|
அங்ககக் கழிவுகளை மறு சுழற்சி செய்தல்
நம் நாட்டில் உள்ள அங்கக வளங்களிலிருந்து 20 மில்லியன் டன்கள் அளவு ஊட்டச்சத்துக்கள் (NPK) குறையாமல் இருக்கின்றன.பாசனம் மற்றும் மானாவாரி பகுதிகளில் மண்புழு உரத்தொழில்நுட்பத்தால் அங்கக உரத் தேவைகளை ஒரளவுக்கு சமாளிக்க முடிகிறது.வேளாண் கழிவுகள் மற்றும் நகராட்சிக் குப்பைகளை மட்கச் செய்து உபயோகமான வேளாண் இடுபொருளாக மாற்றலாம்.அங்ககக் கழிவுகளிலிருந்து பலதரப்பட்ட பொருளாதார பயன்கள் கிடைக்கின்றன,மாசுபடுதலைத் தடுக்கிறது.மண்புழு உரத்திலிருந்து,நன்கு மட்கிய புழு ஒடுகள், கழிவுகளை பயிர்கள்,காய்கறிப்பயிர்கள்,பூக்கள்,தோட்டங்களுக்குப் பயன்படுத்தலாம் இந்த முறையில், மண்புழுக்களை பெருக்கம் செய்து,அதிகப்படியான புழுக்களை வெர்மிபுரோட்டீனாக மாற்றி,கோழி,மீன் போன்றவற்றிற்கு தீவனமாக பயன்படுத்தலாம்.வெர்மிலாஷ் ஐ பயிர்களின் மீது தெளிக்கலாம்.
தீவனத்திற்கு தேவையான பொருட்கள்
சாணி, வேளாண் கழிவுகள் 1:1 லிருந்து 1:3 என்ற அளவில் கலந்து மண்புழுக்களுக்கு உணவு கொடுப்பதற்கு முன் 2 வாரங்களுக்கு தனியான ஒரு டேங்க்கில் 2 வாரங்களுக்கு வைக்க வேண்டும்.
சாணி மற்றும் வேளாண் கழிவுகள் 1:1 விகிதத்தில் |
|
சாணி மற்றும் வேளாண் கழிவுகள் 1:3 விகிதத்தில் |
|
செயல்முறை |
சிறிய அளவிலான மண்புழு உற்பத்திக்கான தொட்டியின் அளவு 10 6 2.5 9150 கன அடி |
|
|
தேவையான அளவு துளைகள் இட்டு (5 செ.மீ. விட்டமுடைய 8 துளைகள் அடிப்புறத்தில்) அதிகப்படியான நீரை வெளியேற்றுதல் |
|
|
|
உடைந்த செங்கல் துண்டுகள், கற்துண்டுகள், மரத்தூள், மணல், மண் கொண்டு படுக்கை அமைத்தல் |
|
படுக்கையில் மண்புழுக்களை விடுதல் |
|
|
15-20 செ.மீ. தடிமனுள்ள மண்புழு படுக்கைகளின் மீது உணவுக் கலவையை ஊற்ற வேண்டும் |
|
சிதைவதற்கு முன் உள்ள பொருட்களை அடுக்குகளில் சேர்க்க தேவையில்லை, ஆனால் படுக்கையின் ஆழமும் 1.5-2 அடிக்கு அதிகமாக இருக்கக் கூடாது |
|
|
தொட்டியின் மேலே கூரை வேயப்படுவதால், தொட்டியின் ஈரப்பதத்தை ஒரே மாதிரி (40%ஈரப்பதம்) வைத்திருக்க முடியும் |
|
தகுந்த ஈரப்பத நிலைகளில், மண் புழுக்கள், தொட்டியில் உள்ள படுக்கைகளின் கீழ்நோக்கி நகரும். ஈரப்பதம், வெப்பநிலை, அங்ககப் பொருளின் அளவு, எடையைப் பொறுத்து மண்புழுவின் கூடுகட்டும் திறன் அதிகரிக்கும்
மாற்றும் அளவு:ஒரு கிலோ மண் புழுக்கள் (600-1000) 25 முதல் 45 கிலோ கழிவுகளை ஒரு வாரத்திற்கு மாற்றுகின்றன. நன்கு மேம்பட்ட நிலைகளில் ஒரு வாரத்திற்கு 25 கிலோ என்ற அளவு மண்புழு உரம் கிடைக்கிறது.
அறுவடை
பலதரப்பட்ட காரணிகளைப் பொறுத்து முழு சிதைவதற்கு 75-100 நாட்கள் ஆகும். ஒரு தொட்டியை 4-5 முறை மண்புழு உரத்திற்காகப் பயன்படுத்தலாம்.அறுவடைக்கு சில நாட்களுக்கு முன்னர் தொட்டியில் நீர் விடுவதை நிறுத்த வேண்டும்.இதனால் மண்புழுக்கள் படுக்கையின் அடிவரை செல்லும்.பின் உரத்தை படுக்கைய அசைக்காமல் வெளியே எடுத்து,திறந்த வெளியில் குவித்து வைக்க வேண்டும். இந்த உரத்தை 3 மி.மீ. வலையில் சலித்து,சாக்குப் பையில் அடைக்க வேண்டும்
பழைய முறைப்படி உள்ள சல்லடை

கையால் செய்யப்படும் சலித்தல் முறை

ஒவ்வொரு சுழற்சியின் போதும் 1700 கிலோ அளவு உரம் கிடைக்கிறது. சலிக்கும் போது கூடு இல்லாத புழுக்கள் சல்லடையில் நின்று விடும்.அதிகப்படியான புழுக்கள் எடுக்கப்பட்டு,புதிய தொட்டியில் வைக்கப்படுகின்றன (அ) விற்கப்படுகின்றன.(அ) சூரிய ஒளியில் உலர்த்தி வெர்மி புரோட்டீனாக மாற்றப்படுகின்றன.வெர்மி புரோட்டீனின் விலை ஒரு கிலோவுக்கு 5 ரூபாய்.இந்த உரத்தை சூரிய ஒளியில் உலர்த்தி,பின் பைகளில் அடைக்கப்படுகின்றன.
3மி.மீ. அளவுடைய சல்லடை

மண்புழு உரம்


மண்புழுவினால் கழிவுகளை நேர்த்தி செய்யும் முறைகள்
1.மண்பரப்பின் மீது திடக் கழிவுப் பொருட்கள் பரப்படுகின்றன. சில சமயங்களில் பயிர்களில் (அ) காடுகளில். மண்ணில் நேரடியாக பரப்படுகின்றன, மண்புழுக்கள் தான் முக்கியமாக இவற்றைச் சிதைக்கின்றன.
2.கழிவுகளை குவியலாக (அ) தொட்டிகளிலோ வைக்கப்படுகின்றன. இந்தக் கழிவுகளை மண்புழுக்கள் கொண்டு நேர்த்தி செய்து உரமாகப் பயன்படுத்தப்படுகிறது.
2வது முறை எளிது மற்றும் நம் நாட்டில் பரவலாக பயன்படுத்தப்படும் முறையாகும்.
4 தொட்டிகளை கட்டுவதற்கான மொத்த நிலம் = 900 சதுர அடி (301 X301)
விபரம் |
அளவு |
விலை |
சிமெண்ட் |
20 பைகள் |
4000.00 |
ஆற்றுமணல் |
2 லோடு |
4500.00 |
ஹாலோப்ளாக் கற்கள் (6 ‘x16’ x 8”) |
600 (எண்ணிக்கை) |
8000.00 |
மேஷன் |
15 நாட்கள் |
3750.00 |
உதவிக்கு பெண் |
25 நாட்கள் |
2500.00 |
உதவிக்கு ஆண் |
8 நாட்கள் |
1400.00 |
நிழல் வலை 900 சதுர அடிக்கு ஒரு சதுர அடிக்கு 20 ரூபாய் |
900 சதுர அடி |
-200 |
2” குழாய் (GI) நிழல் வலை அமைக்க |
51 |
6500.00 |
1”GI குழாள் நிழல் விலை அமைக்க |
91 |
4500.00 |
நிழல் வலை அமைக்க ஆகும் ஆட் செலவு |
- |
2500.00 |
இதர செலவுகள் |
- |
1000.00 |
இதர செலவுகள் |
- |
1000.00 |
மொத்தம் |
|
40650.00 |
மண்புழுக்கள் - 4 தொட்டிகளுக்காக 25 கிலோ ஒரு கிலோ 300 ரூபாய்
தகவல் = ரூ.7500.00
பேராசிரியர் மற்றும் தலைவர்
பூ வளர்ப்பு மற்றும் நில அமைப்பு ஏற்படுத்துதல்
தோட்டக்கலைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்
கோவைமுத்தூர் - 641 003 |
|
|