சூரிய நீர் வெப்பப்படுத்தும் அமைப்பு
- சூரிய நீர் வெப்பமாக்கும் இயந்திரமானது (SWHS) மூன்று முக்கிய பாகங்களை உள்ளடக்கியது. சூரிய ஒளி உள்வாங்கி, மின்காப்பு சுடுநீர் சேமிப்புத் தொட்டி மற்றும் தனியே அமைக்கப்பட்ட சுடுநீர் குழாய் ஆகியன இந்த அமைப்பின் மிக முக்கிய பாகங்கள் ஆகும்.
- சிறிய அமைப்பிற்கு கொள்திறனானது 100 முதல் 2000 லிட்டர்க்ள வரை ஆகும். அதிக திறன் கொண்ட அமைப்பிற்க்கு கட்டாயம் ஒரு குழாய் நீர் சுழற்ச்சி முறையில் பயன்படுத்தப்படுகிறது.
- சூடான தண்ணீர் அதிக அளவில் கிடைக்க ஒரு வங்கி தொடர் ஏற்பாடு அமைப்பு பயன்படுத்தப்படுகிறது. 1000 லிட்டர் கொண்ட அமைப்பானது 2 சதுர மீட்டர் அளவில் சேகரிக்கும் பரப்பளவு அமைய வேண்டும்.
- இந்த அமைப்பானது 60 முதல் 80 டிகிரி செல்லியஸ் அளவில் சுடுந்தைத் தரும்.
சேகரிப்பத் தொட்டிகளில் அரிப்பைத் தடுக்க எஃகு முலாம் பூசப்பட்ட தகடுகளைப் பயன்படுத்தலாம்.
- மேலும் இதன் மூலம் வெப்ப இழப்பை குறைக்க முடியும்.
பயன்பாடுகள்
1. குளியல், காபி/தேநீர் மற்றும் சமையல் போன்றவைகளுக்கான சுடுநீர் தயாரித்தல்
2. தொழிற்சாலை பயன்பாடுகள் தண்ணீர் கொதிகலன், சிற்றுண்டி விடுதிகளில் பாத்திரங்களை சுத்தம் செய்யும் இயந்திரம் (ஸ்டெர்லைசேஷன்)
ஆதாரம்:www.teda.gov.in
தொடர்புக்கு
பேராசிரியர் மற்றும் தலைவர்
உயிர் சக்தி துறை
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம், கோயமுத்தூர் – 3
தொலைபேசி :0422-6611276.
மின்னஞ்சல்: bioenergy@tnau.ac.in |
|