பயன் : விதை விதைப்பதற்கு திறன் : நாளொன்றுக்கு 4 எக்டர் நிலத்தில் விதைக்கலாம் விலை : ரூ.45,000/-, வரிசைகளின் எண்ணிக்கை: 9 எடை: 410 கிலோ பரிமாணம்: 2500 x 1030 x 1240 மி.மீ அமைப்பு : இக்கருவியானது விதைப்பெட்டி விதைகள் உடையாமல் ஒவ்வொன்றாக எடுத்து சாலில் போடுவதற்கேற்ற குவளை அமைப்பு கொண்ட சாதனம். இவற்றை இயக்கும் சக்கர அமைப்பு. கால்களில் வேண்டிய ஆழத்தில் விதை விழுந்தவுடன் அதை மண்ணால் மூடுவதற்கேற்ற அமைப்பு ஆகியவைகளை தன்னகத்தே கொண்டுள்ளது. இக்கருவியானது டிராக்டர் கொத்துக் கலப்பையின் மேல் பொருத்தப்பட்டு இயக்கப்படுகிறது. தேவையில்லாத இடங்களில் விதைகள் விழாமல் தடுக்க கிளட்ச் அமைப்பு ஒன்றும் பொருத்தப்பட்டுள்ளது. சிறப்பு அம்சங்கள் :
வரிசைகளின் இடைவெளியையும், விதைக்கு விதை உள்ள இடைவெளியையும் வேண்டியவாறு மாற்றிக் கொள்ளலாம்.
செலவு ஒரு ஏக்கருக்கு ரூ.250/-
இக்கருவியால் 87.5 சதவீதம் நேரம் மீதமாகிறது. இக்கருவியைக் கொண்டு நிலக்கடலை, கொண்டைக் கடலை, மக்காச்சோளம், சோளம் மற்று பருப்பு வகைகள் போன்ற விதைகளை விதைக்கலாம்.