Agriculture Engineering
பண்ணைக் கருவிகள் :: அறுவடை மற்றும் கதிரடிக்கும் இயந்திரங்கள்


நிலக்கடலை காய் பிரித்தெடுக்கும் இயந்திரம்

பயன் :         நிலக்கடலை செடியிலிருந்து காய் பிரித்தெடுக்கலாம்
பரிமாணம் : 2050 x 1650 x 1570 மி.மீ
எடை:      
 430 கிலோ             
விலை :          ரூ.60,000/-
அமைப்பு :     இவ்வியந்திரத்தில் பல முனைகளைக் கொண்ட சுழலும் உருளை குழிவு  சல்லடை, துருத்தி, முன் பின் ஆடும் வெவ்வேறு அளவு சல்லடைகள் ஆகிய பாகங்கள் உள்ளன. இதை இயக்க 5 குதிரைத்திறன் கொண்ட மின்சார மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. அறுவடை செய்த செடியை இவ்வியந்திரத்திலுள்ள இடுபெட்டியில் செலுத்தும்போது சுழலும் உருளையில் உள்ள முனைகள் மற்றும் சுற்றிலும் உள்ள குறுக்கு கம்பிகளின் உதவியால் செடியிலிருந்து காய்கள் பிரித்தெடுக்கப்படுகின்றன. பிரித்தெடுக்கப்பட்ட காய் மற்றும் செடிகள் கீழே பொருத்தப்பட்டுள்ள சல்லடையின் மேல் விழுகின்றன. துருத்தியின் உதவியினால் இலைகள் பிரிக்கப்பட்டு காய்கள் தனியாக கீழே வந்தடைகின்றன.

சிறப்பு அம்சங்கள் :

  • அறுவடை செய்த உடனேயே உலர்த்தாமல் செடியிலிருந்து காய்களைப் பிரித்தெடுக்கலாம்.
  • செடியுடன் பிரித்தெடுக்கப்படாமல் செல்லும்காய்கள் மற்றும் உடையும் காய்கள் சுமார் மூன்று விழுக்காடுகளுக்கும் குறைவே.
  • இக்கருவியை உபயோகிப்பதன் மூலம் சுமார் 32 விழுக்காடு செலவும் 70 விழுக்காடு நேரமும் மீதமாகிறது.
 

முதல் பக்கம் | புகைப்படத் தொகுப்பு | கட்சியாகத் தொகுப்பு | கேள்வி பதில் | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2016