animal husbandry
கால்நடை பராமரிப்பு :: கருவிகள் மற்றும் இயந்திரங்கள் முதல் பக்கம்

கருவிகள் : அடைகாப்பான் உபகரணங்கள்

1. கரி அடுப்பு / மண்ணெய் அடுப்பு

  • இவ்வகையான அடுப்புகள் மின்சாரம் இல்லாத இடங்கள் அல்லது மின்சாரம் விலை அதிகமாக இருக்கும் இடங்களிலும், மின்சாரம் தட்டுபாடு உள்ள இடங்களிலும் பயன்படுத்தபடுகின்றன.
  • இவ்வகையான அடுப்புகளில் தட்டுகள் மற்றும் குழி போன்ற அமைப்புகள் உள்ளதால், அது வெப்பத்தை ரொம்ப நேரம் இருக்குமாறு செய்கிறது.

2. எரிவாயு அடைக்காப்பான்

  • இயற்கை எரிவாயு அல்லது திரவ பெட்ரோலிய வாயு அல்லது மீத்தேன் ஆகியவற்றின் மூலம் சூடாக்கும் கம்பி வெப்படுத்தபட்டு சுமார் 3 – 5 அடி குஞ்சுகளுக்கு மேலே அமைக்கப்படுகிறது.
  • இவ்வகை அடுப்புகளில் பிரதிபலிப்பான்கள் அமைக்கப்பட்டு வெப்பத்தை குஞ்சுகளை நோக்கி எதிரொலிக்கப்படுகிறது.

3. மின்சார அடைக்காப்பான்கள்

  • இந்த அமைப்பில் சீரான ஒரே அளவு வெப்பம் பெரிய அளவு இடத்திற்கு இருக்குமாறு அமைக்கப்படுகிறது. இதனால் குஞ்சுகள் அடைக்காப்பானில் ஒரே இடத்தில் அடைவது தடுக்கப்படுகிறது.
  • ஒரு மின்சார அடைக்காப்பானை கொண்டு 300 முதல் 400 இளங்குஞ்சுகளை வளர்த்தலாம்.

4. அகச்சிவப்பு விளக்குகள்

  • இது அதே எதிரொலிக்கும் தன்மை கொண்டுள்ளதால் தனியாக எதிரொலிப்பான்கள் தேவைப்படாது.
  • 150 வாட் பல்புகள் 250 குஞ்சுகளுக்கும் 250 வாட் பல்புகள் 250 குஞ்சுகளுக்கும் தேவையான வெப்பத்தை அளிக்ககூடியது.

5. எதிரொலிப்பான்கள் அல்லது ஹொவர்கள்

  •  இவ்வகை எதிரொலிப்பான்கள் ஹொவர்கள் என அழைக்கப்படுகிறது.
  • இவை வெப்பத்தையும் ஒளியையும் எதிரொலிக்ககூடியது.

i).தட்டையான ஹொவர்கள்

  • இவ்வகை தட்டையானது .இதில் சூடாகும் கம்பிகள், சூடேற்றும் அமைப்புகள் மற்றும் தலைமை விளக்கு ஆகியவை உள்ளன. சிலவற்றில் வெப்பத்தை அளவிட வெப்பமானிகள் அமைக்கப்பட்டிருக்கும்.
  • இவை கூரையிலிருந்து தொங்கவிடமால், நான்கு மூலைகளில் அமைக்கப்பட்ட தூண்கள் மூலம் நிற்க வைக்கப்படுகிறது.

ii).குழி வடிவான ஹொவர்

  • இதில் குழிவடிவான அமைப்பில் சதாரண மின்சார விளக்கும்,  வெப்ப நிலைப்படுத்தியும் , சில இடங்ளில் வெப்பமானியும் அமைக்கப்பட்டிருக்கும்.
 

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2009-15