||| | | | | |
அங்கக வேளாண்மை :: தோட்டப் பயிர்கள் :: கார்னேசன்
 

கார்னேசன் பயிரின் அங்கக சாகுபடி

ரோஸ்க்கு அடுத்தபடியாக கார்னேசன் உலகில் 2வது பிரபலாமான பூவாகும்.மஞ்சள், சிவப்பு, இளஞ்சிவப்பு, ஊதா, சிவப்பு, மெரூன், ஆரஞ்சு, லாவண்டர், செர்ரி, ஏப்ரிகாட் மற்றும் வெள்ளை நிறங்களில் இருக்கும். அமெரிக்கன் சிரிம்சன் வகைகள் கொய் மலர் சாகுபடிக்காக வணிக ரீதியாக சாகுபடி செய்யப்படுகிறது.

இரகங்கள்

நிலையான வகைகள்: மாஸ்டர், ரிவேரா, சூப்பர் ஸ்டார், கில்லர்

தெளிக்கும் வகைகள்: அலிஸ்டார், டார்லிங், ஹேப்பினெஸ், செர்ரிபேக், விர்கோ, குளோஸ்அப், இந்திரா, வீரா, கிஸ்ஸிகா

மண்

கார்னேசன் வேர்கள் மோசமாக நீர் வடியாத பகுதிகளில் வளராது, கடின மண்களிலும் வளராது, மணல் கலந்த கரும்பொறை மண் (அ) இடும் பொறை மணலில் சாகுபடி செய்ய ஏற்றது. களிமண் (அ) சில்ட் மண் வகைகளில் அங்ககப்பொருள் (அ) கம்போஸ்ட் சேர்க்க வேண்டும்.ஒரு வருடத்திற்கு மேல் பயிரிடும் பொழுது கூடுதலாக அங்ககப் பொருளைச் சேர்க்க வேண்டும்.மண்ணின் தகுந்த கார அமிலத் தன்மை 6-7.கார அமிலத்தன்மை 6-7. கார அமிலத் தன்மை குறைவாகவோ அல்லது  அதிகமாகவோ இருந்தால் பூவின் தரம் குறையும்.

வானிலை

கார்னேசன் குளிர் மற்றும் கோடையில் நிலவும் குளிர் வெப்பநிலைியலும் நன்றாக வளரும் இருந்தாலும்  சூரிய ஒளி நேராகபட்டால் பூவின் தரம் குறையும்.கார்னேசன் பயிரின் தண்டுகள் கெட்டியாக,எளிதில் உடையும். அதனால் வேகமாக வீசும் காற்றிலிருந்து பாதுகாக்க வேண்டும்.கோடை காலத்தில் 13.2 செ. வெப்பநிலையிலும், குளிர்காலத்தில் 14.3 செ. வெப்பநிலையிலும் நன்றாக வளரும்.

சாகுபடி

இரகங்களை தேர்வு செய்தல்

பல தரப்பட்ட இரகங்கள் பலதரப்பட்ட நிறங்களில் தற்போது சாகுபடிச் செய்வதற்காக உள்ளன.சந்தையில் ஏற்படும் தேவை,நிறம், வேறுபட்ட வேளாண் வானிலைகளில் வளர்வதற்கு சூழ்நிலை ஆகியவற்றை பொறுத்து இரகங்கள் தேர்வு செய்யப்படுகிறது.இருந்தாலும்,இந்திய சந்தைகளில் நிறத்திற்காக தனிச்சிறப்பு அளிப்பதில்லை.சர்வதேச சந்தைகளில் சிவப்பு,இளஞ்சிவப்பு மற்றும் வெள்ளை நிற பூ வகைகளையே  தேர்வு செய்கிறார்கள்.50 சதவீதம் வெள்ளை நிற பூக்கள்,5%சதவீதம் வெள்ளை நிற பூக்கள்,45% சிவப்பு மற்றும் இளஞ்சிவப்பு நிற பூக்கள், 5% மற்ற உபயோகங்களுக்காக விவசாயிகள் உற்பத்தி செய்கிறார்கள்.

பசுங்குடில்

பெரும்பாலான பூஞ்செடிகள் பசுங்குடிலில் பாதுகாப்புடன் வளர்க்கப்படுகின்றன.போதுமான வெளிச்சம், காற்றோட்டம் இருக்குமாறு பசுங்குடிலை அமைக்க வேண்டும்.பசுங்குடிலின் உள்ளே மிகவும் நெருக்கமாக செடிகள் இருக்கக் கூடாது.வருடத்தின் அனைத்து நேரங்களிலும் காற்றோட்டம் நன்றாக இருக்க வேண்டும். கோடை காலத்தில் வெப்பநிலையை குறைக்க வேண்டும்.பசுங்குடிலில் சூடுபடுத்தும் மற்றும் குளிர்படுத்தும் அமைப்புகளை வைக்க வேண்டும்.உள்காற்றை வெளியேற்றும் விசிறிகளை பசுங்குடிலின் பக்கவாட்டில் வைக்க வேண்டும். வெளிப்புற ஈரப்பதம் குறைவாக இருக்கும் போது இந்த அமைப்பு மிக பயனுள்ளதாக இருக்கும்.

சிறுவிவசாயிகள் குறைந்த செலவில்,நடுத்தரமான பசுங்குடிகளை அமைக்க முடியும்.குறைந்த செலவில் பசுங்குடில் அமைப்பதற்கு ஒரு சதுர அடிக்கு  20 ரூபாயும், நடுத்தர செலவில் பசுங்குடில் அமைக்க ஒரு சதுர அடிக்கு 40 ரூபாயும் ஆகிறது.அல்ட்ரா ஊதா கதிர்களால் சமநிலை செய்யப்பட்ட 200 காஜ் அளவுடைய பாலித்தீன் ஸீட்களை பயன்படுத்தி பசுங்குடில் அமைக்கலாம்.தற்பொழுது, கந்தகத்துக்கு எதிர்ப்பாக இருக்கக் கூடிய மஞ்சள் நிற பாலித்தீன் ஸீட்டுகளையும் பசுங்குடில் அமைக்கப் பயன்படுத்தலாம்.

நிலத்தைத் தயார் செய்தல்:நிலத்தை 45 செ.மீ. ஆழத்திற்கு 4-5 முறை உழவு செய்ய வேண்டும்.

படுக்கைகள் அமைத்தல்:80 செ.மீ. அகலம், 30 செ.மீ. உயரம் தேவைப்படும் நீளத்திற்கு படுக்கைகள் அமைக்கலாம். படுக்கைகளுக்கு நடுவில் நடக்கும் அளவிற்கு இடைவெளி விட வேண்டும்.

மண்ணை தயார் செய்தல்:தரைப் படுக்கைகள்,உயர படுக்கைகள் (அ) பானைகளை கார்னேசன் வளர்ப்புக்குப் பயன்படுத்தலாம். வடிகால் வசதி ஒன்றாக இருக்க வேண்டும்.சாதகமான சூழ்நிலையை உருவாக்குவதற்கு, தேவையான அளவு அங்ககப் பொருளை மண்ணுடன் கலந்து அளிக்க வேண்டும்.

விதைப்பெருக்கம்:கார்னேசன் செடித் துண்டுகள் மூலம் பெருக்கம் செய்யப்படுகிறது.வேர் துண்டுகளை குளிர்காலம் முடிந்தவுடனேயே தயார் செய்ய வேண்டும்.4 வாரங்கள் கழித்து,செடித் துண்டுகள் வேர் நட ஆரம்பிக்கும். அவற்றை கோடைக்காலத்தில் பயிரிடலாம்.

இடைவெளி:பயிரிடும் போது போதிய இடைவெளி இருக்க வேண்டும்.இடைவெளி அதிகமாக இருக்கும் போது, விளைச்சல் குறைவாக இருக்கும்.அதிக செடிகளுடன் இருந்தால்,பூவின் தரம் குறைந்துவிடும். பரிந்துரைக்கப்படும் இடைவெளி 15 15 செ.மீ. வேர்த்துண்டுகளை அதிக ஆழத்தில் நட்டால், அழுகி விடும்.

வலையிடுதல்

செடிகள் வளையாமல் நேராக வளர வேண்டும். அப்பொழுது தான் நல்ல தரமுடைய நீளக்காம்புடைய பூக்களை அறுவடை செய்யலாம்.பயிரிடுவதற்கு முன் முதல் வலையிடுதல் (7.5 X7.5செ.மீ.) 12செ.மீ. உயரத்திற்கு நைலான் நூல்களைக் கொண்டு வரையிட வேண்டும்.இரண்டாவது வலையிடுதல் (15X 65செ.மீ.) 24செ.மீ. உயர்திற்கு வலையிட வேண்டும்.3வது, 4வது, 5வது வலையிடுதல் 36செ.மீ. X 50செ.மீ. மற்றும் 65செ.மீ. உயரத்திற்கு வலையிட வேண்டும்.

உரமிடுதல்

  • பயிரிடுவதற்கு 60 நாட்களுக்கு முன் பசுந்தாள் உரமிட வேண்டும்
  • மட்கிய பண்ணை எரு ஒரு எக்டருக்கு 50 டன் மற்றும் உயிர் கம்போஸ்ட் ஒரு எக்டருக்கு 5 டன் என்ற அளவில் இட வேண்டும்
  • வேப்பங்கட்டியை ஒரு எக்டருக்கு 1.25 டன் என்ற அளவில் இட வேண்டும்
  • அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியம் ஒரு எக்டருக்கு 25 கிலோ என்ற அளவில் இட வேண்டும்
  • மண் புழு உரம் ஒரு எக்டருக்கு 5 டன் என்ற அளவில் விதைக்கும் போதும், விதைத்த 3,4,5 மாதத்திற்கு பிறகும் இட வேண்டும்
  • வேப்ப எண்ணெய் 5% பயிரிட்ட 3,4,5 மாதங்களுக்குப் பிறகு தெளிக்க வேண்டும்
  • வேப்ப எண்ணெய் 5% பயிரிட்ட 3,4,5 மாதங்களுக்குப் பிறகு தெளிக்க வேண்டும். பிறகு மண்ணில் நனைக்க வேண்டும்
  • அக்ரி ஹோட்ரா சாம்பல் பயிரிட்ட 60,90,120 நாட்களுக்குப் பிறகு தெளிக்க வேண்டும்

பயிரிட்ட பின் மேற்கொள்ளப்படும் உழவியல் முறைகள்:தேவைப்படும் சமயங்களில் கையால் களையெடுக்க வேண்டும்.

வளர்ச்சி ஊக்கிகள்

  • பஞ்சகாவ்யா 3% பயிரிட்ட முதல் மாதத்திற்கு பிறகு 10 நாட்கள் இடைவெளியில் தழைத் தெளிப்பு செய்ய வேண்டும். வருடத்திற்கு 35 தெளிப்புகள் செய்யலாம்
  • தசகாவ்யா 3% கரைசலை மாதம் ஒரு முறை ஒரு மீட்டர்2 பகுதிக்கு 1 லிட்டர் என்ற அளவில் மண்ணில் நனைக்க வேண்டும்
  • வெர்மிவாஷ் 10%கரைசலை பயிரிட்ட 3,4,5,6,7,8 மாதங்களுக்கு பிறகு தழைத் தெளிப்பாகத் தெளிக்க வேண்டும்
  • மாட்டுக் குழம்பு சிலிக்கா ஒரு எக்டருக்கு 2.5 கிராம் அளவில் பயிரிட்ட 75 நாட்களுக்குப் பின் இட வேண்டும்
  • மஞ்சூரியன் தேயிலை சாற்றை 5% பயிரிட்ட 30,45,60, 75,90 வது நாட்களுக்குப் பிறகு மண்ணில் நனைக்க வேண்டும்

நுனியை கிள்ளி விடுதல் மற்றும் பூ மொட்டை அகற்றுதல்

70 முதல் 90 நாட்கள் உள்வயதுடைய,20-25செ.மீ. உயரமுடைய செடிகளில்,மொட்டுக்களை கிள்ளி விட வேண்டும்.அப்படி செய்யம் போது 5-6 ஜோடி இலைகளுடன் இருக்க வேண்டும்.பக்க கிளைகளில் உள்ள நுனி மொட்டுக்களை கிள்ளிவிட வேண்டும்.இப்படி செய்வதால் அதிக கிளைகள் உருவாகும்.பூக்களும் அதிகதிமாக பூக்கும்.பலமில்லாத கிளைகளை 3-6 கிளைகளை மட்டும் விட்டு விட்டு அகற்ற வேண்டும்.அனைத்து பக்க மொட்டுக்களையும், ஒரே ஒரு முக்மொட்டை மட்டும் விட்டு விட்டு அகற்ற வேண்டும்.

பாசனம்

பயிரிட்ட பின்னர் உடனடியாக பாசனம் செய்ய வேண்டும்.மேலிருந்து நீரைத் தெளித்தல் முறையில் பாசனம் செய்யலாம்.பயிர் உயிர் பிடிக்க ஆரம்பிக்கும் வரை அடிக்கடி நீரை தெளிப்பு முறையில் செய்ய வேண்டும். செடியின் வளர்ச்சிக் காலத்தில் மேலிருந்து நீரைத் தெளித்தல் (அ) மேற்பரப்பில் பாசனம் செய்யலாம்.

புல்லிவட்டத்தை கட்டுதல்

கார்னேசன் பயிரில் புல்லி வட்டத்தில் பிளவு ஏற்படுதல் மிகப் பெரிய பிரச்சனையா உள்ளது.இதைக் குறைப்பதற்கு பூ மொட்டைச் சுற்றியுள்ள புல்லிவட்டத்தை பூக்கள் மலர்ந்த உடனேயே ஒரு சிறிய கயிறு கொண்டு கட்டி விட வேண்டும்.தற்பொழுது 6மி.மீ.அகலமுடைய பிளாஸ்டிக் நாடாக்கள் இரப்பர் வளையத்துக்குப் பதில் பயன்படுத்தப்படுகிறது.இரப்பர் வளையம் போல் இல்லாமல்,இந்த பிளாஸ்டிக் நாடாக்கள் அறுவடைக்குப் பின்னரும் அப்படியே விட்டு விடலாம்.மொட்டுக்கள் மிகச் சிறியதாக இருக்கும் பொழுது வளையங்கள் போடக் கூடாது.புள்ளிவட்டத்தின் அரைப்பகுதிக்கு மேலே ஒரு புள்ளியில் இந்த வளையங்களை அமைக்கலாம் அல்லது மொட்டின் விட்டம் அதிகமாக உள்ள இடங்களில் அமைக்கலாம்.

பயிர் பாதுகாப்பு

பூச்சிகள்

கட்டுப்பாடு

வெள்ளை ஈக்கள்

மஞ்சள் நிற பிளாஸ்டிக் பானைகளை விளக்கெண்ணெய் தடவி வெள்ளை ஈக்களைப் பிடிக்கலாம்

அசுவிணிகள்

10% வேப்ப இலைச் சாற்றை தழைத் தெளிப்பாக தெளிக்க வேண்டும்

சாறு உறிஞ்சும் பூச்சிகள்

10% பூண்டு மிளகாய் சாற்றைதழைத் தெளிப்பாகத் தெளிக்க வேண்டும்

வெட்டுப் புழுக்கள்

பைரித்ரம் பூச்சி விளத்தை மண்ணில் இடலாம்

நோய்கள்

கட்டுப்பாடு

இலைப்புள்ளி நோய்

5% மஞ்சூரியன் தேயிலை வடிச்சாற்றை பயிரிட்ட 2,3,5 மாதங்களுக்கு பிறகு தழைத் தெளிப்பாகத் தெளிக்க வேண்டும்

கருகல் நோய்

அக்ரி ஹோட்ரா சாம்பல் (200 கிராம் அக்ரி ஹோட்ரா சாம்பலை 1 லிட்டர் கோமியத்தில் 15 நாட்கள் ஊற வைத்து பின் 10 லிட்டர் நீரில் கரைத்து பயிரிட்ட ஒரு மாதத்திற்கு பிறகு ஒரு மாத இடைவெளியில் 3 முறை தெளிக்க வேண்டும்

மண் வழியே பரவும் நோய்கள்

டிரைக்கோடெர்மா விரிடி ஒரு எக்டருக்கு 5 கிலோ (அ) சூடோமோனஸ் ப்ளுரசென்ஸ் ஒரு எக்டருக்கு 5 கிலோ என்ற அளவில் இடவேண்டும்

அறுவடை

பயிரிட்ட 5 மாதங்களுக்குப் பிறகு பூ பூக்க ஆரம்பிக்கும். மொட்டின் அளவு மற்றும் இதழின் வளர்ச்சியைப் பொறுத்து அறுவடை செய்ய ஆரம்பிக்கலாம், வெளிப்பக்கம் உள்ள இதழ்கள் மடியாமல் பிரஷ் போல் உள்ள பூக்களை வெட்டலாம். 2-3 மேல் பூக்கள் மலரும் போது, அந்தப் பூங்கொத்தில் உள்ள மற்ற மலர்கள் ஒரே மாதிரி நிறமாக இருக்கும் பொழுது. கார்னேசன் மலர்களை வெட்டலாம். மலர்களைப் பறித்தவுடன் நீரில் அமிழ்த்தி வைக்க வேண்டும். பதமான கத்தியை கொண்டு அறுவடை செய்ய வேண்டும். ஒரு வாரத்தில் 3-4 அறுவடை செய்யலாம். இந்த செடியை தோட்டத்தில் 1-11/2     வருடத்திற்கு வைத்து வளர்க்கலாம்.

மகசூல்: ஒரு வருடத்திற்கு ஒரு செடியிலிருந்து 8 பூக்காம்புகள் கிடைக்கும்

தரம் பிரித்தல்

அறுவடை செய்தவுடன், மலர்கள் தரம் பிரிக்கப்பட்டு, கொத்தாக கட்டப்படுகின்றன.பூ தண்டின் நீளம், பூவின் விட்டம், பூவின் இயல்பு நிலையான தண்டு கெட்டியாக இருத்தல்,நோய் மற்றும் பூச்சியற்று இருத்தல், தண்டு பிளவு ஏற்படாமல் இருத்தல் புல்லிவட்டப் பிளவு ஏற்படாமல் இருத்தல்  ஆகியவற்றைப் பொறுத்து தரம் பிரிக்கப்படுகிறது.அமெரிக்கன் மலர் சாகுபடி செய்வோர் சங்கத்தின் அடிப்படை விதிகள் இந்தியாவில் தரம் பிரிக்கும் போது மேற்கொள்ளப்படுகிறது. ஒவ்வொரு காத்திலும் 25 தண்டுகளுடன் மலர்கள் இருக்கும்.

பெறி கட்டுதல் மற்றும் போக்குவரத்து செய்தல்

காற்றுப் புகும் கார்போர்டு பெட்டிகளில் கார்னேசன் மலர்கள் பொதி கட்டப்படுகின்றன. 800 மலர்கள் ஒரு பெட்டியில் (122 செ.மீ. X50 செ.மீ.X30 செ.மீ.) அடைக்கலாம். பெட்டிகள் எதுவும் உள்ளே புகாதவாறு தயார் செய்ய வேண்டும். 25 மலர்களைக் கொண்ட பூங்கொத்துக்கள் பெட்டிகளில் அடைக்கப்படுகின்றன. ஒவ்வொரு அடுக்கின் நடுவிலும் செய்தித் தாள்களை பரப்பி வைத்து அதிக ஈரப்பதத்தை மேம்படுத்தலாம். பெட்டியை நிரப்பியவுடன் இன்கலேசன் தான் கொண்ட ஒட்ட வேண்டும்.

குளிர்பதன வேனில் 2-4 செ. வெப்பநிலையில் பெட்டிகளை வைத்து போக்குவரத்து செய்யலாம். இருந்தாலும், உள்ளூர் சந்தைகளில் இரயில்கள்,பஸ்கள், லாரிகளில் வைத்து கொண்டு செல்லலாம்.