 |
அம்மாபட்டித் தொடர் |
அடர் சாம்பல் பழுப்பு அடர் பழுப்பு மிகுந்த ஆழம், ஆரம்பகால பாறைகளில் சுண்ணாம்புச்சத்து உள்ள மண்வகையாக முன்னேற்றமடைந்துள்ளது. நடுவின் பகுதிகளாக கால்சியம் கார்பனேட் அமைந்துள்ளது. |
|
|