தென்னை மரங்களுக்கு பூச்சி மருந்து தெளிக்கும் கருவி
பயன் : தென்னை மற்றும் உயர்ந்த மரங்களுக்கு மருந்து தெளிக்கலாம்
திறன் : ஒரு மணி நேரத்தில் 35 மரங்களுக்கு மருந்து தெளிக்கலாம்
விலை : ரூ.45,000/-
அமைப்பு
டிராக்டரால் இயக்கக்கூடிய இத்தெளிப்பானால் ஒன்றுக்குள் ஒன்று செல்லக்கூடிய 2இஞ்ச் மற்றும் 1இஞ்ச் ஜி.ஐ. குழல்கள் ஒரு சதுர வடிவ சட்டத்தின் மையத்தில் நேராக நிறுத்தப்பட்டுள்ளன, சுழலும் கப்பியின் மூலம் உட்குழலை 29 அடி முதல் 45 அடி வரை மேல்நோக்கி உயர்த்தமுடியும், உட்குழலின்மேல்பகுதியில் இரு நாசில் முனைகள் பொருத்தப்பட்டுள்ளது. தாங்குசட்டம் மும்முனை இணைப்பின் மூலம் டிராக்டரின் பின்புறம் பொருத்தப்பட்டுள்ளது. இதன் கீழ்ப்பகுதியில் 200 லிட்டர் கொள்ளளவு கொண்ட மருந்துக்கலன் உள்ளது. அதிக உயரத்தில் உட்குழலை உயர்த்தும் பொழுது அசைவு மற்றும் வீழ்ச்சி ஏற்படாமல் இருக்க சதுர வடிவ சட்டம் டிராக்டரின் முன்புறம் பொருத்தப்பட்டுள்ள இரும்பு சட்டத்துடன் தாங்கிகளுடன் இணைக்கப்பட்டுள்ளன.
சிறப்பு அம்சங்கள்
- டிராக்டர் பி.டி.ஒ. சுழல் தண்டினுடன் பொருத்தப்பட்டு இயக்கப்படும் பம்ப்.
- மருந்துக்கலவையைக் கலனிலிருந்து உறிஞ்சி அழுத்தத்துடன் நாசில் முனைக்கு இரு பிளாஸ்டிக் குழாய்கள் மூலம் அனுப்புகின்றது.
- பம்பின் டெலிவரி லைனில் பொருத்தப்பட்டுள்ள பைபாஸ் வால்வின் மூலம் நாசில் முனைகள் வழியாக வெளியேறும் திரவ மருந்தின் அளவையும் அழுத்தத்தையும் கட்டுப்படுத்தலாம். மேலும் மருந்து பீரிட்டு தென்னை ஒலைப்பகுதியில் தெளிப்பதற்கேற்றவாறு நாசில் முனைகளை பயன்படுத்தலாம்.
- தெளிக்கும் கருவி டிராக்டரால் இயக்கப்படுவதால், முதலீட்டு விலை குறைகிறது.
- தென்னை மரத்திற்கு மட்டுமல்லாமல் மற்ற பயிர்களுக்கும் மருந்து தெளிக்க முடிகிறது.
|