| 
        இளம் மற்றும் புதியதாக வளரும் இலைகளில்  உருச்சிதைவு ஏற்படும். இதுவே சிறிய நிலை எனப்படும்.இலைகள் தனித்தனியாக பிரியாமல் இயல்பு  நிலை மாறி காணப்படும்.இலைகள் வளைந்து ரம்பப்பல் போன்று தோற்றமளிக்கும்.நுனித் தண்டுகள் கருப்பாகி பின் இறக்க  நேரிடும்.இனப்பெருக்கம் பருவத்தில் உருவமாற்றம்  மற்றும் காய் பிடிப்பும் குறைந்து காணப்படும்.பழங்கள் சிறுத்தும், இயல்பு நிலை மாறியும்  காணப்படும். |