டிராக்டரால் இயங்கும் களையெடுக்கும் மற்றும் மண் அணைக்கும் கருவி
பயன் : வரிசைப் பயிர்களில் களை எடுக்கலாம் மற்றும் மண்ணை அணைக்கலாம் திறன் : நாளொன்றுக்கு 1.6 எக்டர் நிலத்தில் களை எடுக்கலாம் பரிமாணம்: 400 x 636 x 1665 மி.மீ
எடை: 143 கிலோ விலை : ரூ.15,000/- அமைப்பு : இக்கருவியானது வரிசைப் பயிர்களுக்கிடையே களை எடுக்கும் அமைப்பு மற்றும் மண் அணைக்கும் அமைப்பு ஆகிய இவைகளை தன்னகத்தே கொண்டுள்ளது. இந்த களையெடுக்கும் – வடிவம் கொண்டு சுவீப் அமைப்பானது டிராக்டரால் இயங்கக்கூடிய சால் அமைக்கும் கருவியின் முன்புறம் பொருத்தப்பட்டுள்ளது. இக்கருவியில் மூன்று சால் அமைக்கும் பகுதியின் முன்புறம் 45 செ.மீ.அகலம் 120 கோணம் மற்றும் 15 சாய்வு கோணம் உள்ள மூன்று சுவீப் அமைப்புகள் பொருத்தப்பட்டுள்ளது. இக்கருவியை டிராக்டரை கொண்டு பருத்தி போன்ற வரிசைப் பயிர்களுக்கிடையே இயக்கும் பொழுது முன்புறம் பொருத்தப்பட்டுள்ள சுவீப் கத்தி அமைப்பானது ஆழமாக மண்ணுக்குள் சென்று களைகளை வேருடன் பிடுங்கி மேல் கொண்டு வந்து விடும். பின்னால் பொருத்தப்பட்டுள்ள சால் அமைக்கும் அமைப்பானது கிளறி போடப்பட்ட மண்ணை இருபுறமும் வரிசைப் பயிரை ஒட்டி அணைத்து கொடுத்துச் செல்கிறது.
சிறப்பு அம்சங்கள் :
ஒரே நேரத்தில் களை எடுக்க மற்றும் மண்ணை அணைக்கவும் பயன்படுத்தலாம்.
வரிசைகளுக்கு இடையே உள்ள இடைவெளிக்கு ஏற்ப சுவீப் இடையே உள்ள இடைவெளியை
60.75 மற்றும் 90 செ.மீ. வரை மாற்றிக் கொள்ளலாம்
இக்கருவியை 35-45 குதிரை திறன் கொண்ட டிராக்டரை பயன்படுத்தி இயக்கலாம்.