தீனபந்து மாதிரி எரிவாயுக் கலன்
|
|
|
சாணம் உட்செலுத்தும் தொட்டி |
உயிர் எரிவாயு - கொள்கலன் |
சாணம் வெளியேற்றும் தொட்டி |
தீனபந்து மாதிரி எரிவாயுகலன்
1.செயல்பாடுகள்:
வீட்டு சமையல் செய்ய, விளக்கு எரிக்க மற்றும் இயந்திர பொருட்களை இயக்க
2.விவரக் குறிப்பு:
- பாகக் கூறுகள்: டோம், செரிமானி: எரிவாயு சேமிப்பு, எரிவாயு வெளியேற்றும் குழாய், நுழைவாயில் அடைக்கப்படும் குழாய்.
- உட்செலுத்தும் பொருட்கள்: மாட்டு சாணம், பன்றிக் கழிவுகள் மற்றும் கோழி கழிச்சல்கள் முதலியன
- ஆலை வடிவம்: டோம் மாதிரி
3.பொதுத் தகவல்கள்:
- மூடப்படும் அமைப்புகள் ஏதும் தேவையின்மை காரணத்தால் ஜனதா உயிர்வாயு. ஆலை போல் இல்லாமல் இதன் கட்டுமான செலவை குறைக்க முடியம்.
- டைஜிஸ்டரின் எரிவாயு சேமிப்பு அறைக்கு மேலே ஒரு அரை கோள எரிவாயு அறை அமைக்கப்படுகிறது.
- ஒரு குழாய் வடிவில் நுழைவாயிலில் குழம்பு கலக்கும் தொட்டியை செரிமானி இணைக்கிறது.
- இந்த வடிவ அமைப்பு சமவெளிப் பகுதிகளில் வைத்திருந்தால் 40 நாட்கள் ஆகின்றது.
- மேலும் இதே அமைப்பை மலைப்பாங்கான இடங்களில் வைத்திருந்தால் 50 நாட்கள் வரை ஆகும்.
தொடர்புக்கு
பேராசிரியர் மற்றும் தலைவர்
உயிர் சக்தி துறை
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம், கோயமுத்தூர் – 3
தொலைபேசி :0422-6611276.
மின்னஞ்சல்: bioenergy@tnau.ac.in |
|