கினியாப்புல்
பருவம் மற்றும் இரகங்கள்
மாவட்டம்/ பருவம் |
மாதம் |
இரகங்கள் |
இறவை |
|
கோ 2 & கோ (கினியாப்புல்) 3 |
எல்லா மாவட்டங்களும் |
வருடம் முழுவதும் |
மானாவாரி |
|
எல்லா மாவட்டங்களும் |
ஜூன் – செப்டம்பர் / அக்டோபர் - நவம்பர் |
கினியாப்புல் இரகங்களின் விவரங்கள்
விவரங்கள் |
கோ 2 |
கோ (கினியாப்புல்) 3 |
பெற்றோர் |
கோ 1 x செண்டினேரியோ |
மும்பாசாவிலிருந்து குளோன் செய்யப்பட்ட தேர்வு |
வயது (நாட்கள்) |
பல்லாண்டு பயிர் |
பல்லாண்டு பயிர் |
பசுந்தீவன் மகசூல் (டன்/எக்டர்/வருடம்) |
270 (7 அறுவடைகளில்) |
340-360 (7 அறுவடைகளில்) |
உருவ இயல்புகள் |
செடியின் உயரம் (செ.மீ) |
150-200 |
210-240 |
தூர்களின் எண்ணிக்கை |
80-100 |
40-50 |
இலை நீளம் (செ.மீ) |
65-75 |
97- 110 |
இலை அகலம் (செ.மீ) |
2.5-2.9 |
3.2 - 4.5 |
இலை தண்டு விகிதம் |
- |
0.73 |
தர இயல்புகள் |
உலர் பொருட்கள் (%) |
25.94 |
20.2 |
புரதச்சத்து (%) |
6.10 |
7.50 |
நார்ச்சத்து (%) |
34.6 |
30.3 |
பாஸ்பரஸ் (%) |
0.29 |
0.19 |
கால்சியம் (%) |
0.59 |
- |
மெக்னீசியம் (பி பி எம்) |
0.38 |
- |
IVDMD (%) |
49.5 |
- |
கினியாப்புல் - கோ (ஜிஜி) 3 - சிறப்பியல்புகள்
- அதிக தூர்கள் (40-60 தூர்கள் / குத்து) மற்றும் சாயாத தன்மை
- அதிக இலைகள் (280 - 350 / குத்து)
- அதிக இலை தண்டு விகிதம் (0.73)
- நிழலிலும் வளரக்கூடியது, தென்னந்தோப்புகளில் வளர்க்க ஏற்றது
- சுவையானது அதனால் கறவைமாடுகள், செம்மறி ஆடுகள் மற்றும் வெள்ளாடுகள் விரும்பி உண்கின்றன
|
|
|
அதிக தூர்களை கொண்ட கினியாப்புல் - கோ (ஜிஜி) 3 |
சாகுபடிக்குறிப்புகள் : கினியா புல் கோ (ஜிஜி) 3
பருவம் |
: |
இறவைப் பயிராக ஆண்டு முழுவதும்,பருவ காலங்களில் மானாவாரியிலும் பயிரிடலாம் |
மண் |
: |
நீ ர் தேங்காத நல்ல வடிகால் வசதியுள்ள நிலம். நிழலைத்தாங்கி வளரும் பயிர் தென்னந்தோப்புகளுக்கு ஏற்றது |
நிலம் தயாரித்தல் |
: |
2 முதல் 3 முறை உழவு செய்து நிலத்தைப் பண்படுத்தி 50 செ.மீ. இடைவெளியில் பார்கள் அமைக்க வேண்டும். |
உர அளவு (எக்டருக்கு) |
|
அடியுரம்:தொழு உரம்-25 டன்கள்,50 கிலோ தழைச்சத்து,50 கிலோ மணிச்சத்து,40 கிலோ சாம்பல் சத்து.
மேலுரம் :50 கிலோ தழைச்சத்து,ஒவ்வொரு அறுவடைக்குப் பிறகும் 50 கிலோ தழைச்சத்து இட வேண்டும்
|
கரணை அளவு |
: |
எக்டருக்கு 40,000 வேர் கரணைகள் |
இடைவெளி |
: |
50 x 50 செ.மீ. |
களை நிர்வாகம் |
: |
தேவைக்கு ஏற்ப கைக்களை எடுக்க வேண்டும் |
நீர்ப்பாசனம் |
: |
நட்டவுடன் மற்றும் உயிர் நீர் மூன்றாவது நாள்7 முதல் 10 நாட்களுக்கு ஒருமுறை மண் மற்றும் மழை அளவைப்பொறுத்து நீர் பாய்ச்ச வேண்டும். |
பயிர் பாதுகாப்பு |
: |
பொதுவாகத் தேவையில்லை |
அறுவடை |
: |
முதல் அறுவடை 75-80 வது நாட்களிலும், மற்ற அறுவடைகள் 40 -45 நாட்கள் இடைவெளியில் |
மகசூல் |
: |
ஒரு ஆண்டிற்கு 7 அறுவடைகளில் எக்டருக்கு 320 டன்கள் |
|