1964 - 66 : கிராமப்புற இளைஞர்களுக்கு தொழில்நுட்ப கல்வி நிறுவனம் அமைய வேண்டுமென்று கல்வி ஆணையம் பரிந்துரை செய்தது. இதனடிப்படையில் ஆணையம் வேளாண் பல்நோக்கு தொழில்நுட்பம் என்ற நிறுவனத்தை பரிந்துரைத்தது. |
1966 - 72 : இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம் ஒரு புது உத்தியாக வேளாண் அறிவியல் நிலையங்கள் புதுமையான நிறுவனங்கள் மாறவேண்டும் என்று சிந்திக்க ஆரம்பித்து தொழில்நுட்ப பயிற்சிகளை பயிற்சி பெற்ற விவசாயிகளுக்கும், வயல்வெளி சார்ந்த வேளாண் அலுவலர்களுக்கும் கொடுக்க நடவடிக்கை எடுத்தது. |
1973: இந்திய வேளாண்மை ஆராய்ச்சி கழகம் 1973 ஆம் ஆண்டு ஒரு குழு ஏற்படுத்தி இந்தக் குழுவின் தரைவராக டாக்டர் மோகன் சின்கா மேத்தா, சேவா மன்தீர், உதயப்பூர் (ராஜஸ்தான்) அவர்கள் செயலாற்றி வேளாண் அறிவியல் நிலையத்தை நடைமுறைப்படுத்துவது என்ற விரிவான திட்டத்தை வெளியிட்டார். |
1974: முதலாவது வேளாண் அறிவயில் நிலையம் 1974 ஆம் ஆண்டு பாண்டிச்சேரியில் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக நிர்வாகத்தின் கீழ் கொண்டு வரப்பட்டது |
1976 - 77 : இந்திய வேளாண் அறிவியல் கழகம் சமர்ப்பித்திருந்த திட்ட அறிக்கையை திட்ட ஆணையம் அனுமதியளித்து 18 வேளாண் அறிவியல் நிலையங்களை ஐந்தாவது ஐந்தாண்டுத் திட்டத்தில் நடைமுறைப்படுத்தியது |
1977 : 1979 ஆம் ஆண்டு நடைபெற்ற நிர்வாக சபை ஆலோசனையில் மேலும் 12 வேளாண் அறிவியல் நிலையங்கள் தொடங்க அனுமதியளிக்கப்பட்டு, வேளாண் உற்பத்தி வரி மூலதனம் மூலம் இதே வருடத்தில் இந்த வேளாண் அறிவியல் நிலையங்கள் தொடங்கப்பட்டது |
1981 : கூடுதலாக 14 எண்ணிக்கையிலான வேளாண் அறிவியல் நிலையங்கள் 1981 இல் நடைபெற்ற நிர்வாக சபை ஆலோசனையில் அனுமதியளிக்கப்பட்டு, 1982 – 83 ஆம் வருடம் வேளாண் உற்பத்தி வரி மூலதனம் மூலம் இந்த வேளாண் அறிவியல் நிலையங்கள் தொடங்கப்பட்டது. |
1984 : இந்தியஅரசு, 1984 ஆம் ஆண்டு இந்திய வேளாண்மை ஆராய்ச்சி கழகத்தின் மூலம் ஒரு உயர்தர மதிப்பீடு குழுவை வேளாண் அறிவியல் நிலையத்தின் மீது அமைத்தது. திட்ட ஆணையம் ஆறாவது திட்டத்தின் மூலம் இந்திய வேளாண்மை ஆராய்ச்சி கழகத்திற்கு 44 புதிய வேளாண் அறிவியல் நிலையங்களை தொடங்க அனுமதியளித்தது. |
1992 - 93 : இருபது புதிய வேளாண் அறிவியல் நிலையங்கள் ஏழாவது ஐந்தாண்டு திட்டத்தில் தொடங்கப்பட்டது. திட்ட ஆணையம் 74 புதிய வேளாண் அறிவியல் நிலையங்களுக்கு அனுமதி அளித்தது |
1992 - 97 : 78 புதிய வேளாண் அறிவியில் நிலையங்கள் எட்டாவது ஐந்தாண்டு திட்டத்தின் மூலம் அனுமதி அளிக்கப்பட்டது |
2008 -–2009 : இந்தியாவில் உள்ள மொத்த வேளாண் அறிவியல் நிலையங்களின் எண்ணிக்கை 553 |