Agriculture Engineering
ஆற்றல் சாதனங்கள் :: சூரிய ஒளி ஆற்றல் சாதனங்கள்

அடுக்கு வகை சூரிய உலர்த்தி

   
பயன் : பழங்கள், காய்கறிகள் மற்றும் தானியங்கள் உலர்த்தலாம்.

திறன் :  நாள் ஒன்றுக்கு 80 கிலோ பட்டுக்கூடு பதன் செய்யலாம் விவசாயப் பொருட்களின் ஈரப்பதத்திற்கு ஏற்பவும் சூரிய ஒளி அடர்வைப் பொறுத்தும் உலர்த்த ஆகும் நேரம் மாறுபடுகிறது.

விலை : ரூபாய் 15000/-
அமைப்பு : இவ்வுலர்த்தியின் ஒளி திரட்டியின் பரப்பளவு 2.4 x 1.8 மீ ஆகும். இதில் ஒளி ஈர்ப்புத் தளமாக கறுப்பு வர்ணம் பூசப்பட்ட இரும்புத் தகடு பயன்படுத்தப்படுகிறது.  மேல்புறம் உள்ள இரண்டு கண்ணாடிகளுக்கும் இடையே 2.5 செ.மீ இடைவெளி உள்ளது. இதில் அலுமினியத்தால் ஆன 10 தட்டுக்கள் உள்ளன. உலர்த்தியின் கீழ்புறத்தில் காற்று உட்செல்ல வழி  கொடுக்கப்பட்டுள்ளது. இக்காற்று, உலர்த்தியின் உள்ளே அதிக வெப்பத்தை பெற்று வெப்பக்காற்றாக மாறி தட்டுகளில் உள்ள பொருட்களை உலர்த்துகிறது. உலத்தியின் மேல் பகுதியில் 120 செ.மீ உயரத்தில் இரண்டு காற்றுப் போக்கிகள் உள்ளன. இவற்றின் வழியாக செல்லும் காற்றை முறைப்படுத்தும் அடைப்பும் கொடுக்கப்பட்டுள்ளது. ஈரப்பதத்துடன் கூடிய வெப்பக்காற்கு காற்றுப்போக்கின் வழியாக வெளியேறு விடுகிறது.

சிறப்பு அம்சங்கள் : இவ்வுலர்த்தியின் மூலம் 39.3 மணி நேரத்தில் பப்பாளி சதை பாகுத்தோல் உலர்த்தலாம். இது  நேரடியாக சூரிய ஒளியில் உலர்த்துவதற்கு ஆகும் நேரத்தைவிட 21.5 மணி நேரம் குறைவாகும்.
10 கிலோ பட்டுக் கூடு பதன் செய்வதற்கு 30 முதல் 40 நிமிடங்கள் தேவைப்படும்.

தொடர்புக்கு
பேராசிரியர் மற்றும் தலைவர்
உயிர் சக்தி துறை
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம், கோயமுத்தூர் – 3
தொலைபேசி :0422-6611276.
மின்னஞ்சல்: bioenergy@tnau.ac.in
 
 

முதல் பக்கம் | புகைப்படத் தொகுப்பு | கட்சியாகத் தொகுப்பு | கேள்வி பதில் | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2021.