Agriculture Engineering
பண்ணைக் கருவிகள் :: விதைக்கும் கருவிகள்

கொரு என்னும் விதைக்கலப்பை

பயன் : விதை மற்றும் உரம் இடுவதற்கு
திறன் : நாளொன்றுக்கு 1 எக்டர் நிலத்தில் விதைக்கலாம்
விலை : ரூ.4,000/-    
எடை: 45 கிலோ
பரிமாணம்: 1080 x 1180 x 925 மி.மீ
செலவு: எக்டருக்கு ரூ. 190/-
அமைப்பு :
மாடுகளை  வைத்து இயக்கப்படும் இக்கருவி மூன்று கலப்பைகள், விதைக் குழல்கள், உரக்குழல்கள் போன்ற முக்கிய பாகங்களைக் கொண்டுள்ளது. முதலில் உரமும். பின்பு விதையும் ஒன்றோடு ஒன்றாகக் கலக்காமல் வெவ்வேறு ஆழத்தில் சாலில் விழுகின்றன. கருவியின் பின்புறத்தே உள்ள சங்கிலி மூலம் பிணைக்கப்பட்ட இரும்புச் சட்டம் விதை மற்றும உரத்தை மூடுகின்றது. கலப்பை உழும் ஆழத்தை மாற்றி அமைத்துக் கொள்ள வசதி உண்டு. கலப்பையில் உள்ள கொழு தேய்ந்தவுடன் முன்புறம் இழுத்து தேவைக்கேற்றவாறு வைத்துக் கொள்ளலாம்.
சிறப்பு அம்சங்கள் :

  • இக்கருவியை உபயோகித்து விதை மற்றும் உரத்தை ஒரே சமயத்தில் மூன்று வரிசைகளில் வேண்டிய இடைவெளியில் இடலாம்.
  • கருவியை இயக்கி மாடுகளை ஒட்டுவதற்கும் ஒருவரும், விதையிடுவதற்கு ஒருவரும், உரம் இடுவதற்கும் ஒருவருமாக மொத்தம் மூன்று நபர்கள் தேவை.
  • இக்கருவியை உபயோகிப்பதால் ஒரு எக்டருக்கு 12 மணி நேரத்தை மீதப்படுத்தலாம்.