காலணியால் இயங்கும் நடை தெளிப்பான்
          
          பயன் :          தோட்டப்பயிர்களுக்கு மருந்து தெளிக்கலாம்
              திறன் :         நாளொன்றுக்கு 0.2 எக்டர் நிலத்தில் மருந்து தெளிக்கலாம்
              எடை: மருந்துடன்10 கிலோ
              விலை :          ரூ.1000/-
              அமைப்பு  :     காலணியால் இயங்கும் நடை தெளிப்பான் இரண்டு பம்புகளைக்  கொண்டது. இவை இரண்டும் தெளிப்பானின் காலணியில் பொருத்தப்பட்டுள்ளன. இயக்குநர் நடக்கும்பொழுதே  இந்த பம்புகள் இயங்குவதால் திரவமானது நாசில் வழியே தெளிக்கப்படுகின்றது.
          சிறப்பு அம்சங்கள் :
          
            - நடக்கும் பொழுதெ  இயக்கப்படுவதால் தெளிப்பவரால் எளிதாக இயக்க முடிகிறது. அவருடைய
              வேலை பளு குறைகிறது.  
            - மிகக்குறைந்த  மற்றும் குறைந்த திரவ வெளயீட்டிற்கு ஏற்றது.
 
            - சுற்றுச்சூழல்   பாதிப்பில்லாதது
 
            - குறைந்த  விலை மற்றும் குறைந்த பராமரிப்பு செலவு