Agriculture Engineering
பண்ணைக் கருவிகள் :: பயிர் பாதுகாப்பு கருவிகள்


பவர் டில்லரால் வரிசைப் பயிரினுள் இயங்கும் குழல் வடிவத் தெளிப்பான்

 boomspry2

பயன் :            வரிசைப் பயிரில் மருந்து தெளிக்கலாம்
திறன்:             மணியொன்றுக்கு 1 எக்டர் நிலத்தில் தெளிக்கலாம
பரிமாணம்: 1550  x 5000 x1550 மி.மீ
எடை:
12 கிலோ
விலை :          ரூ. 35,000/-
அமைப்பு :     இக்கருவி தன்னகத்தே தெளிப்பு குழல் உயரத்தாங்கி முன்பின் இயங்கும் பம்ப் மருந்து கலன் அதனுடன் கலனைத் தாங்கும் ஈர சிறிய சக்கரங்கள. பயிர்கள் ஒதுக்கும் அமைப்புகள் மற்றும் அழுத்தமானி போன்றவைகளைக் கொண்டுள்ளது. மருந்துகலன் கண்ணாடி நாரினால் செய்யப்பட்டது. கொள்ளளவு 100 லிட்டா, இக்கலன் இரு சிறிய சக்கரங்கிளன் உதவியோடு இரும்பு தாங்கிகளின் மேல் பொருத்தப்பட்டுள்ளது.

தெளிப்புக்குழலின் நீளம் 6 மீட்டர். பவர்டில்லரின் இருபுறமும் 3.0 மீட்டர் நீளமிருக்குமாறு அமைக்கப்பட்டுள்ளது. தெளிப்புக்குழலின் உயரத்தை பயிர்களின் உயரத்திற்குத் தகுந்தவாறு உயரந் தாங்கியில் மாற்றி அமைத்து பொருத்திக் கொள்ளலாம், தெளிப்புக்குழலில் 10 நாசில்கள் 45 செ.மீ. இடைவெளியில் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இடைவெளியை பயிர்களுக்கிடையேயுள்ள வரிசை இடைவெளியைப் பொருத்து மாற்றிக் கொள்ளலாம். தெளிப்புக்குழலை கம்பிகளின் மூலம் மடக்கி செங்குத்து நிலையில் ஒரிடத்திலிருந்து மற்றோரிடத்திற்கு எளிதில் கொண்டு செல்லலாம்.

சிறப்பு அம்சங்கள் :

  • பயிர்களின் வரிசை இடைவெளிக்குத்தக்கவாறு பவர்டில்லரின் சக்கரங்களின் இடைவெளியையும்
    மருந்துக்கலன் சக்கரங்களின் இடைவெளியையும் 55 முதல் 85 செ.மீ வரை மாற்றிக் கொள்ளலாம்
  • இக்கருவியை பவர்டில்லரோடு இணைத்து உட்கார்நதுகொண்டே இயக்கலாம்.
 

முதல் பக்கம் | புகைப்படத் தொகுப்பு | கட்சியாகத் தொகுப்பு | கேள்வி பதில் | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2016