Agriculture Engineering
பண்ணைக் கருவிகள் :: இதர கருவிகள்


கோர்சைரா அந்துப்பூச்சி சேகரிப்போன்

பயன் : இக்கருவி உயிரியல் கட்டுப்பாட்டு காரணிகளின் திரள் உற்பத்திக்கு பயன்படுகிறது. குறைந்த நேரத்தில் சுகாதார கேடு மற்றும் சேதம் இன்றி கோர்சைரா அந்துப்பூச்சிகளை சேகரிப்பதால் உயிரியல் கட்டுப்பாட்டு காரணிகளின் திரள் உற்பத்தி அதிகரிக்கிறது.

மின்சாரத் தேவை: 1/4 குதிரை திறன் கொண்ட மோட்டார்
விலை: ரூ.7000/-
பரிமாணம்: 200 X 200 X 600 மிமீ
எடை:  2 கிலோ
திறன்:  ஒரு மணி நேரத்திற்கு 4600 அந்துப்பூச்சிகளை சேகரிக்கலாம்

அமைப்பு:    

இக்கருவியில் உள்ள உறிஞ்சும் குழலால்  வளர்ப்பு தொட்டி இருந்து உறிஞ்சப்பட்ட பூச்சிகள் மெல்லிய காற்றினால் பிரிக்கப்பட்டு கொள்கலனில் சேகரிக்கப் படுகின்றன. இக்கருவியின் முக்கிய பாகமான சூறாவளி பிரிப்பானுடன் உறிஞ்சும் குழல் இணைக்கப்பட்டுள்ளது. இதன் மேற்பகுதியில் உள்ள மூடி,  பூச்சிகளை உறிஞ்சும் வேகத்தை சீராக்குகிறது. சூறாவளி பிரிப்பானின் கீழே இணைக்கப்பட்டுள்ள ஜாடியில் பூச்சிகள் சேகரிக்கப்படுகின்றன.

சிறப்பம்சங்கள்:

  • கோர்சைரா அந்துப்பூச்சி சேகரிப்பில் உள்ள சுகாதார கேடு குறைக்கபடுகின்றது.
  • அந்துப்பூச்சிகளின் சேகரிப்பு நேரம் குறைக்கபட்டு, உயிரியல் கட்டுப்பாட்டு காரணிகளின் உற்பத்தி அதிகரிக்கின்றது.
  • சேகரிப்பின் போது அந்துப்பூச்சிகளுக்கு சேதமின்றி காக்கபடுகின்றது.
 

முதல் பக்கம் | புகைப்படத் தொகுப்பு | கட்சியாகத் தொகுப்பு | கேள்வி பதில் | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2016