Agriculture Engineering
பண்ணைக் கருவிகள் :: உழவுக் கருவிகள்

டிராக்டரால் இயங்கும் ஒரு / இரு வரிசை மரவள்ளிக் கிழங்கு தோண்டும் கருவி


பயன் : ஒன்று மற்றும் இரண்டு வரிசைகளில் மரவள்ளி கிழங்கு தோண்ட பயன்படுகிறது
திறன் : 50 குதிரைத்திறன் கொண்ட டிராக்டரில் இணைத்து உபயோகப்படுத்தலாம்
விலை : ரூ.32,000/- ஆகும்.
அமைப்பு
  • இக்கருவியில் கலப்பையின் அனைத்துப்பாகங்களும் இரும்பினால் செய்யப்பட்டவை. இந்த நவீன கருவியின் மூலம் மரவள்ளி கிழங்குகளை மண்ணிற்கு அடியில் இருந்து மிக எளிதாகவும் குறைந்த  நேரத்திலும் தோண்டி வெளியே எடுக்க முடியும். மண்ணின் ஆழத்திற்கு ஏற்றவாறு இக்கருவியின் உயரத்தை மேலும் கீழுமாக மாற்றி அமைத்துக் கொள்ளலாம
சிறப்பு அம்சங்கள்
  • இக்கருவியின் மூலம் ஒரு நாளில் ஒரு வரிசையாக நடப்பட்டு இருப்பின் 0.7 எக்டர், இரு வரிசையாக நடப்படிருப்பின் 1.0 எ்கடர் வரை அறுவடை செய்யலாம்.
  • இக்கருவியை உபயோகிப்பதன் மூலம் அறுவடைக்கான நேரம், வேலையாட்களுக்கான செலவினை குறைக்கலாம்.

Updated on : April 2016