|
|||||||||||||
செயற்கை கருத்தரிப்பு முறை அறிமுகம் இச்செயற்கைக் கருத்தரிப்பு முறை கால்நடைகளில் நன்கு பயன்படுகிறது. கால்நடைகளில் தேவையான பண்புகளைப் பெற அயல்நாட்டுக் கால்நடைகளை நம் நாட்டு இனங்களுடன் செயற்கைக் கருத்தரிப்பு முறையில் பெறலாம். ஆனால் இம்முறையில் கருத்தரிப்பு செய்யும் போது சில மரபியல் குணங்கள் இழக்கப்படுகின்றன. சினையின் பருவ அறிகுறிகள்
செயற்கைக் கருத்தரித்தலின் நன்மைகள் தீமைகள் விந்து சேகரித்தல் மற்றும் பகுத்தாய்தல் செயற்கை சினைப் பை மூலம் விந்துச் சேகரிப்பிற்கு செயற்கை சினைப் பையை பயன்படுத்துவதற்கு முன்பு அவற்றை தகுந்த முறையில் கழுவி முறைப்படி சுத்தம் செய்து வைக்கவேண்டும். சினைப்பையை அமைக்க முதலில் உள் இரப்பை இரப்பர் உருளையில் இருக்கும். ஒரு துவாரப் பகுதியின் வழியே கொண்டு சென்று மறு துவாரம் பகுதியின் வழியே வெளியே மடக்கவேண்டும். பிறகு இரப்பர் உருளையின் மேல்பகுதியில் உள்ள நீர்த் துவாரம் வழியே சூடேற்றப்பட்ட 45 டிகிரி செல்சியஸ் தண்ணீரை ஊற்றவேண்டும். பிறகு அளவுகள் குறிக்கப்பெற்ற விந்து சேகரிக்கும் குடுவையை செயற்கை சினைப்பையின் குறுகிய முனைப்பகுதியில் செருகவேண்டும். பின்னர் செயற்கை சினைப்பையின் உள்பகுதியில் ஜெல்லியை தடவவேண்டும். அதன் மூலம் நீர்ப்பகுதியில் அழுத்தத்தை உருவாக்கலாம். இவ்வாறு செய்வதன் மூலம் இயற்கையான சினைப்பை அமைப்பை செயற்கை முறையில் உருவாக்கலாம். ஒவ்வொரு முறை விந்து சேகரிக்கும் போதும் செயற்கை சினைப் பையின் வெப்பநிலையைச் சரிபார்த்துக்கொள்ளவேண்டும். காளைகள் தாமதித்தாலோ, செயற்கை சினைப்பையில் வெப்பநிலை குறைந்தாலோ விந்து வெளிப்படும் தன்மை மாறுகின்றது. அவ்வாறு விந்து வெளிப்பட்டாலும் வெளிவரும் விந்து சிறுநீர் போன்றவற்றில் அசுத்தம் அடைந்து உபயோகம் இல்லாமல் போக வாய்ப்புகள் அதிகம். செயற்கை கருப்பை மூலம் விந்து சேகரிக்கும் செயல்முறை
விந்து பாதுகாப்பு இவ்விரண்டில் நீர்ம நைட்ரஜன் (Liquid Nitrogen)சிறந்தது. ஏனனெில் இம்முறையில் விந்துவின் தன்மை குன்றாமல் அப்படியே நீண்ட நாட்கள் வரை இருக்கும். ஆனால் உலர் பனிக்கட்டி ஆல்கஹால் முறையில் விந்து சரியான வெப்பநிலையில் பராமரிக்கப்படாவிடில், அதன் வளம் குன்ற வாய்ப்புள்ளது. நீர்ம நிலையில் உள்ள விந்துவை 40 டிகிரி பாரன்ஃஹீட்டில் 1 முதல் 4 நாட்கள் வரை பாதுகாக்க முடியும். விந்தானது கண்ணாடியாலான குடுவை போன்ற அமைப்பில் சேகரித்து வைக்கப்படுகிறது. மற்றொரு முறையில், ஃபிரெஞ்ச் குழாய் அமைப்பில் சேகரித்து வைக்கப்படுகிறது. பல செயற்கைக் கருவூட்டல் நிறுவனங்கள், இந்த பிரெஞ்ச் குழாய் அமைப்பையே பின்பற்றுகின்றன. சில முறைகளில் செயற்கை நிறமூட்டிகள் பயன்படுத்துகின்றனர். இதன் மூலம் எந்த இனத்திலிருந்த எடுக்கப்பட்ட விந்து என்பதை இனங்காணுதல் எளிது. எந்த முறையில் சேகரித்தும் பாதுகாத்தாலும் ஒவ்வொரு காளையின் விந்துவுக்கும் தனித்தனியே அடையாளக் குறியிடுதல் அவசியம். விந்துவை உட்செலுத்தும் முறைகள் மலப்புழை வழியே விந்துவை உட்செலுத்துதல்
இம்முறையில் ஊசியை உட்செலுத்தி ஊசியானது கருப்பையில் கொண்டு சென்று விந்துவை வைக்க ஒரு விசை செலுத்தப்படுகிறது. பின்பு ஊசி வெளியில் எடுக்கப்பட்டு விடுகிறது. குடுவை உட்செலுத்தும் முறை சினைப்பை முறை விந்து சேகரிப்பும், பாதுகாப்பும் இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும் இம்முறை விந்துச் சேகரிப்புக் காணப்படுகிறது. குழாயில் விந்து சேகரித்தல் முதன் முதலில் பிரான்சில் சேகரிக்கப்பட்டது. விந்துவை உறைய வைத்துப் பாதுகாக்கும் முறையில், பல நீர்மங்கள் பயன்படுத்தப்படுகின்றன. அவையாவன. சோடியம் சிட்ரேட் டைஹைட்ரேட் 2.4-2.0 கிராம் 8.0 மிலி 25.0 சதவிகிதம் கொள்ளளவு 50000 அலகுகள் / 100 மிலி விந்து ஃபிரக்டோஸ் கிளிசரால் முட்டை மஞ்சள் கரு பெனிசிலின் நீர்த்த நீர்மங்கள், டைஹைட்ரோ ஸ்ரெட்டோமைசின் 50 மிகி / 100 மிலி நீர்த்த விந்தணுக்கள் நீர்த்த இரு கண்ணாடியில் காய்ச்சி வடித்த நீர் 100 மிலி. உறையவைக்கப்பட்ட விந்துவானது ஒற்றை இழைக் கண்ணாடி அல்லது பிளாஸ்டிக்கால் ஆன உறிஞ்சு குழலில் + 5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் அடைக்கப்படுகிறது. உறைநிலை செயலில் கிளிசரால் அளவு 7-7.6 சதவிகிதம் இருக்கவேண்டும். நோய்க்கிருமிகளைக் கட்டுப்படுத்த கிருமி நாசினிகளைச் சேர்க்கவேண்டும். விந்துவானது 1 மி.லி விந்துவில் 20 மில்லியன் நகரும் விந்தணுக்கள் மட்டுமே இருக்குமாறு, அடர்வு நீக்கம் செய்யப்பட வேண்டும். விந்துவை உறை நிலைக்கு எடுத்துச் செல்லும் போது படிப்படியாக வெப்பநிலையைக் குறைக்க வேண்டும். வெப்பநிலை இறுதியில் -79 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்க வேண்டும். 3-5 நிமிடங்களுக்குள் -75 டிகிரி செல்சியஸ் கொண்டு வருதல் விரைவுக் குளிர்தல் முறையாகும். மெதுவாகக் குளிர்விக்கும் முறையில் +5 டிகிரி செல்சியஸ் லிருந்து -15 டிகிரி செல்சியஸ் வரை நிமிடத்திற்கு 1 டிகிரி செல்சியஸ் குறைக்க வேண்டும். -15 டிகிரி செல்சியஸ் -31 டிகிரி செல்சியஸ் நிமிடத்திற்கு 2 டிகிரி செல்சியஸ் குறைக்கவேண்டும். -31 டிகிரி செல்சியஸ் -75 டிகிரி செல்சியஸ் வரை 4-5 டிகிரி செல்சியஸ் நிமிடத்திற்குக் குறைக்கலாம். இந்த முறையில் குளிர்விக்க 40 நிமிடங்கள் ஆகும். பின்பு -76 டிகிரி செல்சியஸ் வரை உடனே குறைத்துக் கொள்ளலாம். உறைய வைக்கப்பட்ட விந்துவானது நீர்த்து, உறை நிலை அடைந்த விந்துக்களின் தன்மையை அதிகரிக்கச் செய்கிறது. மேலும் இவ்வாறு அடர்வு குறைந்த விந்துக்களின் விலையும் குறைவு. மாற்றி மாற்றி ஒன்றுவிட்ட நாட்களில் மீண்டும் உட்செலுத்திக் கொள்ளலாம். இவ்வாறு நீர்ம நைட்ரஜனானது, விந்துவை அதிக நாள் சேகரித்து வைப்பதில் முக்கியப் பங்காற்றுகிறது. கால்நடையில் செயற்கைக் கருவூட்டம் விந்தணுக்களின் முழுமையான பயன்பாடு நல்ல மரபியல் திறனுள்ள காளைகளின் விந்துக்களைத் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்துதல் குறைந்த செலவு கால்நடை மற்றும் விவசாயத்திற்கும் பாதுகாப்பானது நோய் பரவும் அபாயம் குறைவு தீமைகள் (ஆதாரம்: www.naweb.iaca.org) செயற்கைக் கருவூட்டலின்போது கவனிக்க வேண்டியவை பழங்காலத்தில் பின்பற்றி வந்த செயற்கைக் கருவூட்டல் முறைகள் இயற்கை முறை போன்றே இருந்தன. இதற்கு நிறைய விந்துணுக்கள் தேவைப்பட்டன. எனவே சினைப் பை முறை முழுமையான பலன் தரவில்லை. பின்பு வந்த குடுவை முறையிலும் உபகரணங்கள் சரியாக சுத்தம் செய்யப்பட்டிருக்காவிடில், சரியான பலன் கிட்டவில்லை. இறுதியில் இப்போது மலப்புழை வழியே சினைப்பையில செலுத்தும் முறையே நன்கு பயன் தருகிறது. மலப்புழை வழியே சினைப்பைக்குள் செலுத்தும் முறை நன்கு சுத்தம் செய்யப்பட்ட வடிகுழாயில் குளிர்விக்கப்பட்டு உறைநிலை குறைந்த விந்துக்களை வைத்து சினைப்பைக்குள் செலுத்தப்படுகிறது. அவ்வாறு செலுத்தம்போது செலுத்துபவர் கண்டிப்பாக உறை அணிந்திருக்கவேண்டும். அவர் அந்த வடிகுழாயை கவனமாக உருண்டையான மடிப்புகள் வழியே எடுத்துச் சென்றபின், அக்குழாயானது கருப்பையின் கழுத்துப்பகுதியை அடைகிறது. விந்தணுக்களை கவனமாக வெளியேற்ற வேண்டும். சில விந்தணுக்கள் கருப்பையினுள்ளும் சில கழுத்துப்பகுதியிலும் விழுமாறு கவனமாக வெளியேற்ற வேண்டும். கருப்பையின் அளவு சிறியதாக இருப்பதால் உள்ளே அதிகம் செலுத்தி ஏதும் காயம் பட்டுவிடாமல் பார்த்துக் கொள்ளுதல் நலம். அதே சமயம் விந்துக்கள் வடிகுழாயிலேயே தங்கிவிடக்கூடாது. ஏற்கெனவே ஒரு முறை கருவூட்டல் செய்த மாடுகளுக்குச் சினைப் பிடிக்க சந்தர்ப்பம் இருப்பதால் வடிகுழாயை மிகவும் உட்செலுத்தக்கூடாது. இம்முறை சிறிது கடினமாக இருந்தாலும் முறையாகப் பயிற்சி பெற்றபின் செய்வதானால் பிற முறைகளை விட அதிக பலன் தரக்கூடியது. அதே நேரம் சரியான சுகாதார முறைகளையும் மேற்கொள்ளவேண்டும். சினைப் பிடிக்க ஏற்ற நேரம் டிரிம் பெக்கர் மற்றும் டேவிஸ் என்பவர்கள் நெப்ராய்காவில் 1943ல் நடத்திய சோதனைப்படி அதிகமான பசுக்களுக்கு சினை பிடிப்பது மையச் சினைப்பருவத்தில் தான், ஏனெனில் பருவம் ஆரம்பித்து 8-10 மணி நேரத்தில் தான் சூலகத்திலிருந்து சூலகம் வெளிப்பட்டு முட்டைக்குழாயை வந்தடைகிறது. இதையே, காலையில் பருவத்திற்கு வரும் மாட்டை மாலையிலும் மாலையில் பருவத்திற்கு வரும் மாட்டை அடுத்த நாள் காலையிலும் கருவூட்டல் செய்வது நல்லது எனக்கூறுகிறோம். மேலும் மாட்டின் விந்தானது 18-24 மணி நேரம் கர்ப்பப்பையில் உயிருடன் இருக்கும். கருமுட்டை வெளியான பின்பு 12 மணி நேரம் கழித்து கருவூட்டல் செய்தால் சினைப்பிடிப்பு விகிதம் குறைந்துவிடும். 12-24 மணி நேரத்திற்குள் கருமுட்டையானது, கருவாக உருவாகும் தன்மையை இழந்து விடுகின்றது. எனவே குறிப்பிட்ட காலத்தில் கருவூட்டல் செய்தால் சினைப்பிடிப்பது அதிகரிக்கும். கருவூட்டல் செய்யும் நேர அட்டவணை
(ஆதாரம்: www.world_agriculture.com) | |||||||||||||
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2008-2024 |