Agriculture Engineering
ஆற்றல் சாதனங்கள் :: உயிர்வழி சாதனங்கள்

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் - இரட்டை அடுப்பு

இரட்டை அடுப்பு கொள்கலன்
இரட்டை அடுப்பு கொள்கலன் காட்சியகம்

பயன்

:

குறைந்த விறகில் புகையின்றி சமைக்கலாம்

திறன்

:

800-900 கி.கலோரி / மணி
எரிதிறன் - 26  %

விலை

:

ரூபாய் 85 /-

அமைப்பு

:

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் இரட்டை அடுப்பு 55x30x25 செ.மீ அளவில் வடிவமைக்கப்பட்டுள்ளது. முதல் அடுப்பின் பக்கத்தில் உட்புற மற்றும் வெளிப்புற சுவற்றுக்கிடையில் 2.5 செ.மீ இடைவெளி உள்ளது. இரண்டாவது அடுப்பின் அளவு சிறியது ஆகையால் இரு சுவற்றுக்கிடையில் இடைவெளி 3.5 செ.மீ ஆக உள்ளது. வெளிப்புறச் சுவற்றின் அடிப்பாகத்தில் 17x1 செ.மீ அளவில் துவாரம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் வழியே உட்புகும் காற்று இருசுவற்று இடைவெளி வழியாக செல்லும் போது அடுப்பினுள்ளிருந்து  வீணாக வெளிச்செல்லும் வெப்பத்தை கிரகித்துக் கொண்டு உட்சுவரிலுள்ள 1 வெளிச்செல்லும் வெப்பத்தை கிரகித்துக் கொண்டு உட்சுவரிலுள்ள 1 செ.மீ விட்டமுடைய துவாரங்கள் வழியாக இவ்வாறு கிடைக்கும் அதிக்பபடியான காற்றால் விறகு நன்றாக எரிகிறமது. விறகு வைப்பதற்கு ஏதுவாக 15.5 x 15 செ.மீ அளவிற்கு எரிபொருள் துவாரம் அடுப்பின் முன்புறம் உள்ளது. முதல் எரிபொருள் துவாரம் அடுப்பின் முன்புறம் உள்ளது. முதல் அடுப்பிலிருந்து நீண்ட துவார அமைப்பு மேல்  நோக்கி வைக்கப்பட்டிருந்தால் தீ ஜீவாலைகளும் வெப்பக் காற்றும் இரண்டாவது அடுப்பு பாத்திரத்தை அடைகிறது. அடுப்பின் 6 மூலைகளிலும் 5 x 5 செ.மீ அளவுள் கால்கள் பொருத்தப்பட்டுள்ளது.

சிறப்பு

:

சாதாரண விறகு அடுப்பினை விட இருமடங்கு எரிதிறன் இருப்பதால்

அம்சங்கள்

:

விறகின் செலவும், சமையலுக்கு ஆகும் காலமும் வெகுவாக குறைக்கப்படுகிறது.
வெளிவரும் சாம்பலை எளிதாக எடுக்கலாம்

தொடர்புக்கு
பேராசிரியர் மற்றும் தலைவர்
உயிர் சக்தி துறை
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம், கோயமுத்தூர் – 3
தொலைபேசி :0422-6611276.
மின்னஞ்சல்: bioenergy@tnau.ac.in
 

 

முதல் பக்கம் | புகைப்படத் தொகுப்பு | கட்சியாகத் தொகுப்பு | கேள்வி பதில் | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2021