1. பண்ணை இயந்திரமயமாக்கல் என்றால் என்ன ?
பண்ணை இயந்திரமாக்கல் என்பது இயந்திரங்களை பயன்படுத்தி திறம்பட முடித்தல், காலத்தே முடித்தல், துல்லிய விதைப்பு, உரம் பரப்புதல் மற்றும் சரியான காலத்தில் அறுவடை செய்தல், இவையனைத்தும் விளைச்சலை அதிகரிக்கவும் செய்வதோடு, சாகுபடி செலவையும், கூலியாட்களின் சிரமத்தையும் குறைக்க முடியும். அதோடு மட்டுமல்லாமல் வேளாண் உப பொருள்களை தரத்துடன் சரியான காலத்தில் உற்பத்தி செய்ய உதவி புரிகிறது.
2. பண்ணை இயந்திரமயமாக்கல் அவசியம் எனில், எவற்றிற்கெல்லாம் முக்கியத்துவம் அளிக்கப்படவேண்டும் ?
தற்போதைய சூழலில், வேளாண் காலநிலை மண்டலங்களை பொருத்து உழவுக் கருவிகள், மேலும் தானியங்கள் பணப்பயிர்கள், எண்ணெய் வித்துக்கள், பருப்பு வகைகள் மற்றும் தோட்டக்கலைப் பயிர்களின் உற்பத்தி தொழில்நுடங்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும்.
3. பண்ணை இயந்திரமயமாக்கலில் நமது மத்திய அரசின் நடவடிக்கை என்ன ?
பண்ணை இயந்திரமயமாக்கலில் நமது மத்திய அரசாங்கம் விவசாயிகளுக்கும் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட குழுக்களுக்கும் வேளாண் கருவிகள் வாங்க பொருளாதார உதவி செய்து வருகிறது. புதிய வேளாண் கருவிகள் மற்றும் தொழில்நுட்பங்களை பரப்புவதற்கு விவசாயிகளுக்கு பல்வேறு இடங்களில் செயல் விளக்கங்களை செய்து வருகிறது. மேலும் பயன்படுத்தும் போது ஏற்படும் பிரச்சினைகளை சமாளிக்க பழுது நீக்குதல் மற்றும் பாதுகாத்தல் போன்ற பயிற்சிகளையும் கொடுத்து வருகிறது. மேற்கூறியவைகளை செவ்வனே செயல்படுத்த நமது நாட்டில் வேளாண் இயந்திரங்கள் பயிற்சி மற்றும் பரிசோதனை மையங்களை மத்தியப் பிரதேசம், ஹரியானா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் அஸ்ஸாம் போன்ற மாநிலங்களில் நிறுவியுள்ளது.
4. பண்ணை இயந்திரமயமாக்கலில் உள்ள இடர்பாடுகள் யாவை ?
ஒவ்வொரு வேளாண் காலநிலை மண்டலங்களும் வேளாண் கருவிகளின் தேவை வேறுபடுதல், சிறிய மற்றும் துண்டு, துண்டுகளற்ற நிலங்கள், குறைந்த முதலீடு செய்யும் விவசாயிகளின் நிலை, சரியான நீர்ப்பாசன வசதியில்லாமை போன்றவைகள் பண்ணை இயந்திரமயமாக்கலில் உள்ள இடர்பாடுகள்.
5. பண்ணை இயந்திரமயமாக்களில் பண்ணை தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பளிப்பதில் பாதிப்பு ஏற்படுமா ?
இல்லை. பண்ணை இயந்திரமயமாக்களால் தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பில் எந்த பாதிப்பும் ஏற்படாது. மேலும் இது அதிக வேளாண் பொருள்களை கையாளுவதாலும் மற்றும் விற்பனை அடிப்படை கட்டமைப்புகளாலும், தொழிலாளர்களுக்கு நிரந்தர ஊதியமானது கிடைக்க வழி வகை செய்கிறது.
6. பண்ணைக் கருவிகள் பயிற்சி மற்றும் தரக்கட்டுப்பாட்டு நிறுவனத்தின் பங்கு என்ன ?
பண்ணை கருவிகள் பயிற்சி மற்றும் தரக்கட்டுப்பாட்டு நிறுவனமானது பண்ணை இயந்திர மயமாக்குதலின் மூலம் விவசாயிகளின் வளத்தை மேம்படுத்துகிறது. மேலும் கருவிகளின் தரம் மற்றும் செயல்பாடுகள் பற்றி ஆய்வு செய்து தரச்சான்றிதழ் அளித்து வருகிறது.
7. வேளாண் இயந்திரங்களுக்கு தரச்சான்றிதழ் அவசியமா ?
வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளுக்கு தரச்சான்றிதழ் அவசியம் இல்லை. இருந்த போதிலும் பெரும்பாலான இயந்திரங்களை டிராக்டர், பவர்டில்லர் தானியங்கி கூட்டு அறுவடை இயந்திரம், மின்சாரத்தால் இயங்கும் கருவிகள், நீர்ப்பாசன கருவிகள் மற்றும் பயிர்ப் பாதுகாப்பு இயந்திரங்கள். புதினி, மற்றும் கிஸ்ஸாரில் உள்ள பண்ணை இயந்திரங்கள் பயிற்சி மற்றும் தரக்கட்டுப்பாட்டு நிறுவனங்கள்.
ஆய்வு செய்து தரச்சான்றிதழை அளித்து வருகிறது. மேலும் பண்ணை இயந்திரங்கள் பயிற்சி மற்றும் தரக்கட்டுப்பாட்டு நிறுவனம் ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள கார்லதின்னே மற்றும் அஸ்ஸாம் உள்ள பிஸ்வனாத்ஸாராலி போன்ற பகுதிகளில் ஆட்களால் இயக்கப்படும் கருவிகள், மாடுகளால் இயக்கப்படும் கருவிகள் மற்றும் டிராக்டர் / தரச்சான்றிதழ் அளித்து வருகிறது. |