|| | | ||||
 

வேளாண் அறிவியல் நிலையம் - நாமக்கல் மாவட்டம்

Tamil English

வானிலை
மண் வளம்
நீர் வளம்
விதை
பண்ணை சார் தொழில்கள்
ஊட்டச்சத்து
அறுவடைக்குப்பின் சார்
தொழில் நுட்பம்

உயிரிய தொழில்நுட்பம்
உயிரி எரிபொருள்

வேளாண் காலநிலை மண்டலம் மற்றும்  பெரும்பான்மையான வேளாண் சூழலியல் நிலவரங்கள் (மண் மற்றும்  நிலப்பகுதியைப் பொறுத்து)

வ.எண் வேளாண்-காலநிலை சிறப்பியல்புகள்
1. வடகிழக்கு மண்டலம் இந்த மண்டலம் 18,271 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் விரிவடைந்து 10,28,097 எக்டர் பரப்பளவை உள்ளடக்கி 26.3 சதவீதம் சாகுபடி பரப்பளவில் உள்ளது. மொத்த சாகுபடி பரப்பளவில் 23 சதவீதம் மட்டும் (2,35,828 எக்டர்) நீாப்பாசன வசதியைப் பெற்றுள்ளது. ஆண்டு மழையளவு 849 மில்லி மீட்டர் இந்த மண்டலம் சுமாராக வறட்சி மண்டலமாக கண்டறியப்பட்டுள்ளது. நெல், கோதுமை, மக்காச்சோளம், கேழ்வரகு, கம்பு, கரும்பு, நிலக்கடலை, பருத்தி, சூரியகாந்தி, புகையிலை மற்றும் மா ஆகியவை இந்த மண்டலத்தின் முக்கியப் பயிர்கள். இந்த மண்டலத்தின் முக்கியப் பயிர்கள். இந்த மண்டலத்தின் வனப்பகுதி 30 சதவீதம் (5,35,282 எக்டர்) அளவில் அமைந்துள்ளது. இந்தப் பரப்பு மாநில அளவில் உள்ள மொத்த வனம் பகுதியில் 25 சதவீதம் அளவில் உள்ளது.

வ. எண் வேளாண் சூழலியல் நிலவரம் சிறப்பியல்புகள்
1. ஈரப்பதம் முதல் பகுதி வறண்ட காலநிலையாக மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் கர்நாடகா பீடபூமி சராசரி ஆண்டு மழையளவு 600-1200 மில்லிமீட்டர், பெரும்பான்மை மண் வகைகள் செம்மண், கரிசல் மண்  மற்றும் செங்கரளை மண்.

மண் வகைகள்

வ.எண் மண்வகை சிறப்பியல்புகள் பரப்பு (எக்டர்)
1. செம்பொறை மண் மற்றும் மணல் கலந்த செம்மண் மிருதுவான நயம், உட்புகும் அமைப்பு,சுண்ணாம்புச் சத்து இல்லை, குறைந்த மண்வளம், குறைந்த காரம் மாற்றுத் திறன் 1,98,438
2. செங்கரளை மண் மிருதுவான நயம்,திறந்த வெளி வடிகால் அமைப்பு, சுண்ணாம்புச் சத்து பற்றாக்குறை மற்றும் சுமாரான அமில செயல்பாடு 77,357
3. கரிசல் மண் நுண்துளை அமைப்பு, அடர்த்தியான மற்றும் உட்புகாத அமைப்பாக ஈரமடையும் பொழுது மண்துகள்கள் விரிவடைந்து உடன் சுருங்குகிறது. வறட்சி சமயத்தில் வெடிப்புகள் காணப்படும். 38,678
4 வண்டல் மண் மண்அமைப்பு அடர்த்தி இல்லாமலும் நல்ல வடிகால் வசதியுடனும், அடர்த்தியான மற்றும் உட்புகாத அமைப்பாகக் காண்ப்படுகிறது. 21,525

 

 
   

செம்மை நெல் சாகுபடி
துல்லிய பண்ணையம்
நன்னெறி வேளாண்
முறைகள்

நன்னெறி ஆய்வக
முறைகள்

நன்னெறி மேலாண்மை
முறைகள்

   
   
   
   

அரசு திட்டங்கள் & சேவைகள்
நீர்வள,நிலவள திட்டம்
வட்டார வளர்ச்சி
வங்கி சேவை & கடனுதவி
பயிர் காப்பீடு
வேளாண் அறிவியல் நிலையம்
விவசாய தொழில்நுட்ப
மேலாண்மை முகாம்

கிசான் அழைப்பு மையம்(1551)
பல்லாண்டு மேம்பாட்டு
குறிக்கோள்

தன்னார்வ தொண்டு
நிறுவனங்கள் &
சுய உதவிக் குழுக்கள்

   
   
   

குறைந்த பட்ச ஆதார விலை
இடுபொருள் நிலவரம்
ஏற்றுமதி & இறக்குமதி
காப்புரிமை

   
   

சுற்றுச்சூழல் மாசுப்பாடு
இயற்கை சீற்ற மேலாண்மை
தகவல் & தொலைத்தொடர்பு
தொழில்நுட்பம்

முக்கிய வலைதளங்கள்

     

வல்லுனரை கேளுங்கள்

   
 

|| | | ||||

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2008