Agriculture Engineering
பண்ணைக் கருவிகள் :: அறுவடை மற்றும் கதிரடிக்கும் இயந்திரங்கள்


மல்பெரி கரணை வெட்டும் கருவி

பயன் :         மல்பெரி நடவு செய்ய தேவைப்படும் கரணைகள் வெட்ட உதவுகிறது
திறன் :         மணிக்கு 2400 கரணைகளை வெட்டலாம்
பரிமாணம்: 750 x 600 x 1050மி.மீ
எடை:
26 கிலோ
திறன் தேவை:
ஒரு ஆண்
விலை :          ரூ.4,000/-
அமைப்பு :     இக்கருவியில் ஒரு பக்கம் தட்டு வைக்கும் மேசை உள்ளது. அதன் ஒரு விளிம்பில் எக்குக் கத்தி பொருத்தப்பட்டுள்ளது. கைப்பிடியை மேலும் கீழும் நகரச்செய்ய கால் வலிமையை பயன்படுத்தும் வகையில் படி அமைப்பு ஒன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. விதைத்தண்டுகளை அதற்கென உள்ள மேசையில் ஒரு கையினால் நகர்த்திக்கொண்டே கைப்பிடியை கீழ்நோக்கி அசைத்தால் தண்டு கரணையாக வெட்டப்படுகிறது.

சிறப்பு அம்சங்கள் :            

  • ஒரே சமயத்தில் கை மற்றும் காலினால் விசையைக் கொடுத்து மல்பெரி கரணைகளை வெட்டுவதால் எளிதில் களைப்புத் தெரிவதில்லை.
  • நீண்ட நேரம் ஓய்வு எடுக்காமல் எளிதாக வெட்டலாம்.
  • கரணைகளுக்கு எந்த ஒரு சேதாரமும் ஏற்படுவதில்லை.
 

முதல் பக்கம் | புகைப்படத் தொகுப்பு | கட்சியாகத் தொகுப்பு | கேள்வி பதில் | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2016