| 
          செடிகள் வளர்ச்சி குன்றியும், மஞ்சள்  நிறத்திலும் காணப்படும்.முழு செடியிலும் முதிர்ச்சி இலைகள் மஞ்சள்  கலந்த பச்சை நிறத்தில் இருக்கும்.சில சமயங்களில் முதிர்ந்த இலைகள் மட்டுமல்லாது  செடியில் உள்ள அனைத்து இலைகளும் மங்களான பச்சை நிறத்தில் மாறிவிடும்.பற்றாக்குறை முதலில் இலை நுனியில் தென்படும்.  பின் அது இலையின் நடு நரம்பு வரை பரவி முழு இலைகளிலும் தோன்றும்.பின் செடிகள் இழக்க நேரிடும்.இலை நுனிகளில் பசுமை சோகை காணப்படும்.இலைகள் சிறியதாகவும், செங்குத்தாகவும்,  எலுமிச்சை மஞ்கள் நிறம் கலந்த பச்சை நிறமாக மாறிவிடும். |