நெற்பயிரில் களையெடுக்கும் கருவி
பயன் : வரிசையில் நடவு செய்த நெல் பயிரில் களை எடுக்கலாம்
திறன் : நாளொன்றுக்கு 0.18 எக்டர் நிலத்தில் களை எடுக்கலாம்
பரிமாணம்: 37 செமீX 1.4 மீ
எடை: 5-6 கிலோ
விலை : ரூ.1,500/-
அமைப்பு : இக்கருவியானது எளிதில் சுழலும் வண்ணம் பொருத்தப்பட்டுள்ள ஒன்று அல்லது இரண்டு உருளைப் பகுதிகளையும். சேற்றில் எளிதாகத் தள்ளிச் செல்வதற்கேற்ற் மிதப்பான் போன்ற அமைப்பையும் மேலும் இயக்குபவர் நடந்தவாறே தள்ளிச் செல்ல நீண்ட கைப்பிடியொன்றையும் கொண்டது. ஒரு உருளையைக்கொண்ட கருவியால் ஒரு வரிசையிலும் அதேபோல் இரண்டு உருளைப் பகுதியைக் கொண்ட கருவியில் ஒரே சமயத்தில் இரண்டு வரிசைகளிலும் எளிதில் களையெடுக்கலாம்
சிறப்பு அம்சங்கள் :
- இக்கருவியை உபயோகிக்க ஒரு வேலையாள் போதுமானது
- ஒரு உருளைப் பகுதியைக் கொண்ட கருவியை உபயோகித்து ஒரு நாளில் 25 செட் வரையிலும்.
இரண்டு உருளைகளைக் கொண்ட கருவியால் 40 சென்ட் வரையிலும் களையெடுக்க முடியும்.
- ஒரு உருளை மற்றும் இரண்டு உருளைகளைக் கொண்ட இக்கருவிகளை உபயோகித்து ஒரு எக்டருக்கு களையெடுக்க ஆகும் செலவை குறைக்கலாம்.