தீவன தட்டைப்பயறு
பருவம் மற்றும் இரகங்கள்
மாவட்டம்/ பருவம் |
மாதம் |
இரகங்கள் |
இறவை |
ஈரோடு, மதுரை, திண்டுக்கல், தேனி, கடலூர், விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை |
ஜூன்-ஜூலை |
கோ 5, கோ (எஃப்.சி) 8 மற்றும் கோ 9 |
சிறப்பியல்புகள்
பண்புகள் |
கோ – 5 |
கோ (எஃப் சி) 8 |
கோ 9 |
பசுந் தீவன மகசூல் (டன் / எக்டர்/ வருடம்) |
17- 19 |
17 – 20 |
22 - 23 |
உலர் தன்மை (%) |
14.64 |
15.5 |
16.86 |
புரதச் சத்து (%) |
20.0 |
20.7 |
21.56 |
உயரம் (செ.மீ) |
93.0 |
100 – 120 |
130 – 140 |
கிளைகளின் எண்ணிக்கை |
2-3 |
3-4 |
4-5 |
இலைகளின் எண்ணிக்கை |
12 |
13-15 |
15-17 |
இலையின் நீளம் (செ.மீ) |
12.1 |
10.5 |
12 |
இலையின் அகலம் (செ.மீ) |
8.2 |
8 |
10 |
இலை தண்டு விகிதம் |
0.83 |
0.95 |
0.95 - 1.00 |
சிறப்பியல்புகள் - தீவனத்தட்டைப்பயறு கோ 9
- அதிக உலர் எடை மகசூல் (3.85 டன்கள் / எக்டர்)
- அதிக புரதச்சத்து (21.56 %)
- குறைந்தளவு நார்ச்சத்தை கொண்டுள்ளதால் அதிக சுவை மற்றும் செரிமானத்திற்கும் எதுவாக உள்ளது
- மஞ்சள் தேமல் நோய்க்கு ஓரளவு எதிர்ப்புத்தன்மை கொண்டது
|
|
|
தீவனத்தட்டைப்பயறு கோ 9 |
சாகுபடிக்குறிப்புகள் : தீவனத் தட்டைப்பயறு (கோ.எஃப்.சி.8)
பருவம் |
: |
ஆண்டு முழுவதும் இறவைப் பயிராக பயிர் செய்யலாம். ஜீன் –ஜீலை, பிப்ரவரி மார்ச் மிகவும் ஏற்றது.மானாவாரியில் பயிரிட செப்டம்பர்-அக்டோபர் ஏற்றது |
வயது |
: |
50-55 நாட்கள் (தீவனத்திற்கு), 90 -95 நாட்கள் (விதைக்கு) |
முன்செய் நேர்த்தி |
: |
2 முதல் 3 முறை உழவு செய்து, நிலத்தை நன்கு பண்படுத்தி 60 செ.மீ. இடைவெளியில் பார்கள் அமைக்கவும். |
விதை அளவு |
: |
25 கிலோ / எக்டர் 3 பாக்கெட்டுகள் (600 கி) ரைசோபியம் உயிர் உரத்தை அரிசிக் கஞ்சியில் கலந்து விதை நேர்த்தி செய்யவும். |
இடைவெளி |
: |
30 x 10 செ.மீ. இடைவெளியில் பார்களின் இருபுறமும் விதைக்க வேண்டும். |
உர அளவு(எக்டருக்கு) |
: |
அடியுரம்-தொழு உரம் – 12.5 டன் 25: 40:20 கிலோ தழை, மணி மற்றும் சாம்பல் சத்து இட வேண்டும். |
பின்செய் நேர்த்தி |
: |
விதைத்து 15- 20 நாட்களுக்கு பிறகு களை எடுக்கவும் |
பயிர் பாதுகாப்பு |
: |
பொதுவாகத் தேவையில்லை |
நீர் நிர்வாகம் |
: |
10 நாட்களுக்கு ஒருமுறை அல்லது தேவையைப் பொறுத்து நீர் பாய்ச்ச வேண்டும் |
அறுவடை |
: |
50 விழுக்காடு செடிகள் பூத்தவுடன் பசுந்தீவனத்தை 50-55 நாட்களில் அறுவடை செய்ய வேண்டும் |
மகசூல் |
: |
பசுந்தீவன மகசூல் 18 - 23 டன்கள் / எக்டர்
விதை மகசூல் 745 கிலோ / எக்டர் |
|