பண்ணைக் கருவிகள் :: விதைக்கும் கருவிகள் |
|||||
உழவுக் கருவிகள் |
நன்செய் நிலங்களில் நேரடி நெல் மற்றும் தக்கைப்âண்டு விதைக்கும் கருவி
பயன் : ஒரே சமயத்தில் நெல் மற்றும் தக்கைப் âண்டு விதைகளை நேரடியாக நன்செய் நிலங்களில் விதைக்கலாம் திறன் : நாளொன்றுக்கு 0.8 எக்டர் நிலத்தில் விதைக்கலாம் விலை : ரூ6000/- அமைப்பு : இக்கருவியில் நான்கு உருளை வடிவ விதைப்பெட்டிகள் உள்ளன. இந்த விதைப் பெட்டிகளில் 150 மிமீ இடைவெளியில் 2 வரிசைகளில் துளைகள் போடப்பட்டுள்ளன. கருவியின் நடுவில் 600 மிமீ வட்டமுள்ள சக்கரம் ஒன்று பொருத்தப்பட்டுள்ளது. இக்கருவியை ஒருவர் இழுத்துச் செல் கைப்பிடி ஒன்றும் உள்ளது. சேற்று வயல்களில் எளிதாக இழுத்துச் செல்வதற்கேற்ப இரண்டு வழுக்குத் தகடுகள் உள்ளன.
சிறப்பு அம்சங்கள் நெல் நாற்று நடவு தவிர்க்கப்படுகிறது. தனியே பசுந்தாள் பயிரிடுவதும் தவிர்க்கப்படடுகிறது. இதனால் எக்டருக்கு ரூ.3000 வரை சாகுபடி செலவு குறைகிறது. நெல் வரிசைகளுக்கு இடையே பசுந்தாள் உரப்பயிர்கள் வளருவதால் களைகள் வளருவது கட்டுப்படுத்தப்படுகிறது. நெல் வரிசைகளில் விதைக்கப்படுவதால் கருவிகளைக் கொண்டு களை எடுப்பது எளிதாகிறது. நாற்று நடும் போது நாற்றுகளுக்கு உண்டாகும் அதிர்ச்சி தவிர்க்கப்படுகிறது. இதனால் பயிர் பத்து நாட்களுக்கு முன்னதாகவே அறுவடைக்கு வந்து விடுகிறது.
|
சூரிய ஒளி ஆற்றல் சாதனங்கள் |
|||
நுண்ணீர் பாசனம் |
|||||
உமி நீக்கும் கருவிகள்
|
|||||
| முதல்பக்கம் | நாட்டுப்புற கருவிகள் | இறக்குமதியான இயந்திரங்கள் | விலைப்பட்டியல் | கேள்வி பதில் | தொடர்பு கொள்ள | © தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2008 |
|||||