Agriculture Engineering
பண்ணைக் கருவிகள் :: அறுவடை மற்றும் கதிரடிக்கும் இயந்திரங்கள்


பவர்டில்லரால் இயங்கக் கூடிய மஞ்சள் அறுவடை செய்யும் கருவி

பயன் :         மஞ்சள் கிழங்கு தோண்டலாம்
திறன் :         நாளொன்றுக்கு 0.6 எக்டர் நிலத்தில் அறுவடை செய்யலாம்
விலை :          ரூ.14,000/-
பரிமாணம்: 400 x 636 x 1665 மி.மீ
எடை: 67 கிலோ
அமைப்பு :     இக்கருவியில் அரைவட்ட வடிவம் கொண்ட இரும்புத் தகட்டின் கீழ்ப்பாகத்தில் எளிதில் மண்ணைத் தோண்டிச் செல்வதற்காக மூன்று கொழு முனைகள் இணைக்கப்பட்டுள்ளன. இரும்புத் தகட்டின் பின்புறம் இரு சல்லடைகள் போன்ற அமைப்பில் இரும்புப் கம்பிகள் இடைவெளிவிட்டு பொருத்தப்பட்டுள்ளன. இச்சல்லடைகள் மேலும் கீழும் மாறி மாறி இயங்குவதற்கான விசை பவர்டில்லரின் கியர் பாக்ஸ்லிருந்து எடுக்கப்படுகிறது. இக்கருவி பவர்டில்லரின் பின்புறம் பொருத்தி இயக்கப்படுகிறது. அவ்வாறு இயக்கப்படும்பொழுது இரும்புத் தகட்டில் பொருத்தப்பட்டுள்ள கொழு முனைகள் மண்ணைத் தோண்டிச் செல்வதால் மண்ணுடன் மஞ்சள் அறுவடை செய்யப்பட்டு சல்லடைகளின் மேற்புறம் தள்ளப்படுகிறது. சல்லடைகள் மேலும் கீழும் மாறி மாறி இயங்குவதால் இரும்பு கம்பிகளின் இடைவெளி வழியாக மண் நிலத்தில் படிகிறது. மஞ்சள் சல்லடைகளின் மேற்புறம் நகர்ந்து சென்று மண்ணின் மேற்பரப்பின்மீது விழுகிறது. இக்கருவியின் இருபுறமும் பொருத்தப்பட்டுள்ள சக்கரங்களின் மூலம் தோண்டும் ஆழத்தைக் கட்டுப்படுத்திக்கொள்ளலாம்

சிறப்பு அம்சங்கள் :

  • ஆட்களைக் கொண்டு மஞ்சள் தோண்டுவதுடன் ஒப்பிடும் பொழுது 65 விழுக்காடு    செலவும் 90 விழுக்காடு நேரமும் மிச்சமாகிறது.
  • ஆட்களைக் கொண்டு வழக்கமான முறையுடன் மஞ்சள் தோண்டுவதுடன் ஒப்பிடும் பொழுது சேதாரம் மிகவும் குறைகிறது.
  • தோண்டப்படாமல் மண்ணிற்குள் புதைந்து கிடக்கும் மஞ்சளின் அளவும் குறைகிறது.
 

முதல் பக்கம் | புகைப்படத் தொகுப்பு | கட்சியாகத் தொகுப்பு | கேள்வி பதில் | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2016