பண்ணைக் கருவிகள் :: விதைக்கும் கருவிகள்

நெல் நாற்று நடும் கருவி

பயன் :            ஒரே சமயத்தில் 6 வரிசைகளில் நெல் நாற்று நடலாம்
திறன் :           நாளொன்றுக்கு 0.25 எக்டர் நிலத்தில் நாற்று நடலாம்
விலை :          ரூ.7,500/-
எடை: 17 கிலோ
மொத்த பரிமாணம்: 1230 x 1250 x 835 மி.மீ
அமைப்பு :     இக்கருவி நாற்றுப் பெட்டிகள் கைப்பிடி, மிதப்புச் சட்டங்கள் நாற்று எடுக்கும் கொக்கிகள் முதலான பாகங்களைக் கொண்டது. கைப்பிடியை கீழ் நோக்கி அழுத்தும்போது கொக்கிகள் நாற்றுப் பெட்டிகளிலிருந்து நாற்றுகளை பற்றி எடுத்து வயலில் நடுகின்றன. ஒவ்வொரு முறை கைப்பிடியை அழுத்தும்போது நாற்றுப்பெட்டி பக்கவாட்டில் நகரும்படியான அமைப்புகள் உள்ளன. இவ்வாறு செய்வதால் கொக்கிகள் ஒரே சீராக 3 முதல் 4 நாற்றுக்களை எடுத்து நடுகின்றன.

சிறப்பு அம்சங்கள் :

  • வரிசைகளுக்கிடையே உள்ள இடைவெளி 200 மிமீ 20 கிலோ எடை கொண்டது
  • ஒரே சமயத்தில் 6 வரிசைகளில் நாற்று நடலாம்
  • ஆட்செலவு மிகவும் குறைவு
 

முதல் பக்கம் | புகைப்படத் தொகுப்பு | கட்சியாகத் தொகுப்பு | கேள்வி பதில் | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2015