முதல் பக்கம் | புகைப்படத் தொகுப்பு | கட்சியாகத் தொகுப்பு | கேள்வி பதில் | தொடர்புக்கு
பண்ணைக் கருவிகள் :: களை எடுக்கும் கருவிகள்

நீண்ட கைப்பிடி கொண்ட களை எடுக்கும் கருவி

பயன் :                     வரிசைப் பயிர்களில் களை எடுக்கலாம்
திறன் :                     நாளொன்றுக்கு 0.05 எக்டர் நிலத்தில் களை எடுக்கலாம்
பரிமாணம்: 1100 x 650 x 1050 மி.மீ
எடை: 3 கிலோ
விலை :          ரூ.600/-
அமைப்பு :     இக்கருவியில் ஆட்கள் நின்ற நிலையிலேயே களையெடுப்பதற்கு வசதியாக நீண்ட கைப்பிடி பொருத்தப்பட்டுள்ளது. களையெடுக்கும் கத்தி மற்றும் எளிதில் தள்ளிச் செல்வதற்கேற்ற உருளையும் கைப்பிடியின் அடிப்பாகத்தில் இணைக்கப்பட்டுள்ளன. மண்ணின் தன்மைக்கேற்ப நட்சத்திர வடிவ அல்லது முள் வடிவ உருளைகளை பொருத்தி இயக்குதல் அவசியம்.  கைப்பிடியை முன்னும் பின்னும் இயக்கும் போது கத்தி மண்ணிற்குள் சென்று களைச்செடிகளை வெட்டுகிறது.

சிறப்பு அம்சங்கள் :

  • இக்கருவி மூலம் அதிகச் சோர்வு அடையாமல் முதுகை வளைக்காமல் நின்ற நிலையில் நடந்தவாறு களையெடுக்கலாம்
  • ஒரு நாளில் சாதாரண முறையை விட இரண்டு பங்கு அதிக பரப்பளவில் களையெடுக்கலாம்
  • இக்கருவியை பயன்படுத்த மண்ணின் ஈரப்பதம் 8 லிருந்து 10சதம் இருக்க வேண்டும்

 

முதல் பக்கம் | புகைப்படத் தொகுப்பு | கட்சியாகத் தொகுப்பு | கேள்வி பதில் | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2016