Agriculture Engineering
பண்ணைக் கருவிகள் :: அறுவடை மற்றும் கதிரடிக்கும் இயந்திரங்கள்


தீவனச் சோளத்தட்டு அறுவடை இயந்திரம்

 

பயன் :         தீவனசோளத்தட்டு அறுவடை செய்யப்பயன்படுகிறது.
திறன் :         நாளொன்றுக்கு 0.75 எக்டர் நிலத்தில் அறுவடை செய்யலாம்
விலை :          ரூ.110,000/-
பரிமாணம் : 1100 x 1210 x 1280 மி.மீ
எடை:      
 93 கிலோ 

அமைப்பு :     இதன் முன் பகுதியில் தீவனச் சோளத் தாள்களைச்சீராகப் பிரித்துக் கொடுக்க கூம்பு அமைப்புகளும். அடிபாகத்தில் தாள்களை எளிதில் வெட்டும் வண்ணம் முக்கோண வடிவ கத்திகளும் பொருத்தப்பட்டுள்ளன. வெட்டிய தாள்களைத் தாங்கி நிலை நிறுத்துவதற்கு ஒரு உயரமான நிலத்தகடும் அவற்றை ஒரு புறமாகத் தள்ளி விடுவதற்றகு நிலைத் தகட்டின் நடு பாகத்தில் வார்ப்பட்டைகள் இணைக்கப்பட்டுள்ளன. இவ்வார்ப்பட்டையினுட் பொருத்தப்பட்டுள்ள தகடுகள் நட்சத்திர வடிவ சக்கரங்க களைச் சுழற்றுவதன் மூலம் தாள்கள் கத்தியை நோக்கித் தள்ளப்படுகின்றன. எஞ்சின் விசையை சரியான அளவில் குறைத்து சக்கரங்களுக்கும். தாள்களை வெட்டும் பகுதிகளுக்கும் கொடுப்பதற்கு பற்சக்கரப்பெட்டி ஒன்று பொருத்தப்பட்டுள்ளது.

சிறப்பு அம்சங்கள் :

  • இக்கருவியை தொடர்ச்சியாக இயக்குவதற்கு இரு நபர்கள் தேவை.
  • இக்கருவியை பயன்படுத்துவதன் மூலம் 40 விழுக்காடு செலவிலும், 85 விழுக்காடு நேரத்திலும், 85 விழுக்காடு வேலையாட்களிலும் சேமிக்கலாம் மீதமாகிறது.
 

முதல் பக்கம் | புகைப்படத் தொகுப்பு | கட்சியாகத் தொகுப்பு | கேள்வி பதில் | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2016