பண்ணைக் கருவிகள் :: விதைக்கும் கருவிகள்

குழிப்படுகை அமைத்து விதைக்கும் கருவி

பயன்: ஒரே சமயத்தில் குழிப்படுகைகள் அமைத்து விதைக்கலாம்
திறன்: நாளொன்றுக்கு 3.5 எக்டர் நிலத்தில் விதைக்கலாம்
விலை : ரூ.50,000/-
எடை: 500 கிலோ
பரிமாணம்: 2320 x 1930 x 1140 மிமீ
அமைப்பு :
இக்கருவி உழுவதோடு குழிப்படுகையும் அமைத்து விதை விதைக்கிறது. குழிப்படுகை அமைக்கும் பகுதி டிராக்டர் கொத்துக் கலப்பையின் பின்னால் இணைத்துக் கொள்ளலாம். இதில் 30 செ.மீ. அகலமுள்ள மூன்று குழி அமைக்கும் பகுதிகள் பொருத்தப்பட்டுள்ளன. இவைகளில் அமைந்துள்ளகொழுக்கள் தேய்ந்துபோனால் சுலபமாக மாற்றிக் கொள்ளலாம். ஒவ்வொரு குழி அமைக்கும் பகுதியும் குறிப்பிட்ட இடைவெளியில் தானாகவே இருக்குமாறு ஒரு முட்டை வடிவம் கொண்ட கேம் பொருத்தப்பட்டுள்ளது. இவைகள் தரையில் உருளும் சக்கரங்களால் இயக்கப்படுகினறன. டிராக்டரால் இயக்கப்படும்போது கொத்துக் கலப்பை உழுதபின் இக்கருவி சுமார் 125 செ.மீ நீளமும் 30 செ.மீ அகலமும் 20 செ.மீ ஆழமும் உள்ளகுழிப்படுகைகளை அமைக்கிறது. இப்படுகைகளில் மழை நீர் தேங்கி நிற்பதால் மண்ணின்ஈரம் நீண்ட நாட்களுக்கு நிலை நிறுத்தப்படுகிறது. கொத்துக் கலப்பையின் மேல் விதைக்கும் கருவியைப் பொருத்திக் கொள்ளலாம். விதைகள் உடையாமல் ஒவ்பொன்றாக எடுத்து சால்போடுவதற்கேற்ற குவளை அமைப்பு ஆழத்தில் விதை விழுந்தவுடன் அதை மண் மூடுவதற்கேற்ற அமைப்பு ஆகியவைகளை தன்னகத்தே கொண்டுள்ளது. இக்கருவியைக் 9 அல்லத 1 வரிசைகொத்துக் கலப்பையின் மேல் சுலபமாகப் பொருத்திக் கொள்ளலாம். 45செ.மீ. இடைவெளியில் 4 வரிசைகளில் விதை விதைக்கலாம்.

சிறப்பம்சங்கள்:

  • 10 சதவீதம் ஈரத் தன்மையை அதிகமாக தக்கவைக்கின்றது.
  • பயிர் மகசூல் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரிக்கின்றது.
  • செலவு, நேரம் மற்றும் ஆற்றல் முறையே 32, 96 மற்றும் 18 சதவீததிற்கு சேமிக்கலாம்.