1. அறுவடை பின்சார் தொழில்நுட்பம் என்றால் என்ன ?
அறுவடைக்குப் பின்னர் தொழில்நுட்பமானது, அறுவடை செய்த வேளாண் உற்பத்திகளை, கதிரடித்தல், சுத்தம் செய்தல், தரம் பிரித்தல், உலர வைத்தல், சேமித்தல், அரைத்தல், போக்குவரத்து, கையாளுதல், அடைத்தல் மற்றும் என உற்பத்திகளை நுகர்வோருக்கு ஏற்றவாறு பதன் செய்து கொடுத்தலாகும். இவ்வாறு பதன் செய்வதற்கு உண்டான அனைத்துச் செயல்பாடுகளும் அறுவடை பின் சார் பொறியியல் துறையில் அடங்கும்.
2. அறுவடைக்குப்பின் உண்டாகும் சேதம் என்றால் என்ன ?
அறுவடை செய்த வேளாண் உற்பத்திகளை உடனே பயன்படுத்த வேண்டும் அல்லது, அவற்றை பதன்படுத்தி பாதுகாப்பாகச் சேமித்து வைத்தல் வேண்டும். உடனடியாக பதன்படுத்தாமல் இருந்தாலோ அல்லது வேளாண் உற்பத்திகளை முறையாக கையாளாமல் இருந்தாலோ அதிக அளவில் சேதம் ஏற்படும். இதனையே, அறுவடைக்குப் பனி் உண்டாகும் சேதம் என்கிறோம். ஆண்டுக்கு மற்றும் பருப்பு, தானிய வகைகளுக்க 10-20 சதவிகிதம் சேதமும், பழம் மற்றும் காய்கறிகளுக்கு 20-40 சதவிகிதம் சேதமாகக் கணக்கிடப்பட்டுள்ளது.
3. வேளாண் உற்பத்திகளை சுத்தம் செய்தல் மற்றும் தரம் பிரித்தலின் முக்கியத்துவம் என்ன ?
சுத்தம் செய்து தரம் பிரித்த வேளாண் உற்பத்திகளுக்க சந்தையில் அதிக விலைக் கிடைக்கும். ஆதலால், வேளாண் உற்பத்திகளைச் சுத்தம் செய்து தரம் பிரித்தல் மிகவும் இன்றியமையாததாகும்.
4. சூரிய வெப்பத்தில் உலறவைத்தல் உகந்ததா ?
சூரிய வெப்பத்தில் உலர்த்தும் போது தட்பவெப்ப மாறுபாடு அதிகமாக இருப்பதால் பொருளின் தரம் பாதிக்கப்படுகிறது. ஆதலால், நல்ல தரத்தில் பொருட்களை உலர்த்துவதற்கு இயந்திர உலர்த்தியை உபயோகிப்பது சிறந்தது.
5.புழுங்க வைத்தல் என்றால் என்ன ?
அரிசியில் உள்ள மாவு சத்தை ஜராட்டினைசேசன் மூலம் மாற்றுதலே புழுங்க வைத்தலாகும். இதனால் அரைக்கும் போது அரிசி குருணையாகாமல் முழு அரிசியின் சதவிகிதமும், அதன் சத்துக்கள் குறையாமலும் கிடைக்கும்.
6. நடைமுறையிலுள்ள நெல் அரைக்கும் கருவியை விட ரப்பர் சுற்றி உமி நீக்கி எவ்வாறு சிறந்தது ?
நடைமுறையிலுள்ள, எங்கல்பெர்க் உமி நீக்கி அரைத்தல் மற்றும் மெருகூட்டவும் பயன்படுகிறது. ஆனால் இதில் சேததம் அதிகமாகவும், உமி மற்றும் தவிடு தானியத்துடன் கலக்கும் வாய்ப்பும் அதிகம் உள்ளது.
ஆனால் ரப்பர் சுற்றி உமி நீக்கியில், உமி மற்றும், தவிடு தனித்தனியாக கோன் மெருகேற்றி மூலம் பிரிக்கப்படுகிறது. இதனால் அரிசி உடைபடும் சதவிகிதம் குறைந்து காணப்படுகிறது. இதில் கிடைக்கும் தவிடு, எண்ணெய் எடுப்பதற்கு பயன்படுத்தப்படுகிறது. நவீன அரிசி ஆலைகளில் இவை உபயோகப்படுத்தப்படுகிறது.
7. சேமித்தலின் முக்கியத்துவம் என்ன ?
சேமித்து வைத்தலுக்கு நான்கு முக்கிய காரணங்கள் உள்ளன
- அடுத்து வரும் மட்டத்தில் குறைந்த மகசூலினால் அதிக விலை ஏற்றத்தைத் தடுக்க
- விலைவாசி ஏற்ற இறக்கங்களை தவிர்க்க
- சந்தையில் தேவையை அதிகப்படுத்த
- பஞ்சம் மற்றும் பற்றாக்குறையை தடுக்க
8. குளிர் சாதனக் கிடங்கு என்றால் என்ன ?
விரைவில் அழுகிப்போகும் வேளாண் உற்பத்திகளை சேமிக்க 0-10 டிகிரி தட்பவெப்பநிலையில் சேமித்தலே குளிர்பதன் கிடங்காகும். தட்பவெப்பநிலை மற்றும் ஈரப்பதத்தை சரியாக வைத்திருத்தலால் பழம் மற்றும் காய்கறிகளின் தரத்தை அதிகப்படுத்தி பாதுகாக்கலாம். இதனால் உற்பத்திகள் சுவாசிக்கும் திறனைக் குறைத்து, ஒரு வருடம் வரை பாதுகாக்கலாம்.
9. முறைப்படுத்தப்பட்ட குளிர்ப்பதன சேமிப்புக்கும் வாயு விகிதத்தை மாற்றி சேமிக்கும் முறைக்கும் வேறுபாடுகள் என்ன ?
O2 அளவை குறைத்தும், CO2 அளவை குளிர் சேமிப்பின் போது கண்காணிக்கப்படுகிறது. ஆனால் வாயு விகிதத்தை மாற்றி அமைக்கும் முறையில் சுவாசித்தலின் மூலம் வாயு விகிதம் மாற்றப்படுகிறது. சேமிப்பின் போது இவை கண்காணிக்கப்படுவதில்லை.
10. மஞ்சள் வேகவைக்கும் கருவி உள்ளதா ?
ஆம். உணவு மற்றும் வேளாண் பதன் செய் பொறியியல் துறையில் மேம்படுத்தப்பட்ட மஞ்சள் வேக வைக்கும் கருவி உள்ளது. மஞ்சள் கிழங்குகளை சுத்தமான முறையில் இதன் மூலம் வேக வைக்கலாம்.
11. சிறிய அளவில் பருப்பு உடைக்கம் இயந்திரம் உள்ளதா ?
ஆம். உணவு மற்றும் வேளாண் பதன் செய் பொறியியல் துறையில் 30 கிலோ / மணி கொள்ளளவு கொண்ட பருப்படைக்கும் கருவி உள்ளது. குருணை மற்றும் உடைபடாத பருப்பை பிரிக்கவும் முடியும். இந்த இயந்திரத்தை ஒரு குதிரைத் திறன் கொண்ட மோட்டார் மூலம் இயக்கலாம்.
12. பாக்கு காயை உரித்தல் எப்படி ?
பச்சை மற்றும் உலர வைத்த பாக்குகளின் தோலை உரிக்க முடியும். மேலும் விவரங்கள் அறிய கீழ்க்காணும் இணையதளத்தில் காணலாம்.
http://www.tnau.ac.in/accricbe/aetc/proc5-2htm.
13. விதை பிரிக்கும் கருவியின் விவரங்களை எவ்வாறு அறியலாம் ?
தக்காளி, மிளகாய், கத்திரி, காபி பழம், வெண் மிளகு ஆகியவற்றிலிருந்து விதைப் பிரிக்கும் கருவியைப் பற்றிய விவரங்களை கீழ்க்காணும் இணையதளத்தை அணுகவும்.
14. கரும்பு சாற்றை பாதுகாத்தல் எப்படி ?
கரும்பு சாற்றை ஆறு மாதத்திற்கு கெடாமல் கொதிக்க வைத்துப் பாதுகாக்கலாம். மேலும் பதன் செய்தல் மற்றும் பாதுகாத்தலுக்கான விவரங்கள் அறிய அணுகவும்.
15. வேளாண் பதன் செய்த இயந்திரங்களின் விவரங்களை எங்கு அறியலாம் ?
சந்தேகங்களுக்கு அணுகவும்.
பேராசிரியர் மற்றும் தலைவர்,
உணவு மற்றும் வேளாண் பதன் செய் பொறியியல் துறை
வேளாண் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்
கோவை - 3. |