பண்ணைக் கருவிகள் :: அறுவடை மற்றும் கதிரடிக்கும் இயந்திரங்கள் |
|||||
உழவுக் கருவிகள் |
பவர்டில்லரால் இயங்கும் புல்வெட்டும் கருவி
பயன் : புல்வெளிகளை சீரமைக்க உதவுகிறது திறன் : நாளொன்றுக்கு 0.8 எக்டர் சீரமைக்கலாம் விலை : ரூ.16,000/- அமைப்பு : இதில் 70 செ.மீ அகலமும் 22.5 செ.மீ விட்டமும் கொண்ட உருளையின் மேற்புறத்தில் 12 வளைந்த திருகு வடிவ இரும்புக் கத்திகள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த உருளை சுழல்வதற்கான விசை பவர்டில்லரின் கியர் பாக்ஸிலிருந்து சுழல் கலப்பை விசைப்பெட்டியிலுள்ள அச்சு மற்றும் செயின் பற்சக்கரங்கள் மூலமாக கிடைக்கிறது. உருயைின் கீழ்ப்பாகத்தில் உட்குழிவான கிடைமட்ட இரும்புக் கத்தி ஒன்று உருளையின் அகலத்திற்கு நிலையாக பொருத்தப்பட்டுள்ளது. இக்கருவி பவர் டில்லர் பின்புறம் சுழல் கலப்பையின் பொருத்து முனையுடன் இணைக்கப்பட்டுள்ளது. பின்புறம் இரண்டு நிலைப்படுத்தும் கைகளுடன் பவர்டில்லரின் கைப்பிடியுடன் இணைக்கப்பட்டுள்ளது. புல்தரையின் மேல் செல்லும்பொழுது கிடைமட்டக் கத்திக்கும். சுழல் கத்திக்கும் உள்ள இடைவெளியில் புல் வெட்டப்பட்டு மேல் நோக்கி வீசி எறியப்படுகிறது. உருளையின் மேற்புறம் பொருத்தப்பட்டுள்ள பாதுகாப்பபுத் தகட்டினால் மேல் நோக்கி வீசப்படும் புற்கள் முன்புறம் செலுத்தப்படுகிறது. இக்கருவியின் பின்புறம் பொருத்தப்பட்டுள்ள சக்கரத்தின் மூலமாக புற்களைத் தேவையான அளவுக்கு வெட்டும் உயரத்தை மாற்றி அமைத்துக் கொள்ளலாம் சிறப்பு அம்சங்கள் ஒரே சீராக புற்களை வெட்டி புல்தரையை பாதுகாக்க உதவுகிறது. ஆட்களைக் கொண்டு புல் வெட்டுவதுடன் ஒப்பிடும்பொழுது சுமார் 50 சதவீதம் வரை பயமும் 64 சதவீதம் நேரமும் மிச்சமாகிறது.
|
சூரிய ஒளி ஆற்றல் சாதனங்கள் |
|||
நுண்ணீர் பாசனம் |
|||||
உமி நீக்கும் கருவிகள்
|
|||||
| முதல்பக்கம் | நாட்டுப்புற கருவிகள் | இறக்குமதியான இயந்திரங்கள் | விலைப்பட்டியல் | கேள்வி பதில் | தொடர்பு கொள்ள | © தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2008 |
|||||