விதை அல்லது உரம் பரப்பும் கருவி

பயன் : விதை மற்றும் உரத்தை சீராக இறைப்பதற்கு பயன்படுகிறது.
திறன் : நாளொன்றுககு 4 எக்டர் நிலத்தில் பரப்பலாம்
விலை : ரூ.3,000/-
எடை: 3.6 கிலோ
பரிமாணம்: 360 x 510 x 420 மி.மீ
அமைப்பு : விதை மற்றும் உரம் பரப்பும் கருவியில் விளாஸஃடிக் வாளியாலான கலன் ஒன்று உள்ளது. கலனின் அடிப்பாகத்தில் இரு திறப்புகள் உள்ளன. திறப்புகளின் கீழே சுழலும் அலுமினிய வட்டத்தட்டு ஒன்று அமைக்கப்பட்டிருக்கிறது. இக்கருவியின் பக்பவாட்டில் உள்ள கைப்பிடியை ஒரு முறை சுற்றினால் வட்டத்தட்டு 11 சுற்றுக்கள் சுழலும்படியாக பற்சக்கர அமைப்புகள் பொருத்தப்பட்டுள்ளன. இவ்வாறு வட்டத்தட்டு சுழலும்போது கலனில் போடப்படும் இடுபொருள் திறப்புகளின் வழியே வட்டத்தட்டின் மேல் விழுந்து சிதறி பரவலாக விழுகிறது. கலனின் அடிப்புறததில் உள்ள திறப்புகளைக் கூட்டியோ குறைத்தோ வைத்து எக்டர் ஒன்றுக்கு இடும் பொருட்களின் அளவை மாற்றி வைத்துக் கொள்ளலாம்
சிறப்பு அம்சங்கள் :
- இக்கருவியை இயக்குவதற்கு ஒரு ஆள் போதுமானது.
- குறைந் நேரத்தில் அதிக பரப்பில் விதை/ உரம் பரப்புவதன் மூலம் ஆட்செலவு மிகவும் குறைவு.
- இக்கருவியை பயன்படுத்துவதன் மூலம் விதை உரம் சீராக பரப்ப முடிகிறது.