கன்றுகளின் கவனிப்பும் பராமரிப்பும்
நல்ல தரமான கன்றுகளை பெற நல்ல தீவனமும் முறையான கவனிப்பும் அவசியம். கன்றுகள் பிறப்பதற்கு முன்பிருந்தே நன்கு மாட்டை கவனித்தல் வேண்டும். இல்லையெனில் கவனிப்பற்ற மாடுகள் ஈனும் கன்று மெலிந்து பலவீனமானதாக இருக்கும். எனவே கன்று ஈனுவதற்கு 6-8 வாரங்களுக்கு முன்னிருந்தே சினைமாட்டிற்கு சிறந்த கவனிப்பு அவசியம்.
பிறந்த கன்றின் கவனிப்பு
- கன்று பிறந்த உடனே அதன் வாயிலும் மூக்கிலும் போர்த்தியுள்ள கண்ணாடி போன்ற ஆடையை (mucous) சுத்தம் செய்ய வேண்டும்.
- தாய் மாடானது அதன் நாக்கினால் கன்றின் உடல்முழுவதும் சுத்தம் செய்யும். அவ்வாறு செய்யாவிடில் அல்லது குளிர்காலத்தில் ஈரமற்ற துணி (அ) சணல் பை கொண்டு கன்றினை சுத்தம் செய்து கன்றிற்கு சீரான சுவாசம் கிடைக்கச் செய்ய வேண்டும்
- அதன் வயிற்றிலும், நெஞ்சிலும் சிறிது கையினால் அழுத்திவிட்டால் கன்று எளிதாக சுவாசிக்க இயலும்
- தொப்புள் கொடியை வயிற்றிலிருந்து 2 லிருந்து 5 செ.மீ நீளம் விட்டு அறுத்து விட்டு அயோடின் அல்லது டிஞ்சர் தடவி முடிந்துவிட வேண்டும்.
- குட்டி தானாக எழுந்து சென்று தாய்ப்பால் அருந்த முடியவில்லை எனில் அதை தூக்கி விட்டு உதவி செய்யலாம்
- முடிந்தவரை 30 லிருந்து 45 நிமிடங்களுக்குள் எழுந்து சென்று தாய்பால் குடிக்கச் செய்ய வேண்டும். ஆறு மணி நேரத்திற்குள் சீம்பால் குடிக்கச் செய்ய வேண்டும்
- பிறந்த கன்றின் எடையை அளவிட வேண்டும்
- மாட்டின் காம்பினை நன்கு நீரினால் கழுவிச் சுத்தம் செய்ய வேண்டும்
- கொட்டிலில் உள்ள திரவங்களை அகற்றி அதை சுத்தப்படுத்த வேண்டும்
- கன்றிற்குத் தேவையான படுக்கை வசதி அமைத்துத் தர வேண்டும். குளிர்காலமாக இருந்தால் அதை குளிரிலிருந்து பாதுகாக்க வேண்டும்
|
கன்றுகள் ஊட்டம் |
சீம்பால் ஊட்டம்
- கன்று பிறந்தவுடன் மாட்டிலிருந்து வரும் முதல் பாலை சீம்பால் என்பர். இது கெட்டியான மஞ்சள் நிறத்திரவம்
- இதில் விட்டமின் ‘ஏ் மற்றும் நோய் எதிர்ப்புத்திறன் அதிகமாக இருக்கும். பிறந்த 10 முதல் 12 மணி நேரம் வரை கன்றுகளின் சிறுகுடல் சவ்வுகள் நோய் எதிர்ப்புச் சக்திப் பொருட்களை உட்கிரகிப்பதற்கு பசதியாக அமைந்திருக்கும். இச்சமயத்தில் சீம்பாலை உட்கொள்ளச் செய்தல் சிறந்தது
- பிறந்த முதல் மூன்று நாட்களுக்கு கன்றிற்குத் தவறாமல் சீம்பால் தரவேண்டும். ஒரு நாளைக்கு 2 வேளை கொடுக்கலாம். கன்று பலவீனமாக இருந்தால் 3 முறை குடிக்கச் செய்யலாம். இது கன்றின் உடல் வெப்பத்தை உயர்த்தி வெதுவெதுப்படையச் செய்கிறது
- ஒரு மாதம் கழித்து கன்றுக்கு நல்ல தரமுள்ள பசுந்தீவனமும் 4 மாதத்திற்குப் பிறகு உலர்தீவனம் அளிக்கலாம்
|
சீம்பால் ஊட்டம் |
பிற பராமரிப்புகள்
- கன்றுகளை அடையாளம் காண நிரந்திர அல்லது தற்காலிக அடையாளக் குறிகளைப் பயன்படுத்தாலம். காதின் அடிப்பகுதியில் எண்களையும், எழுத்துக்களையும் பச்சை குத்தியும், உலோகக் காதணிகளை அணிவித்தும் செயல் படுத்தலாம். கழுத்தில் அடையாளக் குறித்தகடுகளைத் தொங்கவிடலாம்
- பிறந்து 7 முதல் 10 நாட்களுக்குள் கொம்புக் கருத்தை நீக்கி கொம்பு வளர்வதைத் தடுக்கலாம். இதை காய்ச்சிய இரும்பு அல்லது காஸ்டிக் குச்சிகள் மற்றும் மின்சார முறையிலும் செய்யலாம். நீக்கய உடன் கொம்பின் மேல் வாசலின் களிம், வேப்பெண்ணெய் போன்ற வற்றைத் தடவவேண்டும்
- கன்றுகளுக்கு முறையாகக் குடற்புழு நீக்க மருந்தை அளிக்க வேண்டும் அவைகளுக்கு மாதம் ஒருமுறை அளித்தல் நல்லது
- பிறந்த இரண்டாவது வாரத்திலிருந்து தூய தண்ணீரை குடிப்பதற்கு அளிக்கலாம்.
- கன்றுகளை 3 மாதங்கள் வரை தனித்தனிக் கொட்டிலில் பராமரிக்க வேண்டும். 3 லிருந்து 6 மாதம் வரை குழுவாக வளர்க்கலாம். 6 மாதங்களுக்குப் பிறகு காளைக்கன்றுகள் மற்றும் கிடாரிகளைத் தனித்தனியாகப் பிரித்து வளர்க்க வேண்டும்
- கன்றுகளின் வளர்ச்சி வீதத்தை அறிய 6 மாதங்கள் வரை வாரம் ஒருமுறையும் அதன் பின்பு மாதம் ஒருமுறையும் எடை பார்த்தல் நலம்
- கன்றுகளின் முதல் மாத்தில் வயிற்றுப்போக்கு, குடற்புழு மற்றும் காய்ச்சல் போன்றவற்றால் இறப்பு விகிதம் அதிகமாக இருக்கும். எனவே அதனை நல்ல வெதுவெதுப்பான சுகாதாரமான இடத்தில் வளர்த்தல் இழப்பைக் குறைக்கும்.
- கிடாரிக்கன்றில் 4ற்கும் மேற்பட்ட காம்புகள் இருப்பின் அதை பிறந்த முதல் இரு மாதங்களுக்குள் நீக்கி விடுதல் வேண்டும்
- காளைக் கன்றுகள் 8 அல்லது 9 மாதத்தில் ஆண்மை நீக்கம் செய்யப்படவேண்டும்
- கன்றுகளை தாய்ப்பசுவிடமிருந்து பிரித்து தனியே வளரப் பழக்க வேண்டும்
|
அடையாளக் குறியிடுதல்
தனிக் கொட்டில்
|
கிடேரிப் பராமரிப்பு
தரமான நல்ல கன்றுகளைப் பெற கீழ்க்காணும் கிடேரிப் பராமரிப்புகள் அவசியமாகின்றது.
- பசுவின் வளர்ச்சி அது சாப்பிடும் பசுந்தீவனத்தைப் பொறுத்தே அமையும். அதே சமயம் தேவையான அளவு உலர்தீவனடும் கொடுத்தல் அவசியம். அதன் முந்தைய பேறுகாலங்களில் கொழுப்பை விட புரோட்டீன் அதிகம் தேவைப்படுகிறது
- திறந்த வெளிக் கொட்டில் அமைப்பே கிடேரிக்கு மிகவும் ஏற்றது
- கிடேரி கருத்தரிக்கும்போது அதன் வயதை விட எடை மிக முக்கியம். ஏனெனில் வயதான கிடேரிகள் கூட நல்ல கன்றுகளை ஈனும். அதனால் மெலிந்த கிடேரிகள் கன்று ஈனுவதற்கு மிகவும் சிரமப்படும். மேலும் அதன் கன்றுகளும் நல்ல உடல்நலமுடையதாக இருக்காது
- ஆனால் வயதான மாடுகளில் உற்பத்தித் திறன் குறைவாகவே இருக்கும். முதல் நான்கு பருவங்களில் பால் உற்பத்தி அதிகமாக இருக்கும்.
- எனினும் எந்த அளவு அதிக சதைப்பற்றுடனும், எடையடனும் இருக்கிறதோ அந்தளவுக்கு பால் அதிகமாக உற்பத்தி செய்ய முடியும்
- கன்று ஈனுவதற்கு 6 வாரங்களுக்கு முன்பாகவே கிடேரி தனிக் கொட்டிலில் பராமரிக்கப் பட வேண்டும்
- மாட்டிற்கு அது சாப்பிடும் அளவிற்கு பசுந்தீவனமும் வாரத்திற்கு 2-3 கிலோ அடர்தீவனமும் அளித்தல் அவசியம்
- ஒரு சுகாதாரமான இடததில்தான் நல்ல வளர்ச்சி சாத்தியம் எனவே சரிவிகித உணவுடன் நோய்த்தடுப்பிற்குத் தேவையான பொருட்களையும் முன்கூட்டியே செய்து கொள்ளதல் நலம்
- முதல் கன்று ஈனும் மாடுகளுக்குத் தனிக்கவனம் செலுத்த வேண்டும்
|
கிடேரிகள் |
கறவைமாடுகளின் பராமரிப்பு
- அதிக பால் உற்பத்தி மூலம் நல்ல இலாபம் பெற கீழ்க்காணும் வழிமுறைகளைக் கையாளலாம்.
- கறவை மாடுகளு்குத் தீவனம் மிக முக்கியம். அதற்கு நிறைய பசுந்தீவனமும் உட்கொள்ளுமளவு உலர் தீவனம் அல்லது வைக்கோல் அளிக்கலாம்
- கறவை மாட்டின் தீவனம் குறைந்தால் உடனே பால் அளவு குறையும். எனவே 2.5 லிடடருக்கு மேல் கறக்கும் மாடுகளுக்கு ஒவ்வொரு 2 லிட்டருக்கும் 1 கிலோ கலப்புத் தீவனம் கடடாயம் அளிக்க வேண்டும்
- கறவை மாடுகளை மென்னையாகக் கையாளுதல் வேண்டும். அவை பயந்தால் பால் உற்பத்தி குறையும்
- கன்று ஈண்ட 16வது நாளிலேயே அதன் சூடு வெளிப்படும். அதை அலட்சியப்படுத்தாமல் அதற்கேற்றவாறு பராமரிக்க வேண்டும். கரு அழிந்தால் இவ்வாறு நேரலாம். சரியான நேரம் பார்த்து அடுத்த கருத்தரிப்புக்குத் தயார் செய்தல் வேண்டும்
- பால் உற்பத்தி அளவை ஒவ்வொருமுறையும் பதிவேடுகளில் பதிவு செய்தால் அதன் உற்பத்தி திறனை அறிந்துகொள்ள உதவும்
- ஒவ்வொரு கறவை மாட்டிற்கும் தனித்தனிப் பதிவேடுகள் அவசியம்
- கலப்பு தீவனத்தை பால் கறக்கும் முன்பும் அடர் தீவனத்தை பால் கறந்த பின் அளித்தல் சிறந்தது
- ஒரு சீரான இடைவெளியுடன் தண்ணீர் வழங்க வேண்டும். வைக்கோல் போன்ற உல் தீவனங்கள் பால் உற்பத்தியை அதிகரிக்கும்
- தினசரி பால் கறப்பது அவசியம் ஆகும். ஒரு நாளைக்கு 3 முறை கறப்பது பால் உற்பத்தியை அதிகரிக்கும். கறக்காமல் மடியிலேயே விடப்படும் பால் அதிக பால் சுரப்பதைக் குறைக்கிறது
- முடிந்தவரை முழு கையையும் பயன்படுத்திப் பால் கறக்க வேண்டும். இதண்டு விரல் (பெரு விரல் அல்லது ஆட்காட்டி கொண்டு கறப்பது சீராக இல்லாமல் காம்புகளில் அதிக அழுத்தம் கொடுக்கும். இதனால் காம்பில் வலி உண்டாகிறது.
- கன்று ஊட்டாமலேயே பசு பால் (சுரக்குமாறு) கறக்குமாறு பழக்க வேண்டும். அப்போதுதான் கன்றைப் பசுவிடமிருந்து விரைவில் பிரிக்க முடியும்
- திறந்த வெளிக் கொட்டில் அமைப்பே கறவை மாடுகள் சுதந்திரமாக உணர வைக்கும்
- Grooming of cows: எருமை மாடுகளை பால் கறக்குமுன் நன்கு கழுவினால் சுத்தமான பால் கிடைக்கும். தினசரி எருமை மற்றும் மாடுகளை குளிப்பாட்டுதல் உதிர்ந்த முடியை நீக்க உதவும்
- ஏதேனும் வித்தியாசம் இருந்தால் அதை அறிந்து நீக்குதல் வேண்டும். உதாரணமாக அடிக்கடி உதைத்தல், நக்குதல் போன்றவை இருப்பின் அதன் காரணமாகச் சரிசெய்ய வேண்டும்
- ஒவ்வொரு கறவைப் பருவத்திற்கும் இடையே 60-90 நாட்கள் இடைவெளி வேண்டும். அவ்வாறு இல்லையெனில் பால் தரும் நாட்கள் குறையும்
- சரியான நேரத்தில் தடுப்பூசிகள் போடப்படவேண்டும்
- ஒவ்வொரு கறவை மாட்டிற்கும் அடையாள எண் இட்டு அதன் பால் அளவு கொழுப்புச்சத்து அளவு உணவு உட்கொண்ட அளவு கன்று ஈனும் பருவங்கள் பதிவு செய்யப்படவேண்டும்
கருத்தரித்த சினை மாடுகள் பராமரிப்பு
- சினை மாடுகளின் சிறந்த பராமரிப்பு நல்ல கன்றுகளையும் மேலும் பால் உற்பத்தித் திறனையும் அதிகரிக்கும்.
- சினை மாடுகளுக்கு 1.25 யிலிருந்து 1.75 கி.கி கலப்புத்தீவனம் அதிகமாகக் கொடுக்க வேண்டும்.
- நல்ல தரமான பயிறு வகைகள் , அதன் தொழில்களையும் தீவனமாக அளிக்கலாம். சினைமாடானது மிகவும் ஒல்லியாகவும் மேலும் குண்டாகவும் இருத்தல் கூடாது
- சூட்டிலிருந்து பாதுகாக்க தூய குளிர்ந்த நீரை அருந்த அளிக்கலாம்
- நோய் பாதித்த கால்நடைகளுடனோ, கரு(தரித்து), சிதைந்துவிட்ட மாடுகளுடனோ இதை சேர்த்து உலவ அனுமதிக்கக்கூடாது
- எப்போதும் கட்டி வைக்காமல் உலவ விடுதல் நலம்
- மற்ற மாடுகளுடன் முட்டிக் கொள்ளவோ நாய் போன்ற விலங்குகள் துரத்தாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்
- சினை மாட்டுத் தொழுவத்தின் தரை வழுக்குமாறு இருக்கக் கூடாது
- சரியான கருத்தரித்த தேதி அட்டவணைகள் பராமரித்து வந்தால் அதன் மூலம் கன்று ஈனும் தேதியை கணித்து சில வாரங்களுக்கு முன்னதாகவே தனி தொழுவத்தில் நல்ல படுக்கை வசதியுடன் பாதுகாக்க வேண்டும்
- கடைசி 8 வார சினைதருணத்தில் மேலும் 1கி.கி அடர்தீவனமும், கோதுமைத்தகடு, கடலைப் புண்ணாக்கு போன்ற தீவனங்களை கன்று ஈன்ற 5 நாட்களுக்குப் பின்பும் தருதல் வேண்டும்
- சினை மாதம் முதலில் வயிறு புடைத்தல், மடி பெருத்தல் போன்ற அறிகுறிகளை கவனித்து தேவைப்படின் கால்நடை உதவிகளை அளிக்கலாம்
- கன்று வெளிவந்த 2-4 மணி நேரங்களில் நஞ்சு வெளிவந்து விடும். அதை கவனித்து அப்புறப்படுத்த வேண்டும்
- கால்சியம் போன்ற தாதுக்களை அளித்து கன்று ஈனும் முன்பு வரும் பால் காய்ச்சலைத் தவிர்க்கலாம்
- சில நேரங்களில் கன்று ஈனும் முன்பு, மடி வீங்கிவிடும் சிறிது பாலை கறந்து விட்டால் சரியாகிவிடும்
- கருச்சிதைவை தடுக்க அனைத்து பராமரிப்புகளையும் முறையாக மேற்கொள்ளுதல் முக்கியம் ஆகும்
காளை மாடுகளின் பராமரிப்பு
ஒரு வெற்றிகரமான இனவிருத்திக்கு காளைகளைச் சரியாகப் பராமரித்துத் தகுந்த ஊட்டமளிக்க வேண்டும். அதுவும் காளைகளை இனவிருத்திக்காகப் பராமரிக்கும் போது
- பால் உற்பத்தி மற்றும் மூதாதையரின் உற்பத்தித் திறன்
- உடலியல் மற்றும் உடற்கூறு தோற்றம் முதலியவற்றைக் கருத்தில் கொள்ள வேண்டும்
ஒரு வருட வயதிலேயே காளைக் கன்றுகளை மற்ற கன்றிலிருந்து பிரித்து நல்ல புரோட்டீன் தாதுக்கள் மற்றும் விட்டமின்கள் கொண்ட தீவனங்களை சரியான அளவில் அளித்து வரவேண்டும்
இனவிருத்திக் காளைகள் மிகவும் அதிக எடையுடன் இருந்தால் அது சிறந்த விந்துக்களை உற்பத்தி செய்யாது. பெரிய தலையுடன் திடகாத்திரமான உடம்புடன் பரந்த மார்பு இருக்க வேண்டும். மாடுகளில் காளைகள் 16 முதல் 18 வயதில் பருவம் அடையும் காளைகள் எருமைமாடுகளில் 4 முதல் 6 மாதங்கள் காலதாமதமாகவே பருவமெய்துகின்றன. கதளையின் எடை 300 கிலோவிற்கு இருக்க வேண்டும். 30 மாத வயதில் விந்து உற்பத்தி நன்கு வெளிப்படும். அதிகபட்சம் 3 வருடங்கள் விந்துசேகரிக்கலாம். எருமைகளுக்கு 31/2 வருடங்கள் ஆகும். நாளொன்றுக்கு இருமுறை கலப்பு செய்யலாம்.
விந்து சேகரிப்பு செய்வதனால் வாரம் இருமுறை என ஆண்டுக்கு 100 முறை தரமான வித்து சேகரிக்கலாம். காளைகளுக்கு நோய்கள் ஏற்படாவண்ணம் பராமரித்தல் அவசியம்.
எருதுகளின் பராமரிப்பு
எருதுகள் என்பவை பொதுவாக வேளாண் தொழிலில் வேளைத் திறனுக்காகப் பயன்படுத்தப்படுபவை. அவற்றை நல்ல திடகாத்திரத்துடன் வளர்த்தல் அவசியம். எருதுகளின் வேலை நேரங்கள்
சாதாரண நிலையில் - 6 மணிநேரம் வண்டி இழுத்தல் 4 மணி நேர ஏர் ஓட்டுதல்
பலமான எருதுகள் - 8 மணிநேரம் வண்டி இழுத்தல் 6 மணி நேர உழவு
எருதுகளுக்கு 8-12 மாதத்தில் மூக்கு வளையம் அணிவிக்க வேண்டும். 2-21/2 அங்குலம் கொண்ட வளையம் போதுமானது. மேலும் வயது ஆக ஆக பெரிய வளையத்தை உபயோகித்துக் கொள்ளலாம். மூக்கு வளையம் அணிவிக்கும் போது நோய்த்தொற்றைத் தவிர்த்துப் புண்களை ஆற்ற டிஞ்சர், அயோடின் உபயோகிக்கலாம் . அதிகம் வளர்ந்த குளம்புகளை நீக்கிச் சீர் செய்ய வேண்டும். நன்கு பராமரிக்கப்படாத குளம்புகள் வலியை ஏற்படுத்தும்.
எருதுகளை தனித் தொழுவத்தில் போதுமான இட வசதியுடன் சுதந்திரமாக வளர்க்க வேண்டும் நல்ல தண்ணீர், 2 கி.கி அடர் தீவனம் போன்றவை வேளைநேர இடைவெளியில் அளிக்கலாம்.
(ஆதாரம்: http://bieap.gov.in/DairyAnimalManagementTheory.pdf)
|