||| | | | | |
அங்கக வேளாண்மை :: தோட்டப் பயிர்கள் :: ஜெர்பரா
 

ஜெர்பராவின் அங்கக சாகுபடி

மண்: மணல் கலந்த இரும்பொறை மண், கார அமிலத் தன்மை 5.5-6 ஆக இருந்தால் சாகுபடி செய்ய ஏற்றது.

வானிலை: 25-27 செ. வெப்பநிலை நிலவினால் மொட்டு உடைவது (அ) காயம் படுவது தவிர்க்கப்படுகிறது. அதனால் பசுங்குடிலில் செடிகளை வளர்க்கலாம்.

இரகங்கள்: டேனேல்ல், பிங்க் எலிகண்ட்ஸ், டால்மா, சங்காரியா, மிர்கோலா, சன் செட், நெவேடா, ஒய்.சி.டி -1, ஒய்.சிடி.2

பருவம்

வருடம் முழுவதும் பயிரிடலாம்
விதைப்பெருக்கம் மற்றும் பயிரிடுதல்
திசு வளர்ப்பு செடிகளை பெருக்கம் செய்யப் பயன்படுத்தலாம்
ஒவ்வொரு திசு வளர்ப்புச் செடியும் 25 ரூபாய் ஆகிறது. உயரமான படுக்கைகள் 70 செ.மீ. அடி அகலம், 60 செ.மீ. மேல் அகலம், 30 செ.மீ. உயரத்துடன் 45 செ.மீ. இடைவெளியில் அமைக்க வேண்டும். இடைவெளி 30X 30 செ.மீ.

பாசனம்: 15-20 நிமிடங்களுக்கு 2-3 நாட்களுக்கு ஒரு முறை சொட்டு நீர் பாசனம் மூலம் பாசனம் செய்ய வேண்டும். 500-700 மி.லி/ஒரு நாள்/ஒரு பயிருக்கு நீர் தேவைப்படுகிறது.

உரமிடுதல்

  • பயிரிடுவதற்கு 60 நாட்களுக்கு முன்னர் பசுந்தாள் உரமிட வேண்டும்
  • நன்கு மட்கி சிதைந்த பண்ணை எரு ஒரு எக்டருக்கு 50 டன் மற்றும் உயிர் கம்போஸ்ட் ஒரு எக்டருக்கு 5 டன் என்ற அளவில் அளிக்கலாம்
  • வேப்பங்கட்டி ஒரு எக்டருக்கு 1.25 டன் என்ற அளவில் இட வேண்டும்
  • அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியம் ஒரு எக்டருக்கு 25 என்ற அளவில் இட வேண்டும்
  • மண்புழு உரம் ஒரு எக்டருக்கு 2 டன் என்ற அளவில் பயிரிடும் போதும், பயிரிட்ட 3, 4, 5 மாதங்களுக்குப் பிறகு இட வேண்டும்
  • வேப்ப எண்ணெய் 5%பயிரிட்ட 3,4,5 மாதங்களுக்குப் பிறகு தெளிக்க வேண்டும்
  • வேப்ப எண்ணெய் 5% பயிரிட்ட 3,4,5 மாதங்களுக்குப் பிறகு மண்ணில் நனைக்க வேண்டும்
  • அக்ரி ஹோட்ரா சாம்பல் பயிரிட்ட 60,90,120 நாட்களுக்கு பிறகு 3 முறை தெளிக்க வேண்டும்

பயிரிட்ட பின் மேற்கொள்ளப்படும் உழவு முறைகள்:தேவைப்படும் போது கையால் களையெடுக்க வேண்டும்

வளர்ச்சி ஊக்கிகள்

  • பஞ்சகாவ்யா 3% பயிரிட்ட ஒரு மாதத்திலிருந்து ஒரு மாத இடைவெளியில் வருடத்திற்கு 35 தெளிப்பு வருமாறு தழைத் தெளிப்பு செய்ய வேண்டும்
  • தசகாவ்யா 3% கரைசலை 1 லிட்டர் /மீ2 என்ற அளவில் மாதம் ஒரு முறை மண்ணில் நனைக்க வேண்டும்
  • வெர்மிவாஷ் 10% பயிரிட்ட 3,4,5,6,7,8 மாதங்களுக்குப் பிறகு தழைத் தெளிப்பு செய்ய வேண்டும்
  • மாட்டுக் குழம்பு சிலிக்கா பயிரிட்ட 75 நாட்களுக்குப் பிறகு ஒரு எக்டருக்கு 2.5 கிராம் என்ற அளவில் தெளிக்க வேண்டும்
  • மஞ்சூரியன் தேயிலை வடிச் சாற்றை பயிரிட்ட 30,43,60,75 நாட்களுக்குப் பிறகு மண்ணில் நனைக்க வேண்டும்

பயிர்பாதுகாப்பு

அறுவடை: நன்கு மலர்ந்த மலர்களை அறுவடை செய்து, நீரில் வைக்க வேண்டும். அதிகாலை (அ) மாலையில் அறுவடை செய்ய வேண்டும்

மகசூல்: பயிரிட்ட 3 மாதத்திலிருந்தே அறுவடை ஆரம்பித்து தொடர்ந்து 2 வருடங்களுக்கு அறுவடை செய்யலாம். ஒரு மாதத்திற்கு ஒரு செடிக்கு 2 தண்டுகள் அறுவடை செய்யப்படுகின்றன.

தரம் பிரித்தல்

மலர்கள், A,B,C, மற்றும் D என்று தண்டின் நீளம், பூவின் விட்டத்தைப் பொறுத்து தரம் பிரிக்கப்படுகிறது. முதல் தர மலர்கள்  5 செ.மீ. நீள தண்டுடன், 11 செ.மீ. பூ விட்டத்துடன் தண்டில் இருக்க வேண்டும்

அறுவடை பின் சார் கையாளும் முறை மற்றும் பொதிகட்டுதல்.மலர்கள் அறுவடை செய்யப்பட்டு நீரில் வைக்கப்படுகின்றன.மலரின் கழுத்துப் பகுதி பாலித்தீன் சீட் கொண்டு மூட வேண்டும்.சீட்டின் மையத்தில் ஒரு சிறிய துளை இருக்க வேண்டும்.ஒரு கொத்தில் 10 மலர்கள் வைத்து,துளையிடப்பட்ட கார்போர்டு பெட்டிகளில் வைக்கலாம்.பூக்காம்பின் நுனியை பருத்தி நூலால் மூட வேண்டும்.பெட்டியில் இடப்பட்ட மலர்களை இரயில்கள், குளிர்பதன வேன்களில் போக்குவரத்து செய்யலாம்.